Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
 
உரை விளக்கம்
(முதல் பாகம்)
 
தயவு
 
அருட்பெருஞ்ஜோதி அகவல் 6 ஆம் பதிப்பு
 
உரைக்கு அனுபவ விளக்க உரை
 
(முதலில் இதை படித்துக் கொள்ளவும்)
 
திருவருட்பிரகாச வள்ளற் பெருமானின் அகவல் பெருமை கற்று உளம் கொண்டு எல்லோரும் அழியா இன்ப வாழ்வில் தழைத்து ஓங்கச் செய்வதாகும். ஆகையால் அதன் சொற்பொருள் மட்டும் அறிந்து கொண்டால் போதாது. அது உபாயப் பொருள், உண்மைப் பொருள்களுக்கு மேல் வள்ளற் பெருமானின் அனுபவத்தையே நமக்கு உணர்த்தி அகங்கொண்டு வாழ்வில் ஏற்று இன்ப வாழ்வில் நம்மைத் தழைத்து ஓங்கச் செய்வதாய் உள்ளதால் இறை அருள் நிறை நிலை நின்று தெளிந்து அதனோடு ஒன்றி மறவாது இருந்து கொண்டு தினவாழ்வில் விளங்க வேண்டியுள்ளது.
 
அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மையே அகண்ட பெருவெளிமுற்றும் சதா நிறைந்து கொண்டே ஒவ்வொருவரின் உள்ளும் அனுபவத்தின் பொருட்டும் மெய்யறிவிலும் நிறைந்து, உயிரினும், உணர்விலும் பிரியாமல் இருந்து தோன்றி மனத்தில் அறியப்பட்டு, அருளால் மறவாது விளங்கிக் கொண்டு இருப்பதாம். இந்தக் கருத்தை அவர் கூறும் விளக்கம்:
 
“ஜோதி ஜோதி ஜோதி சுயம் என்றும்
ஜோதி ஜோதி ஜோதி பரம் என்றும்
ஜோதி ஜோதி ஜோதி அருள்” என்கின்றார்.
 
அதாவது சுயம் பிரகாச அகல்வான் வெளியில் உள்ள ஒன்று நமது தலை நடுவிடத்தே பகர வடிவத்தே தான், பரஞ்ஜோதி, தீபம் போல் இருப்பதாயுள்ளது இது மெய்யறிவுத் தீபம் போல் அறிஞர்கள் உள்ளத்தில் தோன்றும்படி உள்ளது. புலனறிவு மனோ அறிவு கடந்த பக்குவர்களுக்கே இது விளங்கும். இது தான் பரஞ்ஜோதி எனப்பட்டுள்ளது. இதனை நினைத்த போது தோன்றுவதும், “நினையாத போது மறைந்து விடுவதும், மறுபடியும் நினைத்த போது தோன்றுவதும் ஆக இருக்கிறது. ஆனால் அதனையே நினைத்து நினைத்து மறந்து மறந்து போகாமல், அதுவே நிலைகொள்ளும் போது, அது அழியாத நிலைத்து நிற்கும் நிலையே அருள் உணர்நிலையாகும். அதுதான் அருள் நிலையாகும். இதுதான் ஜோதி ஜோதி ஜோதி அருள் என்று கூறப்படும். இதுதான், பரஞ்ஜோதியே அருட்ஜோதியாகி நிலை கொள்கிறதாம். இதுதான், மூன்று பெருஞ்ஜோதியான ஒன்று புறத்து உள்ளதே புறத்து நிறைந்த ஒன்றான அருட்பெருஞ் ஜோதியே நம் உள் மூன்று ஆக உள்ள ஒன்றே நம் உள் முத்தேகத்து நிறையும் மும் மூன்றாக உள்ளதைத் தெரிவிக்கும்.
 
இது தான் ஏகமாக வெளிநிறைந்துள்ள ஜோதியே நமது அனுபவத்தின் பொருட்டு மூன்றாகப் பிரிந்து, தோன்றி மூன்றும் ஆக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி உண்மை. ஆகவே ஒன்றான சுயஞ் ஜோதியே, நம்மில் அனுபவத்திற்காக மூன்றாக அருட்பெருஞ் ஜோதியாகத் திகழ்கின்றதாம்.
 
இவையே இயல்பாக உள்ள அருட்ஜோதி, நம் மூன்றாக விளங்கும் அருட்ஜோதி அனுபவ உண்மை. இந்த அருட்பெருஞ்ஜோதியை அகத்தில் கண்டு நிற்கும் போது, அதுவே சிவமாகி எல்லாத் தெய்வ உண்மையாயும் எல்லாத் தெய்வகற்பனா மனித உண்மையாகவும் கொண்டார் நம்பெருமான்.
 
இவை எல்லாம் தெரிந்து கொண்டால்தான், சுவாமி இராமலிங்கத்தின் உண்மையும், நம் ஒவ்வொருவரின் உண்மையும் அறிந்து அகத்தே அகநிலையிற் பொருந்தி நிற்கலாம். இப்படி அகத்தில், அருட்பெருஞ்ஜோதி ஆக உள்நின்று விளக்குகின்றார் அவர். அப்படி நாமும் அந்த அருட்பெருஞ்ஜோதியாக உள்ளிருந்து வாழவேண்டியது நம் கடமை ஆகும்.
 
இந்த அகப்புற அருட்பெருஞ்ஜோதி உண்மை கொண்டு பாடப்பட்டதே, இந்த அருட் கடவுள் பெருஞ் செய்யுள். இப்படி புறம் நிறைந்த அருட்பெருஞ்ஜோதி, அகத்தில் மூன்றாகிய கடவுள் அனுபவம் தான் அகவல் அனுபவப்பொருள். அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மையை செய்யுளாக வெளியிடப்பட்ட அகவல் இதுவாகும். இதுதான் சத்விசாரம். இந்த உண்மையைக் கண்டு ஒருமையோடு அருட்பெருஞ்ஜோதி அகத்திலே தெளிந்து ஒன்றான கடவுள்தான், புறத்தில் ஒன்றாக நிறைபெரும் வான் வெளியில் நீக்கமற எக்காலும் நிறைந்துள்ளது. அது ஒன்றே நமது தலைநடு மூளை நடுப் பகர வடிவ மெய்ஞ்ஞானக் குழியில் பரஞ்ஜோதியாக எல்லோர் உள்ளும் நமது கருவிலே முதல் முதலிலேயே ஆண்டவர் படைப்பில் அமைந்துள்ளதை உணர்ந்து அதனைப் பரஞ்ஜோதி ஆகத் தெரிந்து கொள்வது முதற்கடமை. இதனை யாவரும் அறிந்துகொள்ளவேண்டும். உடற்கூற்றிலே, தலையிடத்தே உள்ள Brain என்னும் மூளைப் பகுதியில் பெருமூளை என்பது Cerebrum என்று இரு பகுதிகள் கொண்ட முன் மூளையாகவும், பின் மூளை என்ற சிறுமூளையின் Cerebellum என்றும் அழைக்கப்படும். பெருமூளையின் இரு பகுதியை முன்பிருந்து பின்பக்கமாக இணைப்பது Corpus callosum என்பது இதற்கு கீழ் புறமாக உள்ளது நடுமூளை என்னும் முகுளம் இது Medulla Oblongata என்று அழைக்கப்படும். இதற்கு மிகவும் சமீபமாக Pitutary Gland என்ற The Master Gland for all Ductless Glands என்ற நாளமில்லா சுரப்பி பிட்யூட்டரி போசா (Pitutary Fossa) என்ற பகர வடிவ பீடத்தின் மேல் விளங்கி நிற்கின்றது. இதனை ஒட்டினார் போல் Pineal Body என்ற மிகச் சிறிய உறுப்பு உள்ளது. இந்த பிட்யூட்டரி; பீனியல் பாடி என்கின்ற பகுதியில் இருந்துதான் அதிமுக்கிய ஆற்றல் கொண்ட உணர்வு நாடிகள் தோன்றி அதிரகசிய ஆற்றலை எல்லாம் உணர்த்தப் பெறுகின்றோம். உயர் ஞானமும் வெளிப்படுவதும் இங்கிருந்து தான். இதனையே ஆன்மக்கடவுள் அறிவாகப் பெறுகின்றனர் இறை ஞானியர்கள். இந்த உணர்வைக் கொண்டு இறை அனுபவிகள் தயாஞான மெய்ப்பொருளைக் கண்டுள்ளனர். கொலைபுலை அனுபவித்தவர்களுக்கு இந்த உணர்வு உண்டாகாது. மன ஓர்மையும் தீவிர மெய்யறிவும் படைத்த அருளாளர்களே மெய்ப்பொருளை, அருளாளர்கள், பிறர்தெரிந்து கொள்ளாத தெய்வ உணர்வால் இறை உண்மையை அறிந்து அருளியுள்ளனர். இந்த இடத்தில் தான் அருட்பெருஞ்ஜோதியின் நிறை சுயஞ்ஜோதியின் உண்மையையும் அகத்திலே கடவுட் பரஞ்ஜோதியின் உண்மையையும் அதன் முகத்தேகத் தொடர்பும் பற்றி நம் வள்ளற் பெருமான் அனுபவத்தில் கண்டுரைத்துள்ளார். இதனையே ஜோதி ஜோதி ஜோதி பரம் என்றார். இந்த பரஞ்ஜோதி பரம்பொருளை, அவரே கண்டுணர்கின்றார். மற்றவர்கள் இந்த பரஞ்ஜோதியை நினைவாற்கண்டும், மறந்து போவர். ஆனால், இந்த நிலை மறவா நிறுத்திக் கொள்ளத் திருவருள் பெற்று இருப்பவர்கள்தான், இதனை அருட்பெருஞ்ஜோதியாகக் காண்பர். இதனையே அகம் கண்டு கொண்ட அருட்பெருஞ்ஜோதியின் அனுபவ நிலையாகும். இதுவே புறவான்வெளிநிறை அருட்பெருஞ்ஜோதி எனவும், அக உண்மை அருட்ஜோதி உண்மையாகவும் அறியலாகும். இந்த அகஜோதியில் நின்றவர் நம் பெருமான். இந்நிலையில் பொருந்தி, அதுவாக இருந்து கொண்டுதான் அக மெய் ஒளியைத் தலைநடு திகழும் அருட் பெருஞ்ஜோதி உண்மையை அருட்பெருஞ்ஜோதி என்கின்றார். இந்த அகமெய்ந் நிலையை இரு கண் புருவ நடுநின்று தான், அதன் உண்மை எல்லாம் அருள் உணர்வால் நினைந்து நினைந்து வெளிப்பட வெளிப்பட அகவல் உருவாக வரைந்துள்ளார். அப்படி கண்ட மெய்ப்பொருள் இந்த அகவலின் தொடக்கமாகவே முதலில், நான்கு முறை அருட்பெருஞ்ஜோதியாக வரைந்த போது, அகநிறை பரம்பொருளின் உண்மையும் அதனைத் தொடர்ந்து மும்முறை அக அனுபவத்தின் உண்மையாகவும் கொண்டார். அது, தூல, சூக்கும, காரண தேகத்தில் விளங்குவனவேயாம். மேல்வரும் தொடர்வரி கடவுளின் கற்பனா விளக்கங்களை “அருட்சிவ நெறிசார் எனத் தொடர்ந்து தெய்வத் தமிழின் உயிர் வர்க்கப் பாடல்களாக எல்லாம் வந்துகொண்டேயுள்ளன. அதைத் தொடர்ந்து வந்துகொண்டேயுள்ளது, அருள் ஆண்டவரின் விளக்கம் எல்லாம் முன் பதிப்புகளில் அருட்தெளிவோடு விரிவுரை வரைந்து அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் ஆண்டவரின் இயல் செயல் விரிவுகள் காண உள்ளன. அதன் இரண்டு இரண்டு அடிகளில் அருட்பெருஞ்ஜோதி என்று உரைத்து கொண்டே வந்து, பின் எல்லாம் தன் அனுபவமாக கூறியுள்ளதைக் காணலாம். பிற்பகுதியில் அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மை அகம் புறம் எனப் பிரித்துப்பாராது உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டி அபயம் அளித்ததாகவும், சத்திய ஞான சபையின் உள்வளர் ஜோதியே தன்னை ஆட்கொண்டு வாழ்வித்ததாகவும் உரைத்துள்ளார். முடிவில் தன்னையே அந்த இறைநிலையில் வைத்துக் கொண்டு, வாழ்வித்து அருள் வாழ்வில் ஏற்றி, விளங்கச் செய்து விட்டதாகவும் போற்றிப் போற்றி உள் நிறைவோடு பெரு நன்றியோடு நின்று கடைசியில் அந்த அருட்பெருஞ்ஜோதியையே நான்கு முறை போற்றி நிறுத்துகின்றார். அதாவது அருட்பெருஞ்ஜோதியையே தன்னில் விளங்குவதாக கூறியுள்ளார்.
 
