Anandha Barathi
வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டர் "பிறையாறு சிதம்பரம் சாமிகள்" அதிட்டான தயா நிலையத்தின் புதுப்பித்தல் - 2020
தீர்மானம் எண்: 77/20 நாள்: 16/10/2020.

நிறைவேற்றப்பட்டுள்ளது தீர்மானத்தின் நகல்:

மேலும் சுமார் 2800 சதுர அடி பரப்பில் இந்த தயா நிலையம் அமைய இருப்பதால் அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இணையதள கணினி வசதியுடன் கூடிய கல்வி மையம்.

15 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சித்த மருத்துவ முகாம் இலவச மருந்துகளுடன் நடத்த திருவருள் சம்மதத்துடன் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக இருந்த திரு எஸ் எம்பிமணிவாசகம் நம் திருப்பணி குழுவில் இருப்பதால் உடனடியாக நவம்பர் மாத இறுதியில் மருத்துவ பணி துவங்க இருக்கிறது மேலும் ஆங்கில மருத்துவர் ஒருவரை அணுகி ஆங்கில மருத்துவ முகாமும் நடத்த திருவருள் முன் விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

அமெரிக்கா ராமலிங்கம் அய்யா அருட் கஞ்சி திட்டத்தில் இந்த நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது எனவே ஆதரவற்ற முதியவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தயா நிலையம் சன்மார்க்க வழிபாட்டு நிலையமாக இருப்பது மட்டுமல்லாமல் தர்மசாலை ஆகவும் மருத்துவ சாலை ஆகவும்,

உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அளவில் இன்றைய கல்வித் தேவையை நிறைவேற்றும் கல்விச்சாலை ஆகவும் செயல்படும்.

டிசம்பர் 15ஆம் தேதி வாக்கில் பணிகள் துவங்க உள்ளன.

நன்றி

Page_2.jpg

Page_2.jpg

Page_1.jpg

Page_1.jpg