DAEIOU - தயவு
மேட்டுக் குப்பம் தீஞ்சுவை நீரோடையில் ஜீவகாருண்யப் பணி நிமித்தம் நிதி கோரல்.
தீஞ்சுவை நீரோடை எதிரில் திரு நந்தி சரவணன் அவர்கள், பல ஆண்டுகளாக, தர்மசாலை நடத்தி, வருவோர் போவோர்க்கெல்லாம் 3 வேளைகளும் உணவு வினியோகம் செய்து வருகின்றார். கொரோனா துவங்கிய நாள் முதல், அண்டையிலுள்ள குடியிருப்பில் அனாதரவாக உள்ளவர்கள், பாண்டிச்சேரி, வடலூர், கருங்குழி, மற்றும் பல ஊர்களுக்கு, மூன்று வேளைகளும் உணவு தயார் செய்து பொட்டலமாக தொடர்ந்து வினியோகம் செய்து வருகின்றார். வழக்கமாக, சாதாரண நாட்களில் வருவோர் போவோர் மற்றும் மேட்டுக் குப்பம் சித்தி வளாகத்துக்கு வரும் பக்தர்கள், உணவருந்தி விட்டு, தம்மால் இயன்ற வரையில் அன்னதான் செலவுக்கு, அன்பளிப்பு அளித்து வந்தனர். மற்றும் பலர், வரும்போதே, அரிசி, காய்கறி முதலானவற்றை இங்கு வந்து சேர்த்து, புண்ணியம் செய்தனர். ஆனால், கொரோனா ஆரம்பித்ததிலிருந்து, பஸ் போக்குவரத்து இல்லாததாலும், ஊரடங்கு அவ்வப்pபோது அரசால் அறிவிக்கப்பட்டதாலும், பக்தர்கள் வரத்து அடியோடு நின்று விட்டது. இவரது இந்த ஜீவகாருண்ய அன்னதானப்பணி, கடந்த மாதம், லண்டன் பி.பி.சி.யில் வெளிவந்தது. 

ஆனால், உணவு வினியோகம் தடையறாது. தொடர்ச்சியாக, கடந்த மூன்றரை மாதங்களாக, அனைத்து இடங்களுக்கும், சென்று, திரு நந்தி சரவணன், தமது அன்பர்கள் சகிதம் உணவளித்து வருகின்றார். ஓரளவு அரிசி, காய்கறி ஆகியவை வந்து சேர்ந்தாலும், மளிகைச் சாமான்கள், பால், வேன் செலவு, பெட்ரோ, டீசல்..இது போன்று மற்ற.. ஏனைய செலவுகளுக்கு, சமாளிக்க முடியாத அளவுக்கு அவர் நிதியின்றி, மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றார். இந்த நேரத்தில், அவருக்கு உதவி செய்வோர், அவரை நேரடியாக தொடர்பு கொண்டு, எந்த வகையான உதவி தேவைப்படுகின்றது என்பதை அறிந்து, நிதியாக அளித்து, ஜீவகாருண்யப் பணி தொடர உத வேண்டப்படுகின்றது.

திரு நந்தி சரவணன் தொடர்பு மொபைல் எண்.

94423 27059, 98426 79999.

IMG_20150909_102828.jpg

IMG_20150909_102828.jpg