இந்த அகவல் அருட்பெருஞ்ஜோதியை ஒவ்வொரு வரும் அனுபவத்தில் பெற்றுக்கொண்டு நித்தியமாகத் திகழ்ந்து கொண்டே விளங்கவேண்டும் என்பதே. அப்படி விளங்கத் தயவை அகம் ஏற்று தயவு வண்ணமாக உலகில் பேரின்ப வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்பதே இதன் அனுபவ வாழ்வு நிலை ஆகும்.
 
அருட்பெருஞ்ஜோதி இந்நிலை தயவு ஒன்றினால் தான் எல்லோருக்கும் நித்திய அனுபவம்.
 
தயவுசத்தியஞானகோட்டம்,
திண்டுக்கல்.
03. 01. 2004
இவண்,
ஆசிரியர்
சரவணானந்தா
 
 
தயவு
 
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்
 
(ஐந்தாம் பதிப்பு)
 
முகவுரை
 
இது இச்சந்தர்ப்பத்தில் வெளி வருகின்றது மிகப் பொருத்தமானது. இப்போது உலக சன்மார்க்க மகாநாட்டில், திருஅருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் மூலம் வெளியிடப் பெறுகின்றது. “உலகெலாம் பரவென் னுள்ளத் திருத்தே அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி” என்று வள்ளற்பெருமான் போற்றியுள்ளார்.
 
ஆம். அருட்பெருஞ்ஜோதியே ஒவ்வொருவரின் அக நின்று அனகமாக பரவிப் பணிந்தேற்று, தயவுடன் வாழ்ந்தின்புற உள்ளது. நாம் ஓர்மைத் தியானத்தால் கண்டு ஒன்றி இருந்து கொண்டு, எல்லோரும் அன்போடு ஒத்து வாழ்ந்து தயா ஒருமையோடு வாழ்வதால், உலகில் நிறை இன்பில் வாழ்ந்திடலாம்.
 
முன் இருந்ததைவிட, விலைவாசி மிக அதிகரித்துள்ளது எனினும், அன்பர்களின் அன்பளிப்பு உதவியால் பழைய விலையை விட சிறிது குறைத்தே வழங்குகின்றோம். அதாவது, இரண்டு பகுதிகளும் ரூ.250/-க்கு பதிலாக ரூ.150/-க்கு தருகின்றோம். அதுவும் வெளியீட்டு விழாவில் ரூ.125/- என்றே வழங்குகின்றோம்.
 
இதில் அருட்செல்வர் அவர்களின் ஆய்வு அணிந்துரை ஒன்றும் முதலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அகவல் உரை நூல் அறிவுக்கும் மனோ நுண்ணறிவுக்கும் மேற்பட்ட அக அருள் ஞான விளக்கமே அதிகம் காணலாம். உலக மக்கள் சமுதாயம் முழுமையும் அறிந்தேற்று ஒத்து வாழும் வழிகண்டு, உளம் கொண்டு எல்லோரும் ஒத்து இன்பில் காணவும், வாழ்ந்து கொண்டிருக்கவும் திருவருள் உதவுவதாக, உலகம் தழைத்து ஓங்கும் இனிமேல்.
 
இவண்,
ஆசிரியர் சரவணானந்தா.
 
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
 
 
அணிந்துரை
 
வள்ளற் பெருமானால் அருளப்பெற்ற திருவருட்பாவின் மணிமுடியாக விளங்குவது அருட்பெருஞ்ஜோதி அகவல். இதற்கு அவரே தலைப்பிட்டுள்ளார். 1872ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினெட்டாம் நாள் இதனை இயற்றி அருளியுள்ளார்.
 
பெரிய தயவு உடைய அறிவே பூரண இன்பமாக, இறைவனாக இருப்பதனை விளக்குவதே இந்த அகவல்.
 
இறைநிலையே அருட்பெருஞ்ஜோதியாக உள்ள உண்மையை உணர்ந்து கொண்டு நாமே அதுவாக இருப்பதனைப் புரிந்துகொள்ள உதவுவதே இப்பெருநூல்.
 
கடவுளின் நிறையுண்மை அருட்பெருஞ்ஜோதியாகத் தான் இருக்கின்றது. கடவுளின் அடியும், நடுவும், முடியும் அருட்பெருஞ்ஜோதி தான் என்று தெளிவு படுத்துவது அகவல்.
 
இந்த அகவலில் 1596 வரிகள் உள்ளன. இந்த அரிய நூலுக்கு உரைகாண வேண்டும் என்று பலரை வேண்டினேன். யாரும் முன்வரவில்லை. எதிர்பாராமல் அன்பர் ஒருவரின் மூலம் திண்டுக்கல் தவத்திரு சரவணானந்தரைத் தரிசிக்கும் பேறு பெற்றேன். அவரிடமும் இந்த என் வேட்கையை வெளிப்படுத்தினேன். அவரோ பதில் ஒன்றும் சொல்லாது அமைதியாக அறைக்குள் சென்று நான்கு பெரிய நோட்டுப் புத்தகங்களை அளித்தார். அவைதான் இந்த உரை.
 
அதனை நான் பெரிதும் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்று இராமலிங்கர் பணிமன்றத்தின் மூலம் வெளியிட்டு மகிழ்ந்தேன். வள்ளலார் சித்திபெற்ற நூற்றாண்டு விழாவன்று அம் முதற்பதிப்பு வெளியாயிற்று.
 
இப்போது சுவாமி சரவணானந்தா தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை அதன் ஐந்தாவது பதிப்பை வெளியிடுவது மகிழ்ச்சிக்கு உரியது.
 
சுவாமிகளின் உரை அனுபவ உரை. சுவாமிகள் 1596 வரிகளையும் 231 தலைப்புகளாகப் பிரித்து உரை கண்டுள்ளார்கள்.
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
 
என்பது அகவலின் தொடக்க வரிகள்.
 
அருட்பெருஞ்ஜோதி என்ற தொடர் நான்குமுறை கூறப்படுவதன் உட்பொருளை சுவாமிகள் விளக்குவது சிறப்பாக உள்ளது.
 
புறத்தே, நான்கு நிலைகளில் உள்ள ஜோதி, புலன்களுக்குப் புலப்படுகிறது. விளக்கின் ஒளி, நிலவின் ஒளி, ஞாயிற்றின் ஒளி, அக்கினி ஒளி என்பன அவை. அகத்தே, நான்கு நிலைகளாக ஒளி விளங்குகின்றது. அவை இந்திரிய ஒளிநிலை, மனோகரண ஒளி நிலை, ஜீவ உணர்வு ஒளிநிலை, ஆன்ம ஞான ஒளி நிலை என்பன.
 
