Anandha Barathi
சன்மார்க்கத் தாலாட்டு - MP3 Song
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

சன்மார்க்கத் தாலாட்டு:

"பாடகக்கால் மடைந்தயரும் மைந்தரும்" சன்மார்க்கப் பயன்பெற வேண்டும் என வள்ளல் பெருமான் அருளியுள்ளார்கள், அதற்கேற்ப குழந்தைகளுக்கு தாலாட்டிலும் சன்மார்க்க கருத்துக்களைக் கூறும் சிறு முயற்சியே இந்தச் சன்மார்க்க தாலாட்டு, அன்பர்கள் இதைக்கேட்டு தங்களுக்கு குழந்தைகளுக்கும் பாடி பயன்பெற வேண்டுகின்றோம்.

பாடல் வரிகள்: திரு. ஆனந்த பாரதி
பாடியவர் : திருமதி. தனலட்சுமி

நன்றி.



சன்மார்க்கத் தாலாட்டு

பல்லவி:

ஆராரோ ஆரிரரோ ஆஆஆராரோ ஆரிரரோ,
ஆராரோ ஆரிரரோ ஆஆஆராரோ ஆரிரரோ,
ஆராரோ ஆரிரரோ ஆஆஆராரோ ஆரிரரோ,
ஆராரோ ஆரிரரோ ஆஆஆராரோ ஆரிரரோ.

சரணம்:

அருட்ஜோதி ஆண்டவனார்
அருளாளே பெற்றெடுத்த
அன்பான ஆரமுதே
அயர்ந்து நீ கண்ணுறங்கு (1)

ஆலமரம் போல
ஆன்றோர்கள் வாழ்த்திடவே
சீலமிகு சிவத்தை
சிந்தைச் செய்து கண்ணுறங்கு (2)

இறவாவரம் அளிக்கும்
எங்கள் அருட்பிரகாசர்
அருளை நீஉணர்ந்து
ஆனந்தமாய் கண்ணுறங்கு (3)

ஈன்ற நற்றாயினும்
இனிய பெருந்தயவாம்
அன்னை அவளருளாள்
அமைதியாய் கண்ணுறங்கு (4)

உயிரோடு உடம்புலமும்
உத்தமன் தன் திருவடியை
என்றும் நீ நினைந்து
எழிலாகக் கண்ணுறங்கு (5)

ஊண்கொண்ட தேகத்தோர்
ஒருவரும் பசியினால்
வாடாதவகை செய்யும்
வழிஅறிய கண்ணுறங்கு (6)

எல்லா உயிர்களும்
இன்புற்று தான்வாழ
என்றும் வழிபட்டு
இறையருளால் கண்ணுறங்கு (7)

ஏழுலுகும் தாமாகி
இருக்கும் இராமலிங்கர்
பொன்னான நல்லருளால்
பூத்தாய் நீகண்ணுறங்கு (8)

ஐயமும் திரிபும்
அகற்றிடும் அருட்பாவின்
அமுதமொழி அறிந்து
அழகாய் நீ கண்ணுறங்கு (9)

ஒளியின் வடிவினால்
உண்மை நெறிகாட்டும்
ஞானசபை தன்னை
நண்ணி நீகண்ணுறங்கு (10)

ஓவாத அன்பினால்
உயிர்களுக்கு பசிணீக்கும்
மூவாத சாலையை
முழுதுணர்ந்து கண்ணுறங்கு (11)

ஔஷதம் இல்லாமல்
ஆயிரம் பிறப்பருக்கும்
சித்திவளாகத்தின்
சிறப்பறிந்து கண்ணுறங்கு (12)

திருநிலை என்னுமோர்
சுத்த சன்மார்க்கத்தின்
பெருநிலை நீஅடைய
பெரும்பிள்ளாய் கண்ணுறங்கு (13)

 

Sanmarkka Thalaattu.jpg

Sanmarkka Thalaattu.jpg

Audio:

Hariharan Elumalai
அற்புதம் அற்புதம்!!!. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். பச்சிளங் குழந்தைகளைத் தாலாட்டி பசுமரத்தாணி அறைந்தாற் போல் சன்மார்க்கத்தை பிஞ்சுள்ளங்களில் பதிய வைக்கலாம்.
Sunday, October 7, 2018 at 01:09 am by Hariharan Elumalai