புறங்காணார் அகம் காணார் என்றபடி, காணப்படும் புறநிலைகளை ஊன்றிக் கவனிப்பார், அவற்றின் மூலம் அகஉணர்வு உண்மைகளை உணர்ந்து உயர முடியும். இந்த உண்மையை உணரும் வகையில், அருட்பெருஞ்ஜோதி என நான்கு முறை கூறி அகவலைத் தொடங்குகின்றார் என்று உணர வைக்கும் இவரின் உரை போற்றத் தக்கதாக உள்ளது.
 
“இம் மனித உடலில் அருட்பெருஞ்ஜோதி இறையொளி முழுமையாக, சிரநடுவுள் நிராதார நிலையில் திகழ்வது. அதுவே முழு ஆதாரமாய் உள்ளது”. (அகவல் உரை பக்கம் 24) என்பது ஆழ்ந்த பொருள் உடையது. அதனை உணர்ந்து உயர வழிகாட்டுவதே இந்த அகவல். அகவலின் 27வது வரிமுதல் 52வது வரிவரை பல்வேறு வெளிகளைப் பற்றி வள்ளலார் குறிப்பிடுகிறார். அவற்றிற்கு சுவாமிகள் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது பாராட்டத்தக்கது.
 
“அருள் விளக்கு ஒன்றே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்விளக்கின் செயலாக, அவ்வொளிதானே, சூழ் உயிராய், உணர்வாய், உடலாய், மேலும் உலகம் எல்லாமாயும் விளங்கிக் கொண்டிருப்பதாக உணர்த்தப் பெறுகின்றோம். இப்போது அந்த அருள் விளக்கு மட்டும் இருக்கின்றது. அதுவே நாமாக உணர்கின்றோம். இத்தோடு மாயையாய் விளங்கிய உணர்வும் கன்மமாய் விளங்கிய உடலும் அருள் ஒளிமயமாய் இருக்கக் காண்கின்றோம். இக்காட்சி நிறை அருளால் அனுபவ நிலைக்கு வரும்போது, கன்ம உடல் சுத்த தேகமாயும், மாயா சூக்கும உடல் பிரணவ தேகமாயும், ஆன்மக் காரண உடம்பு ஞான தேகமாயும் கொண்டு விளங்குவோம்” (அகவல் உரை பக்கம் 285) என்ற சுவாமிகளின் விளக்கம் ஆழ்ந்து சிந்தித்து அனுபவிக்கத்தக்கது.
 
சுவாமிகள் “ஓர் அணு சடபூத நிலையில் உயிர் உணர்வு ஏதுமின்றிக் கிடக்கின்ற இருள்மூடிய விதைநிலை. 1. அதிலிருந்து உயிர்ச்சக்தி வெளிப்பட்டு வெளிவரும் தாவர முளை நிலை. 2. மேல் தாவர உயிராகி வளர்ந்து பயன்தரும்நிலை. 3. அத்தாவர நிலையில் விளங்கிய உயிர் உணர்வு மனிதனின் மன அறிவை வெளிப்படுத்தின நிலை. 4. அம்மன அறிவு ஆன்ம ஞானத்தை வழங்கிய நிலை. 5. ஆன்ம அறிவுக்குமேல் அருள் விளக்க நிலை. 6. இந்த அருளால்தான் கடவுள் நிலை. 7 ஆவது ஆக வெளியாம்”. (அகவல் உரை பக்கம் 488) என்று கூறுவது உயிர்ப் பரிணாமத்தை உணர்த்துவதோடு, பரிணாமத்தின் நோக்கமே உயிரின் ஆதி நிலையாம் இறை நிலையாவதே என்றும் உணர்த்துகின்றார்.
 
வள்ளலார் ஒன்பது திரைகளை குறிப்பிடுகிறார். முதல் ஏழு திரைகள் மனித வாழ்வில் ஏற்படும் அறியாமை வாசனை போன்றவற்றைக் குறிப்பிடுவன.
 
இத்திரைகளை நீக்கினாலே அதாவது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற குணங்களையும் அவற்றின் வாசனைகளையும் இல்லாமல் செய்துவிட்டால் மனிதன், மனிதன் என்ற பெயர்க்கு உரியவனாவான். முதலில் மக்கள் மனிதர்களாக வாழவேண்டும் என்பதற்காக, ஒளிதரிசனம் செய்யத் தடைகளாக இருக்கும் மேற்கூறப்பட்டனவற்றை அகற்றுதல் வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஏழுதிரைகளை வைத்தார்.
 
அதற்கு அப்பால் தத்துவத் திரைகளையும், விஷயத்திரைகளையும் அகற்றிவிட்டால்; பேரின்பப் பெருவாழ்வை அனுபவிக்கலாம் என்று வழிகாட்டுகின்றார். இவைகளைப் பற்றித் தவத்திரு சுவாமிகள் தெளிவாக விளக்கியுள்ளார்.
 
சுவாமிகள் தமது உரையில் பல இடங்களில் “அனகம்” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். அனகம் என்பது அகம் புறம் அற்ற நிலை. அதாவது புறம் என்றால் அகம் என்ற எதிர்மறை உண்டு. அனகம் என்றால் அது ஒன்றேயாக இருப்பதால் ஒப்போ எதிரோ அதற்குக் கூறமுடியாது.
 
அனகம் என்பது எல்லையில்லாதது, எங்கும் உள்ளது, எல்லாமாக இருப்பது. இந்த அனகநிலை உணர்வே உயர்ந்தது என்கின்றார். அந்நிலை அனுபவமே மனிதப் பிறவியின் நோக்கம் என்பது சுவாமிகள் உணர்த்தும் உண்மை.
 
அனக நிலை உணர்வு அருளமுதாய் இருப்பது, அருள் நிலையாய் நிலைப்பது, இன்ப நிறைவாய் விளங்குவது.
 
அனக நிலை உணர்வு பெற்றார் எல்லாரும் உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறுகளை விலக்கி மகிழ்வர்.
 
அனக நிலையாகவே விளங்குபவர் மரணமில்லாப் பெருவாழ்வில் எங்கும் நிறைந்தது நிலைத்து நிற்பர்.
 
அவர்களின் உரையின் பெருமைகளை ஒருமுறை படித்தால் உண்மையை உணர்வது அரிது. பலமுறை படித்தும் அவ்வாறு படித்தவரோடு உரையாடியும், தாமே சிந்தித்தும் செயல்பட்டால் உரையின் ஆழமும் அருமையும் விளங்கும்.
 
திருஅருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு உரைவிளக்கம் எழுதியுள்ள சுவாமி சரவணானந்தா அவர்கள் வள்ளலார் கூறி இருக்கும் கோன் கண்ட குடிநிலைக்கு உயர்ந்த உணர்வாளர், சமரச சுத்த சன்மார்க்க ஞானி.
 
அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது பெரிய பேறு. சுவாமிகளின் உரையை ஒன்றியும் உணர்ந்தும் கற்பார் அருட்பெருஞ்ஜோதியைத் தம்முள் கண்டு இன்புறுவர்.
 
சன்மார்க்க நெறியில் ஈடுபாடு கொண்டவர்கள் எல்லோரிடமும் இருக்க வேண்டிய நூல் இந்த நூல்.
 
அருட்பெருஞ்ஜோதி: அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை; அருட்பெருஞ்ஜோதி
 
நா. மகாலிங்கம்
சென்னை - 32 தலைவர்.
13.4.2002 இராமலிங்கர் பணிமன்றம்
 
 
தயவு
 
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை (நான்காம் பதிப்பு)
 
முகவுரை
 
முன் பதிப்புகளில் பொதுவாக உரை விளக்கம் பாராயணம் செய்வோர், பொருளை உள்ளுற அறியாமலே ஓதுவோர், கூட்டுப்பிரார்த்தனைபோல் தொடர்ந்து படித்துக்கொண்டு போவதே பழக்கமாய் இருந்தது. அவற்றின் உட்பொருளைப் புரிந்து உளம் கொண்டு வாழ்வதால் தான் அக அனுபவம் பெறவேண்டுமென்று திருவருளால் உணர்ந்து பொருள் உரைக்கப்பட்டது. அவ்வனுபவம் ஏற்பட சில குறிப்புகள் இங்கு இணைக்கப்படுகின்றன.
 
அகண்ட வெளிநிறை அருட்பெருஞ்ஜோதியே நமது சிரநடுவுள் மெய்யறிவுப்பீடத்தில், அருள் ஒளித்தீபம் போல் எழுந்தருளி விளங்குவதை நம்புருவநடு ஒருமையோடு இருந்து உளமுருக நின்று வேண்டிக்கண்டு கொண்டு ஓதவேண்டும் என்பது தெளிவு. அப்படி இருந்து ஓதி வந்தால் தான், உண்மையெல்லாம் திருவருளே உணர்த்தி பயன்கொள்ளச் செய்யும்.
 
சத்விசாரத்தால், அருட்ஜோதி நிலையுற்று விளங்கலையும், மேல் அங்கிருந்து கொண்டே பரோபகாரத்தால் உலகில் வாழும் பழக்கமும் பெறப்படும். தினசரி வாழ்வில் இந்த மாதிரி வாழ்வு அடைவதே நம் இறைவன் திருவுள்ளம்.
 
ஆகையால், அகவல் பாராயணம் மட்டும் நாளும் ஓதிவருதல் போதாது. அத்தோடு பொருள் உணர்ந்து உள்ளத்திற் கொண்டும், தினவாழ்விற் கொண்டும் பயன் பெறவே நமக்கு அருளியுள்ளது மெய்யாம்.
 
அருட்பெருஞ்ஜோதி எவருக்கும் அகத்திலே இருந்து வாழ்விக்க உள்ள உண்மையே. ஆனால் அது, நமது அறிவிலே, உயிரிலே, உடலிலே தீண்டாது அகவானிலே, அருள் ஆடல் புரிந்து, நம்மைப் பக்குவப்படுத்தி வருகின்றது. அதனை மெய்ஞ்ஞானத்தால் அறிந்து ஒன்றி நின்று, ஜீவகாருண்ய வாழ்வில் அனக நிரம்பிடும் போது தான் உட்கலந்து வாழ்க்கையில் அனுபவப்படுவதாய் உள்ளது. வள்ளற் பெருமான் அப்படி அகம் கண்டு அனகமாக வாழ்ந்து தான் அனுபவத்தில் பெற்றுக் கொண்டார்.
 
ஆகவே, அகவலையும், திருவருட்பாவையும் ஆழ்ந்து பயின்று நாம் உய்யவே வழங்கியுள்ளார். எனவே, பக்தியோடும் நம்பிக்கையோடும் படித்தறிவதால் மட்டும் பேரின்ப அனுபவம் பெற்றிட முடியாது. மற்ற நூல்கள் போன்று, திருவருள் ஏகதேசத்தால் ஆக்கப்பட்டதல்ல இது. அருட்ஜோதிபதியை அகத்தில் கண்டு கலந்து அதுவாகி நின்று அருள் உண்மையே வெளியாக்கப் பெற்றுள்ளது; இதனால், உளம் உருகிப் பொருள் உணர்ந்து ஓதிப் பயன் அடைய வேண்டும் ஒவ்வொருவரும்.
 
தற்போது அகவல் உரை விளக்கம் நான்காம் பதிப்பாக வெளிவருகின்றது. அதுவும் 1990ம் ஆண்டிலிருந்து தான் மூன்று முறை வெளிவந்துள்ளது, இதனால் திருவருளே ஒவ்வொருவர் உண்ணின்றும் உட்பொருளை நன்கு ஓர்ந்து வழிபடச் செய்கின்றார் என்பது கண்கூடு. அதன் விளைவுதான் இவ்விளக்கவுரையை அன்பர்கள் தேடி வந்து வாங்கி படித்து பயன்பெறுகிறார்கள் என்பது உறுதி ஆகிறது. இதைக் குறிக்கத் தான் அவ்வருள் ஆண்டவரின் சந்நிதியில் விண்ணப்பித்து இதனை நிறைவு செய்கின்றேன்.
 
அருள் ஆண்டவரின் சன்னிதி
 
அருட்ஜோதிநிறை வெளியிலே, நடுவாக “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை”யோடு எழுந்தருளியுள்ளதைத் தான், நம் தலைநடு விளங்கக் காண்கின்றோம். அதனை சத்விசார தியானத்தால் கண்டொன்றி அதுவாகி நின்று அதுவாகவே வாழ்ந்தவர் தான் நம் அருட்பிரகாச வள்ளற்பெருமான். அவரே, அருள் இறைவடிவாகி விளங்குகின்றார். ஆதலின், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே, அருட்பிரகாசக் குருவாக எல்லோரும் ஏற்று இன்புறவுள்ளார். இந்த குருவில்லா ஞானம் குறைவுடையதே. இத்தயா உண்மை குருவைக் கொண்டு உலகம் எல்லாம், உண்மை பேரின்ப வாழ்வு பெறுவது சத்தியம்.
 
தயவு சத்தியஞான கோட்டம் - சரவணானந்தா
திண்டுக்கல்
29.03.2000
 
தயவு
 
அருட்பெருஞ்ஜோதி அகவல் என்பதின் பொது விளக்கம்
 
அருட்பெருஞ்ஜோதி என்றதன் உண்மை, அருளால் அறிவிக்கப்பட அது கொண்டு அனுபவத்தில் தெளிவாகக் கொள்ளக்கூடிய ஒன்றாகும். நமது இறை உண்மை அகண்டபெருவெளிமுற்றும் நிறைந்த ஒன்றாம். இதன் ஒரு கூறுதான் நம் ஒரு பிரபஞ்ச சிறுகூறு; இதில் இருந்து தான் முழு இறைஇயல் விளக்கம் சிறப்பாய்க் கண்டு பிண்ட தேக வாழ்வில் பெறலாகின்றது. இந்த நம் பிரபஞ்சமும் பிண்டமும் அருள்ஞானத்தால் அறியலாகும்.
 
இதற்குமேல் அகண்ட பிரபஞ்ச இரகசியம் சுத்ததயவால் மட்டும் தெளியலாகும். அது பெருநிலை கொண்டது. பகுத்தறிவுக்கு மேற்பட்டது அருள் அறிவு; அதற்கும் மேற்பட்டது கற்பனை கடந்த தயவு ஞானம் ஆகும். இந்த பெருந் தகராகாச வெளிநிறை இறை வடிவை தயவு என்ற சொல்லாலும் நம் பகுதிப் பிரபஞ்ச இறைவடிவை அருட்பெருஞ்ஜோதியாகவும் உணர்த்தப் பெருகின்றோம் இன்று.
 
இந்த அருட்ஜோதிக்கடவுள் அனுபவம் அகத்தில் அருவ உணர்வாயும் புறத்தில் உருவத்தோற்றமாய் விளங்கி முடிந்த வாழ்வில் ஆன்மாவிலிருந்து அருவுருவாய்த்தோற்றி அனக நிறைவாய்த் திகழ்வதாகும்.
 
ஆகவே அருட்பெருட்ஜோதி இறை அனுபவம் ஆன்மாவின் கண் இருந்து அறிந்து தெளிந்து வாழ்வில் என்றும் விளங்கிக் கொண்டே இருப்பதாம். இந்த உண்மைதான் வள்ளற்பெருமானின் அகஆன்மாவில் வெளிப்பட்டு வெளியில் இந்த அருட்பெருஞ்ஜோதி அகவலாய்த் திகழ்கின்றது! இதனை நாம் அறிந்து ஓதி உளம் கொண்டு வாழவேண்டுவதே இறைவள்ளல் திருவுள்ளமும் ஆணையும் ஆகும்.
 
இனி அகவல் உண்மை காண முயல்வாம். உட்பிரிவுத் தலைப்புகளை எடுத்துக் கொண்டு நோக்குவாம்.
 
1. அருட்பெருஞ்ஜோதி:
 
நம் பிண்ட அண்ட ஆகாசத்தில் அருவாயுணர்விலும் உருவிலும் இருந்து ஆன்மாவில் அருவுருவாய் விளங்கி அனக அனுபவத்தில் ஏற்கப்படுவது. இப்படித்தான் வள்ளற்பெருமான் உளம் கொண்டு வெளியிட்டுள்ளார்; ஆனால் அவர் அருட்பெருஞ்ஜோதியை சுத்தசிவமாகக் கொண்டு போற்றுவது முன்னோர் மரபு முறையே. ஆனால் ‘சுத்தசிவம்’ என்பதை அருட்பெருஞ்ஜோதியாகக் கொண்டு உலகம் எல்லாம் உய்வுபெறவேண்டுவதே எவருக்கும் கடமையாகும்.
 
2. அருட் சிவம்:
 
அருள் அனுபவத்தில், சத்து, சித்து, ஆனந்த இறைவனையே இது குறிக்க வந்தது. ஆகையால் சமய மதாதீதத்தில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியையே கொள்ள வேண்டும். அருளையே முதலாகக் கொண்டு ஓதப்படுகின்றது. காண்க. சிவன், அருள் எனத் தொடங்காது இப்படி அருட்சிவம் எனக் கொண்டது சிறப்பம்சமாம்.
 
3 முதல் 14 தலைப்புகளில் அருள் ஒளியின் சக்தியால் பெறலரும் அனுபவம் கூறியுள்ளார். இதனை இந்த அகவலில் ஆரம்ப முதல் அகர உயிர் எழுத்து வரிசையில் வர்க்க மாலை வரிசையில் அலங்கரித்துள்ளார்.
 
15வது தலைப்பு முதல் 22வது தலைப்பு வரை அக அனுபவ வெளிகளில் காணும் விளக்கம் வருகிறது. அகநின்றுதான் பெறப்படுவன எல்லா அனுபவமும்.
 
23. தகர மெய்ஞ்ஞானம் என்பது ஆறறிவுக்கு மேற்பட்ட ஏழாம் உயிர் மெய்யால் குறிக்கப்படும் வெளிநிலை அனுபவம் ஆகும். இதற்கு மேல் 26வது சாகாக்கலை வெளி எனப்படுகின்றது. இந்த நிலையில் வெளிப்படுவது யாவும் ஷடாந்தங்களிலும் பெறலரிதாய் உள்ளது நம் அருட்பெருஞ்ஜோதி வெளியாகும்.
 
27. இறையின் இருப்பிடமாம் சிறு அணுவும் பேரகண்ட வெளிகளை சிற்சபை பொற்சபை முதலியனவாகவும் கூறுவர்.
 
39. நம் அருட்ஜோதி அகம் புறம் எனப் பிரியாத ஒன்றாய் அனகநிறைவாய் எங்கும் நிரம்பியுள்ளது என்று குறிக்கப்படுகின்றது.
 
46. நம் அனுபவ வெளியைத்தான் சிற்சபை சிற்றம்பலம், அமுதாலயம், வாழ்வெல்லாம் தருவது என்று போற்றப்படுகின்றது.
 
49. நமது ஆன்மாவே எல்லா கற்பனா கோவில்களும். அதுவே சபை, பொது, கோயில், கோட்டம் முதலியனவும் நம் அகநிலை இடமேயாம். இது இறப்பையே தவிர்த்து வாழ்விப்பதாம்.
 
53. கற்பனைகளில் அடங்காதது சமய மதம் கடந்தது. அருட்பெருஞ்ஜோதியின் ஓர் அணுதான், நம்மின் தலைநடு, கருமுதற் பொருளாய்த் தோன்றி, உயிர், உணர்வு உடல் எல்லாமாய் விளங்குகின்றது. அதுவே உணர்த்துவதும் நாமாய் இருந்து உணர்வதுமாம். இரண்டுபடாத அருள் ஒளியணுவே நாமாயும் அதுவாயும் இருத்தலின் பொதுநிலை எனப்பட்டது. இந்த அகஜோதி நிலையே அத்துவித அனுபவம்.
 
இதற்கு மேல் தலைப்புகள் பொதுவாகப் பார்க்க எல்லாமான அருட்பெருஞ்ஜோதியே அனகமாக விரிந்து யாவுமாக திகழ்கின்றது. உலகத்தே பூதமுதல் தூல, சூக்கும, காரணநிலை எல்லாம் கூட ஒன்றாய் பதிவிளக்கமாகவே உள்ளனவாகும். அவற்றை புறத்திலிருந்து காணும்போது வேறு வேறாகவும் அனக அனுபவத்தில் ஒன்றேயாகவும் கண்டு கொள்ளலாம். ஆகையால் மற்ற தலைப்புகட்கு உள்ளிருந்து உணர்ந்து கொள்ளும்படி விட்டுவிடப்பெறுகின்றன. இடையில் எப்பகுதிக்கும் தனிப்பெருங்கருணையோடு சத்விசாரத்தால் அங்கங்கு கண்டு கொள்ளலாம். ஆதலின் தனித்தனி எடுத்து விரித்திடவில்லை.
 
முடிவு நமக்கு வாழ்வளித்து விளங்கச் செய்வதேயாகக் காண்போம். ஆதலின் அருட்பெருஞ் ஜோதியை புருவநடுவிருந்து அகம் கண்டு நினைந்து நினைந்து உள்ளொன்றி அனக வாழ்வு வாழ வேண்டுவதே நம் கடமையாகும்.
 
“நினைத்தபோதெல்லாம் நின்னையே நினைத்தேன்
நினைப்பற நின்ற போதெல்லாம்
எனைத் தனி யாக்கி நின்க ணே நின்றேன்
என்செய லென்னவோர் செயலுந்
தினைத்தனை யெனினும் புரிந்திலே னெல்லாஞ்
சிவன் செய லாமெனப் புரிந்தேன்
அனைத்துமென் னரசே நீஅறிந்ததுவே
அடிக்கடி யுரைப்பதென் நினக்கே”
 
என்றதால் அருட்பெருஞ்ஜோதியைத் தலைநடுகண்டு ஒன்றி அதுவாகி நின்றல் வேண்டுவது மிக முக்கியம்.
 
இப்படி அகம் ஒன்றி நிற்பதோடு முடிந்துவிடுவதல்ல! ஏனெனில் உடல் நிலையை மறந்து உள்ளொடுங்கி மடிந்து போதல் திருவுள்ளம் அல்லவாம்.
 
தொண்ணூற்றாறு தத்துவதேக நிலைக்கப்பால் நம் அருட்ஜோதிபதி சதா சதுரராய் ஐந்தொழில் செயலாகிய நடனம் புரிந்து கொண்டே இருக்கிறார். அவரே அனைத்துள்ளும் அந்தரமாக இருந்து கொண்டு சதா விளங்குவது ஆண்டவர் நிலையாகும். ஆகவே உடல்நிலை விட்டு அகம் சென்று அடங்குபவனுக்கு புறவாழ்வே தடைபட்டு நின்று விடுகின்றது.
 
ஏன். அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு, அதோடு ஒன்றி இருந்து வாழாது போனான், தேக வாழ்வு இழப்பால், உட்கலந்து ஒழிந்து போனதாக எண்ணப்படுகின்றது. உண்மையில் அருட்ஜோதி ஆண்டவர் தன் அருளையே யாவுமாய்க் கொண்டும், புறத்தே மறைவும் மாற்றமும் அடைந்து கொண்டே, அகத்தில் மட்டும் நித்தநிலை இருப்பதாகவும் இருக்கிறார். இப்படி இருப்பதால்தான், புறம்விட்டுச் சென்றது, தவறாகிவிட்டது என்பது இப்போது அறியலாகின்றது. எனவே அது கூடாது: சத்விசாரத்தால் அகத்தே கலவாமற் கலந்து இருந்தபடி, அனகமாகவிரிந்து வாழவேண்டியனவாய் உள்ளான் இவன்.
 
அழிந்துபடும் புறபெண் அம்சதேக நிலை நின்று, அகக்கடவுள் நிலை அடையப்போய் மறைய நேர்ந்தது தவறேயாம். 96 தத்துவ தேக நிலைக்கப்பால், அகத்தே அந்தரத்தில் நின்று ஆடல் புரிகின்ற ஆண்டவரை அடைந்து வாழ முடியாமல் போய்விட்டது! சுத்த சத்விசாரத்தால், அழியா அகநிலையில் இறையோடு பிரிவற இருப்பதையுணர்ந்து அங்கிருந்து வாழல் கடமை. ஆணையும் பெற்றுள்ளான் இவன்.
 
இது தேகதத்துவநிலை பற்றாது, அகநித்திய சதுரர் உடன் இருந்து வாழ்வதால், சூழ் அநித்திய தேகமும், உயிரும், அழியாமை பெற்று மரணமில்லா வாழ்வில் விளங்கக் கூடியவனாகின்றான்.
 
இதற்காக நம் அருட்பெருஞ்ஜோதி உண்மை வழங்க வந்த இந்த அகவல், 1596 வரிகள் வந்து நிறுத்தப் பெற்றுவிட்டது. இன்னும் நான்கடிகள் சேர 1600 ஆகும். இது பதினாறு கலை நிறைவான முழுமதிச்சோதியே நம் பதியும், நாமும் ஒன்றிய அருட்பெருஞ்ஜோதியாக, அகநின்று அனகமாக வாழச் செய்வதாயுள்ளதாம்!
 
இதனால் அருட்பெருஞ்ஜோதியே, இந்த அகவலாய் அதுவே நமது உண்மையாகக் கண்டு கொண்டு வாழவே நம்மையும், இவ் அருட்பெருஞ்ஜோதியை இரண்டற்ற ஒன்றாகக் கண்டு வாழத் திருவருளால் இந்த அகவலே அமைந்துள்ளது.
 
இதனாலே, அருட்பெருஞ்ஜோதியே, பெருமானின் ஆன்ம உள்ளமாகி, அதுவே, தனது உண்மையெல்லாம் வெளிப்படக் கொண்டு வள்ளலார் மூலம் வெளிப்பட்டுள்ளது உண்மை.
 
ஆதலின், அகவலை, புறத்திலிருந்து, உட்சாராது ஓதினால் முழுப்பயன் பெறலாகாது. அகநின்றே, அருட்ஜோதியோடு பிரிவற இருந்து தினசரி வாழ்வில் அனுபவம் உண்டாக வாழக் கடமைப் பட்டுள்ளோம். எனவே இந்த அகவல் உரையை அகமுறக் கொண்டு வாழ்விற் கொண்டு பயனுற வேண்டும்.
 
வாழ்க எல்லோரும் அருட்பெருஞ்ஜோதியை அக அனகமாகக் கொண்டு அழியா வாழ்வில் தழைத்தோங்க. அதுவே அவரது ஆணையாகவும் நம் ஒவ்வொருவரின் கடமையாகவும் உள்ளது.
 
வாழ்க
 
அருட்பெருஞ்ஜோதி
 
- சரவணானந்தா
 
 
தயவு
 
அருட்பெருஞ்ஜோதி அகவல் சிறப்பு முன்னுரை
 
அருள் அகமிருந்து மலர்ந்துள்ளது இந்த அகவல் நெடுஞ்செய்யுள்; முன்னோர் கண்ட இலக்கண இலக்கிய நூல்கள், பொறிபுலன் கற்பனா நெறிநிலையிற் கண்டவைகளேயாகும். அவைகளின் குறிக்கோள் எல்லாம், கடவுள் ஆன்ம எல்லைவரையிற் கொண்டு முடித்துவிட்டன; மேல் வாழ்வு அனுபவம் இல்லையாம்படி நின்றுவிட்டது. ஆனால், ஆன்மக் கடவுள் நிலை நின்று, சுத்த சத்விசாரவிளைவால் பெற்ற அருள் அனுபவ விளக்கங்களே, இவ்வருள் விளக்கங்களாகும். பத்துபத்து செய்யுட்கள் கொண்ட பதிகத்தோடு முடிக்கப் பெற்று நிறுத்தப் பெற்றன. அது, கடவுளான்ம திருவடியில் அடங்குமுறையே ஆயிற்று. ஆனால் அவ் ஆன்ம கடவுள் நிலைக்கு மேல், ஓர் ஆன்மாவுக்கு, சுத்த ஞான தேகம் பெறப்பட்டு நித்திய வாழ்வுடன் என்றும் விளங்க வைக்கின்றது இந்நெறிமுறை. இதனைச்சுட்ட வந்துள்ளது, இவ் அகவல் மெய்ப்பொருள். இதனால் நம் திரு அகவலுக்கு 231 தலைப்பின்கீழ் விரிவுரை செய்யப் பெற்றது. எனவே இவ் அகவலின் 1596 அடிகளுக்கும் மெய்ப்பொருள் முதன் மூன்று பதிப்புகளில் வழங்கப்பெற்றன.
 
இப்போது, முத்தி வாழ்வான திரிதேக சித்தி விளக்கம் காட்டிக் கொடுக்கும் இவ் அகவலுக்கும் முந்நெறியால், அடங்கச்செய்த முறைக்கும் உள்ள வேறு பாட்டினைச் சுட்ட திருக்குறளை ஓர் எடுத்துக்காட்டாய்க் கொள்ளலாம். திருக்குறள் 133 அதிகாரம், பத்து செய்யுள் உடைய பதிக முறையால் 1330 பாக்கள் வழங்கப்பெற்றது. ஆனால் நம் திரு அகவல் மொத்தத்தில் 1596 அடிகள் அமையப் பெற்றுள்ளதை அறிகின்றோம். இது குறட்பா அடிகளுக்குமேல், அதிகாரத்திற்கு இரண்டாக (133 x 2) 266 அடிகளைச் சேர்க்க வருகின்றதாம். ஒவ்வொரு அதிகாரத்திற்கு, இரண்டு இரண்டு அடிகள் சேர்க்க நேர்ந்தது. இது ஏன்? பத்தாகிய ஆன்மாவுக்கு, சுத்தஞான தேக சேர்க்கையே இணைந்து முத்திவாழ்வு அனுபவம் கொண்ட நிலையே ஆகும்.
 
இதனாலே, ஆன்ம மனிதன், பிறவா நிலையில் அடங்கிப்போகாது, திரிதேக சித்தியோடு, மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திட வைக்கும் உண்மை குறிப்பதாம். உலகியல் வாழ்வுக்கு உதவ வந்தது திருக்குறள் என்றால், அருள் இயற்பெருவாழ்வு வழங்க வந்தது இவ் அருட்பா திருமுறை அகவல் என்னலாகும். ஆகையால் இப்பொழுது உலகுக்கு அவசியத் தேவை, சத்விசார பரோபகாரத்தோடு கூடிய அருட்பெருநெறியை ஏற்பது சிறப்பிற்சிறப்பாகும். ஆகவே எல்லோரும் கற்பனா மறைப்புகளைத் தவிர்த்து, உண்மைப் பொருள் கொண்டு இன்பவாழ்வில் ஓங்குவார்களாக.
 
*****
 
தயவு
 
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரையின்
 
மூன்றாம் பதிப்பு
 
சிறப்பு முன்னுரை
 
 
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் அருள் அகநிலை நின்று அனகமாகவே ஓதியுள்ளது அருட்பெருஞ்ஜோதி அகவல். இதற்குச் சத்விசாரத்தால் மெய்ப்பொருள் கண்டு, பரோபகாரச் செயலால் அனுபவப் பொருள் அனுபவத்தில் பெற வேண்டுவதே திருவருட் சம்மதம். ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாய் நம் சத்திய ஞான ஆலயத்தில் எழுந்தருளி ஆட்கொண்டு அருள்பாலித்து வாழ்விக்கும் உண்மையை, வள்ளல் அடிகள் மூலம் இப்பேர் அகவற்பாவில் வழங்கப் பெற்றுள்ளது. அருட்ஜோதிக் கடவுள் தன் இயல் உண்மை அறிவின்ப விளக்கத்தை, எல்லாம் வள்ளல் உளத்திருந்து அனகமாக வெளியிட்டுள்ளார். ஆதலின் நாம் மெய்யுணர்ந்து மெய்ப்பொருள் கண்டு கொண்டு, வாழ வேண்டுவதே நம் கடமையாய்க் கொள்ளவேண்டும்.
 
பொறிபுலன் உணர்வாலும், மனோகற்பனை யூகத்தாலும் காணப்பெறும் பொருள் உபாயப் பொருளே! அகம் உணர்ந்த ஞான யோகியர் கண்டுகொண்டது உண்மைப் பொருளாகும். அதனால் உள் உவகையும், அற்புத சித்திகள் பெற்று ஆனந்தக் கூத்தாடி அடங்குதல் முடிவாம். அம்முடிவும் நித்தியானந்த வாழ்வு அல்ல! இன்றைய வள்ளல் சன்மார்க்கம், அகவுண்மை நிலை நின்றே அனகமாக வாழ்தல் ஒன்றே இலட்சியமாய்க் கொண்டதாம்! இவ்வுயர் குறிக்கோளோடே, அனுபவப் பொருள் காண முனையப்படுகின்றது.
 
இதற்கு முன், 1974ல், வள்ளலார் சித்தி நூற்றாண்டு விழாவின் போது முதன்முதலாக உரை விளக்க நூல், சென்னை இராமலிங்கர் பணிமன்றம் மூலம் பொள்ளாச்சி திருநிறை, நா. மகாலிங்கம் அவர்களால் பதிப்பிக்கப் பெற்று வெளிப்போந்தது. பின்னர் மகாலிங்கம் அவர்களே பெரும் பொருட்செலவில், அற்புதமான முறையில், 1990ல் இரண்டாம் பதிப்பு வெளியிட்டு, பலர்க்கும் கிடைக்கும்படி செய்துள்ளார். அப் பிரதிகளும் தீர்ந்துவிட்ட இது சமயம், பலர் விருப்பத்திற்கிணங்க நல்ல கவர்ச்சிகரமான முறையில் மிகச் சிறப்பாக அச்சிடப் பெற்று வெளிவருகின்றது.
 
இது, நம் சத்திய ஞான கோட்டம், ‘தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை’ மூலம் வெளிக் கொணரப் பெறுகின்றது. இதுகாறும் சுத்த சன்மார்க்கம் இன்னதென உலகறியாதிருந்த ஒன்றை பலர் தெரிந்து கொண்டு வரவேற்கின்றனர். மற்ற பழநெறிமுறை எதுவும், மக்கள் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி ஒத்து வாழச் செய்யாத பெருங்குறையை நீக்கி, எல்லோரையும் தயவோடு ஒன்றுபட்டு ஒத்து வாழ வைப்பது இந்தச் சுத்த தயாநெறிமுறை ஒன்றே என்ற கருத்தை ஏற்று தழைத்தோங்கச் செய்யவே, அருள் ஆண்டவரே, திருஅருட்பிரகாச வள்ளல் வழி உபகரிக்கின்றார்.
 
இனி, இம்முறை இறைவன் திருவுள்ளப்படி வரும் நூற்றாண்டுகளில் எவ்வெவர்க்கும் நல்லின்ப வாழ்வு வழங்க உள்ளது மெய்யாகும்.
 
கடவுள் உண்மை தயவு ஆக எல்லோர் அகத்தும் இருந்து கொண்டு, அனகமாக நிரம்பி வாழ்விக்க வருகின்றதாலே, பன்னாட்டுப் பன்மொழிகளில் அச்சாகி, பலர் உள்ளத்தும் பதிவுற்று, நித்திய வாழ்வில் இணைந்து நீடு ஓங்கச் செய்ய தயவோடு வேண்டுகின்றனன்.
 
இங்ஙனம்
ஆசிரியன்
சரவணானந்தா.
தயவு
சத்தியஞானகோட்டம்
திண்டுக்கல்.
3-3-97.
 
 
முன்னுரை
 
(இரண்டாம் பதிப்பு)
 
அனாதிநித்திய பரம்பொருள் பிரபஞ்ச தோற்றத்திற்குமுன், அருவமாய் ஒன்றும் இல்லாததுபோல் இருந்துள்ளது. அது, இருள்மய காரொளிநிலையாகும். அதுவே வெளிப்பட்டபோது ‘அருள்’ ஒளியே நிறைவாய் வெளிநிறைந்த ஒன்றாய்த் திகழலாயிற்று. அந்த அருள்நிறை ஒளியே பிரபஞ்சத்துயாவுமாய் விளங்கி பக்குவமனிதனில் அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டும், விளக்கிக் கொண்டும் உள்ளதைத் திருவருளால் உணர்ந்து அதுவாகி நின்றவரே நம் திருஅருட்பிரகாசவள்ளலார்.
 
முன்னுற்ற மெய்ஞ்ஞானியர் பலரும், அருள் ஏக தேசத்தால் உண்மையை அயலாய் இருந்து கண்டு அரும்பெரும் முயற்சியால், அனந்த சக்தி சித்திகளைப் பெற்றும் முடிவில், அகம் மறைந்து போயினர். வள்ளற் பெருமானார், அகநிலை பெற்று நின்றதோடு அவணின்று அனகமாகச் சுத்த தயவு முறையால் நித்தியானந்த வாழ்வு பெறலானார். அந்நிலையான பெருவாழ்வு தன் போல் எவரும் பெற வேண்டியே சுத்த சன்மார்க்கத்தை தயவோடு வழங்கிவிட்டுள்ளார். அதைத்தான் திருவருட்பாவில் ஆறாம் திருமுறையில், அருட்பெருஞ்ஜோதி அகவலாக விரித்து வழங்கியுள்ளார். இந்த அகவலின் அடைவு இருநிலை கொண்டதாகும். அதாவது, விசாரஞானத்தோடு கூடிய தோத்திரத்தால் போற்றிப்போற்றி, அகத்தே சார்ந்து நிற்றல் முதலாம் நிலை. அந்நிலையில் இருந்து தயவு செய்து கொண்டேயிருத்தல் இரண்டாம் நிலை. இந்த முறையில் தான், அகவலைப் பயின்று வாழ்வே உரையாகக் கொள்ளவேண்டுவது திருவுள்ளம்.
 
எனவே, அகவலின் உயர்பயன்பெற விரும்புகின்ற அன்பர்கள் பொருளுணர்ந்து ஓதத் திருவாணைப்படி 1974ல், உரைவிளக்க நூல் ஒன்று, அருட் செல்வர் திருநிறை நா.மகாலிங்கம் அவர்கள் மூலம் வெளியாக்கப்பெற்றது. அந்த உரைக்கு முதலாய்த் தோன்றியது, தினசரி நாட்குறிப்பு ஏட்டில், நாளும் ஓர் இணையடிக்குச் சிற்றுரை தீட்டின நூலேயாகும். அது, 1960 ஆரம்ப முதல், 1962 மார்ச்சு வரை வரைந்து வைத்த குறிப்பேயாகும். பின் 1972ல் விரிவாக, ஓராயிரம் பக்கங்களில் வரைந்து வைத்ததையே, வள்ளலார் நூற்றாண்டில் இராமலிங்கர் பணி மன்றம் மூலம் வெளியாக்கப்பெற்றது.
 
அருட்பிரகாசரின் அருளடியையே உளம் கொண்டு, அது உணர்த்த வெளியானதே அவ்வுரை நூலாகும். அது வடலூரில், 1974 மே 24ல், சாலைசகாப்த நன்னாளில் வெளியிடப்பெற்றது. அடுத்து, சென்னையிலும் பாராட்டு விழாவோடு வெளிப்படுத்தி சிறப்பித்தனர்.
 
அவ்வுரையைப் பலர் அன்போடு போற்றி ஏற்றுக் கொண்டனர். ஒரு சிலர், சுத்த சன்மார்க்கச் சிறப்பினை யுணராதார் குறைகண்டனர் முதலில். நாளடைவில் உண்மையை அறிந்து ஏற்றுக் கொண்டுள்ளனர்.
 
பின்னர் ஒரு சிலர், சிற்றுரை பல எழுதினார்கள். அவையெல்லாம், புறத்திருந்து விளக்க வந்தன ஆதலின், அனகப்பொருள் வழங்கி வாழ்விக்க கூடாதனவாய்த் தோற்றினவாம்.
 
சுத்த சன்மார்க்கச் சிறப்போடு, தயா வாழ்வால் உலக மக்கட் சமுதாயத்திற்கெல்லாம் உதவும் முறையில் கிடைக்கப்பெற்றுள்ள நம் உரைநூலுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பலரும் இந்த இரண்டாம் பதிப்பு வரவேண்டினர். திருவருளும் இசைந்திட அருட்செல்வரே இவ் வெளியீட்டை நன் முறையில் உலகவர்க்கெல்லாம் வழங்குவிக்கின்றார்.
 
வள்ளலாரே ஒவ்வொருவரின், ஆன்ம சித்திவளாகத்திலும், புறத்திலும் இருந்து அருட்பெருஞ்ஜோதி வழியில் செலுத்த வெளிப்பட உள்ளார். உலகம் தெரிந்தும் தெரியாமலோ, பேரழிவிக்கும் ஆக்கத்திற்கும் ஊடே முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அருட்ஜோதி உதயமாகி இருள்மாயா நெறிமுறைகளை ஒழித்து, எல்லோரையும் நல்லாறுபடுத்தி வாழ்விக்க வருகின்றது பெரு நெறிமுறை.
 
தயா ஜோதிப் புத்தொளியில், பழையனவற்றின் உண்மை எல்லாம் வெளிப்பட்டு, மேற்செல்ல வழிகாட்டிவிட்டு அமைதி பெற உள்ளனவாம்.
 
மாபிரபஞ்சம் ஏகமானது: அதனை ஆள்கின்ற மாபெரும் பரம்பொருள் எல்லாம் வல்ல ஒன்றாகவேயுள்ளது. அது ஒவ்வொரு சிற்றணுவினின்றும் தன் உண்மையை வெளிப்படுத்த மேற்கொண்ட பெருஞ் செயலே இந்த உலகக் காரியம் எல்லாம். இவ்வுலககாரிய அருஞ் செயலில், அருட்பெருஞ் ஜோதியாய்த் தானே வெளிப்பட்டு, அருட்பிரகாசவள்ளல் என விளங்க வந்துள்ளது சத்தியம்.
 
இதுகாறும், அருவமாய் உள்ளிருந்தபடி எவருமாய்த் தோற்றி எவ்வளவோ சக்தி சித்திச் செயல்களை வெளிப்படுத்திவிட்டு மறைந்து போய்க் கொண்டே இருந்த அப் பரம்பொருள், அக நிலை நின்றே அனகமுற்று அழியா இன்ப வாழ்வொடு திகழத் திருவுள்ளம் கொண்டு விட்டுள்ளார். இம்மாதிரி, அழியாவடிவுடன் வெளியுற்று, மாபிரபஞ்சத்தில் அதிமனிதனாய் வாழும் பேறு மக்கள் இனத்திற்கே ஏற்பட்டுள்ளது மெய்யாகும். ஏனென்றால், அவர் ஒருவரே அகமிருந்து அனகமாய் இயங்குகின்றது உண்மையாம். ஆகையால் இனியும் மக்கள் சமுதாயம் அறியாமையால் அல்லல் பட்டு அழியவேண்டியதே இல்லை. தம்தம் உண்மையை சத்திய ஞானத்தால் அறிந்து பற்றி இருந்து கொண்டு சுத்த தயாமுறையால் நித்திய வாழ்வில் தழைத்திடல் கடமையாகும்.
 
ஒன்றான தயவு நெறி ஏற்கப்படாததால், பலவாகிய பழைய நெறிமுறைகளால், மன்பதை முழுவதும் சமய, மத, ஜாதி இன பழக்க வழக்கக் கொள்கை கோட்பாடுகளால், சிதறிச்சிதைந்து கொண்டேயுள்ளது. இவற்றால் உலகில் ஒரு நன்மையும் உண்டானதேயில்லை. இனியும் உண்டாகப் போவதில்லை. ஏன் இந்த அவலப் பிழைப்பு எல்லாம்! அன்பும், அறிவும் கொண்டு இன்பமாய் ஒத்து வாழ வேண்டிய மானிடவர்க்கம், புலனிச்சைப் பெருக்கும், மூடப் பழக்க வழக்கமும் கொண்டு வீண்போதல் நன்றல்லவே!
 
இவற்றை எல்லாம் ஒழித்து அருட்பெருநெறியை எல்லோரும் ஏற்கவேண்டும். உலகம் அதுவேண்டுவது; சமாதான முறையில் ஒத்து வாழ முற்பட்டால்தான் நல்லது; இல்லையேல் பெருங்கேடும், பேரழிவும் உண்டாகிப் பின் நல்வழிக்கு வந்து அருள் வாழ்வுக்குப் பாத்திரமாக வேண்டி நேரும்.
 
உண்மையை உணரவும், அதுகொண்டு அடைய வேண்டியதை அடைந்து சிறப்புற்றிலங்கவுமே, இந்த மனிதப்பிறப்பு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ளுணர்வை உரையாக்கி அனுபவத்தை எல்லாம் மொழிவழி பிறரை அடையச் செய்து வாழ்விக்கவே வருவிக்கப் பெற்றுள்ளோம். அகநிலை நின்று அப்படியே முழுமையாக வெளிப்படச் செய்துள்ள உபாயப் படைப்பே நம் தமிழ் என்றால் அது முற்றிலும் மெய்யே ஆகும். இதில் தான் ஆதிமுதலே எழுத்தும், சொல்லும், பொருளும், இலக்கியமும் இலக்கணமும் மெய்ப்பொருள் வெளியீட்டிற்கே அமைந்தனவாக அருளப் பெற்றதாகும். அவ்வளவு இருந்தும் உண்மை அனுபவம் பெறப்படும் முன், அகம், புறம் எனத் தோற்றி மனிதனை இருநிலையில் அலைக்கழித்து விட்டது. இன்பம், அங்குண்டு இங்கில்லை, இங்குண்டு அங்கில்லை எனக்கருதி உள்ளடங்கிடச் செய்தது முன்னோரை. பின்னர் புலனெறிவளர, அகமெய்ப்பொருள் இருளில் மறைந்தது. அதனால் உலகம் புறத்துறையில் வேகங் கொண்டு, மோகம் கொண்டும் பிழைத்துக் கொண்டுள்ளது. இன்றுவரை அவ்விரு நெறிமுறையாலும் வாழ்வு ஏற்படவில்லை.
 
உண்மையில் அகமெய்ந் நிலையே, அனகமாகச் செயலொடு விளங்கலை அறியாததினால், அகம் புறம் வேறுவேறாகக் கொண்டு அவத்தையுற நேர்ந்ததும் அபக்குவ அறியாமையே. பக்குவமுற்ற இந்நாள்தான் பரன்நிலை, இரண்டல்ல, இரண்டற்ற ஒன்றன் விரிவே. அகம் புறம் என இரண்டாய்க் கொள்ளக்கூடாது. ‘அகம் அனகம்’ என ஏகமாய்க் கொண்டு வாழ்வதே சரியான முறையாகும் என்ற கருத்து வள்ளல் அனுபவத்தில் வெளியாகிவிட்டுள்ளது. இப்போது தான்,
 
“கண்டதெலா மநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலா மலமேயுட் கொண்டதெலாங் குறையே
உலகியலீ ரிதுவரையு முண்மையறிந் திலிரே
விண்டதனா லென்னிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருணன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே யெந்தையரு ளடைமின்
இறவாத வரம்பெறலா மின்பமுற லாமே.”
 
-திருவருட்பா - ஞானசரியை
 
இதுதான் அகமிருந்து வாழும் அனகநெறி முறை வாழ்வாம். உண்மை இறைமை இப்படி இருக்க, அறியாமையால் அவலமுற்ற காலம் எல்லாம் வீணாயிற்றே எனக் குறைபட்டுக் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், இந்தப் பக்குவ ஞான தயவு வாழ்வு உண்டாக இவ்வளவு காலம் இப்படி எல்லாம், அடிபட்டு, அலைபட்டுத் தேறி வந்ததாக வேண்டியே திருவருள் அடங்கி நின்று இது சமயம்தான், இந்த அனக உண்மையை வெளியாக்கி ஆட்கொண்டுள்ளது ஆம். இனிமேல், இந்த மெய்ந்நெறி கொண்டு தழைத்திடும் உலகம் எல்லாம். இதற்கு இந்த அகவல் உரை விளக்கம் நன்கு உதவும்.
 
இதில், அருட்பெருஞ்ஜோதி ஒன்றே சத்தான மெய்ப்பொருள், அதனைச் சூழ எல்லாப் பொருள்களும், இயக்கங்களும், உணர்வுகளும், அற்புத சித்துச் செயல்களும், ஆனந்த அனுபவங்களும் சூழ உருவாகி உருவாகி நீங்கிக் கொண்டே இருப்பனவாய், அகமிருந்து அறிகின்றோம். இப்படி அகமே அனகமாய் விரிந்திலங்கக் கண்டு கண்டு தயவு பெருகப்பெருக வாழ்வதால், அகமெய் இயல்பே புற மெய்யுருவையும் அழியாமையாக்கி விளங்கச் செய்வதாம். இவ்வனுபவம் தர வந்துள்ளது இந்த அகவல். இதன் உட்பொருள், சென்றனவும், நின்றனவும், வருவனவும் அமையப்பெற்றதால், மெய்ஞ்ஞான, விஞ்ஞான உண்மை எல்லாம் பொருந்தக் காணலாம். தயவு விளைவால் பொய்ப்போகத்தில் இச்சை யொழிந்து மெய்யனுபவத்தில் வாழ்வு தழைக்க உலகம் எல்லாம் அமைதியும், ஆனந்தமும் கொண்டிலங்கும்.
 
அகவல் மூலம் அனக நலம் பெருக
 
தயவு
 
சத்திய ஞானக்கோட்டம் சரவணானந்தா
4, நாகசாமி ஐயர் சந்து
திண்டுக்கல்-1.
10. 9. 90.
 
அணிந்துரை
 
நூற்று எட்டு ஆண்டுகளுக்கு முன்னால், 1872 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினெட்டாம் தேதி திரு அருட்பிரகாச வள்ளலார் திரு அகவலை இயற்றி அருளினார்.
 
வள்ளல் பெருமான் இந்தத் திருஅகவலை எழுதும்போது அதற்கு எந்தத் தலைப்பையும் கொடுக்கவில்லை.
 
“திருச்சிற்றம்பலம்” என்று மந்திரச் சொல்லினால் தொடங்கி 1596 அடிகளையும் எழுதி, “திருச்சிற்றம்பலம்” என்ற மந்திரச் சொல்லுடன் முடித்திருக்கிறார்.
 
இந்தத் திருஅகவலை எழுதுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் 1869ஆம் ஆண்டு இந்தத் திருஅகவலுக்கு உரிய காப்புச் செய்யுளை இயற்றி இருக்கிறார்.
 
“அருட்சபை நடம்புரி அருட்பெரும் ஜோதி!
தெருள்பெரும் சீர்சொல திகழ்வசித்தியே! ”
 
இதுதான் அந்தத் திருஅகவலுக்கு உரிய காப்புச் செய்யுள்.
 
உயிர்களின் தெற்குப் பகுதியில், அதாவது உயிர்களின் உச்சந்தலையில் இடைவிடாமல் நடம்புரிந்துகொண்டு இருப்பவர் தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.
 
அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருள் ஆற்றலைத் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன் மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி உபதேசித்தால் எல்லா வகையான சித்திகளும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
 
இதுதான் மேலே இருக்கும் திருஅகவலின் காப்புச் செய்யுளுக்கு உரிய பொருள்.
 
மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் முன்னால் 1873ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி வள்ளலார் சன்மார்க்கக் கொடியைக் கட்டினார். அந்தக் கொடிக்கு உரிய விளக்கத்தையும் உபதேசித்தார். இதுதான் அவர் இறுதியாக ஆற்றிய மகோபதேசம் என்கிற பேருபதேசம்.
 
இந்த உபதேசத்தில் தான், தாம் எழுதிய திருஅகவலுக்கு உரிய பெயரான “திருஅருட்பெரும் ஜோதி அகவல்” என்ற தலைப்பைச் சொல்லுகிறார்.
 
“நான் சென்ற ஆண்டு எழுதிய ‘திருஅருட்பெரும் ஜோதி அகவ’லில் ஒன்பது திரைகளின் விளக்கத்தைக் காணலாம்” என்கிறார்.
 
இந்த இடத்தில் சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். வடலூர் சத்திய ஞான சபையில் ஏழு திரைகள்தானே இருக்கின்றன. திருஅருட்பெரும் ஜோதி அகவலில் வள்ளல்பெருமான் ஒன்பது திரைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றாரே? அது ஏன் என்று புரியாமல் திகைக்கலாம்.
 
மனித வாழ்கையில் ஏற்படும் அறியாமை முதலிய தடைகளைத்தான் ஏழு திரைகள் குறிப்பிடுகின்றன.
 
மாமனித நிலைக்குச் சென்று பேரின்பப் பெருவாழ்வை அடைவதற்கு இன்னும் இரண்டு வகைத் தடைகள் இருக்கின்றன.
 
அவற்றை வள்ளல் பெருமான் தத்துவ நிலைகள் என்றும் விஷய நிலைகள் என்றும் சொல்லுகிறார்.
 
இந்த இரண்டும் பல திரைகளின் தொகுதியாகும்.
 
உலக அனுபவங்களைக் கடந்து, உயிர் அனுபவத்தையும், அருள் அனுபவத்தையும், இறை அனுபவத்தையும் அடைவதற்கு இந்த இருவகைத் திரைகளையும் கடந்து மேலே செல்ல வேண்டும்.
 
இவ்வாறு செல்வதற்குப் பஞ்ச பூதங்களின் தன்மைகளை மாற்ற வேண்டும். அவற்றை சுத்த பஞ்ச பூதங்களாக உயர்த்த வேண்டும்.
 
இப்படி உயர்த்துவதற்கு ஆணவம், பொறாமை முதலிய ஆறு தீய உணர்வுகளைப் போக்கவேண்டும்.
 
இவைகளைப் பற்றித்தான் கலாந்தம் முதலிய ஆறு அந்தங்களும் பேசுகின்றன.
 
இவற்றுடன், ஒன்பது திரைகளையும், பதினாறு வெளிகளையும் பற்றிய விளக்கங்களை திருஅருட்பெரும் ஜோதி அகவலில் வள்ளல் பெருமான் சொல்லுகிறார்.
 
உயிர், மனம், உடல் என்ற மூன்றில் உயிர் மட்டும் தான் உணர்ச்சியுடையது.
 
உயிரைப் போலவே மனமும், உடலும் உணர்ச்சி பெற்று ஒன்றுபட்டு விளங்கும்படிச் செய்யும் பயிற்சிதான் சுத்த சன்மார்க்கம் என்கிற இயற்கை உண்மை நெறிப் பயிற்சியாகும்.
 
இந்தப் பயிற்சியைத்தான் ‘சகச நிட்டை’ என்றும் சொல்கிறார் வள்ளல் பெருமான்.
 
இந்தப் பயிற்சியின் முறையைப் பற்றி திருஅருட்பெரும் ஜோதி அகவலில் 513-வது அடியில் இருந்து 544-வது அடிவரை - முப்பத்திரண்டு அடிகளையுடைய பதினாறு செய்யுட்களில் மிகத் தெளிவாக, தாம் பெற்ற அனுபவங்களையும், அதற்காகத் தாம் மேற்கொண்ட பயிற்சிகளையும் பற்றி மிக அற்புதமாக விளக்கி இருக்கிறார்.
 
இந்தப் பயிற்சிகளின் முடிவில் தாம் பெற்ற ஒலி ஒளி உடலைப்பற்றியும் விளக்கி இருக்கிறார்.
 
இந்த அனுபவ உண்மையை “தோல் எலாம் குழைந்திட..” என்று தொடங்கி முப்பத்து இரண்டு அடிகளில் அதாவது 16 செய்யுட்களில், தம் உடல் சுத்த உடலாக, பிரணவ உடலாக, ஞான உடலாக மாறிய அற்புதத்தை உயர் விஞ்ஞான முறைப்படி, உடல் தத்துவங்களின் ஞானயோக பரிணாம முறையில் மாற்றம் அடையும் அதிசயத்தை விவரித்து இருக்கிறார்.
 
இந்த இருவகைத் திரைகளும், அதாவது எட்டாவது, ஒன்பதாவது தத்துவ விஷயத் திரைகளும், உண்மை நெறியில் வள்ளல் பெருமான் சொல்லி இருக்கும் நான்கு பேறுகளை அடைவதற்காக விலக வேண்டிய திரைகள்.
 
வள்ளலார் சொல்லும் நான்கு பேறுகள் என்ன?
 
ஏமசித்தி, சாகாக்கல்வி, கடவுள் மயமாதல், தத்துவ நிக்ரகம் செய்தல் என்பவை.
 
திருஅருட்பெரும் ஜோதி அகவலில் ஒன்பது திரைகளைப் பற்றிச் சொல்லி இருக்கும் வள்ளல் பெருமான், சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் விலகினாலே அருட்பெரும் ஜோதி ஆண்டவரை தரிசிக்கும்படிச் செய்திருக்கிறார்.
 
ஏன் அப்படி செய்திருக்கிறார்?
 
சத்திய ஞானசபையில் காட்டப்பட்டிருக்கும் ஏழு திரைகளும் தனித்தனி திரைகள்.
 
இந்த ஏழு திரைகள் நீக்கப்பட்டதுமே அருட்பெரும் ஜோதியை உயிர் கண்டு பேரின்பம் அடைகிறது.
 
சாதாரண மக்கள் இந்த அளவுக்கு உயர்வதே முதல் நிலையாகும்.
 
இந்த நிலையில் உள்ள உயிர்களை “கோன் கண்ட குடிகள்” என்கிறார். அதாவது இறைவனை நேரில் தரிசித்த உயிர்கள் என்கிறார் வள்ளலார்.
 
இறைவனை நேரில் தரிசித்தாலே போதும் என்று சத்திய ஞான சபையைத் திருப்பணி செய்யும்போது வள்ளலார் எண்ணி இருக்கிறார் போலும்.
 
சத்திய ஞான சபையில் 1872ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ஜோதி தரிசனம் காட்டினார்.
 
அதன் பிறகு அருட்பெரும் சித்திவளாகத் திருமாளிகையில் தாம் பெற்ற பெருவாழ்வின் பரிணாம அனுபவங்களை, எல்லோரும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற பெருங்கருணையினால் எழுதப்பட்டது திருஅருட்பெரும் ஜோதி அகவல்.
 
அதில் ஏழு திரைகள் மட்டும் விலகினால் போதாது. தத்துவத் திரைகளும் விஷயத் திரைகளும் விலக வேண்டும் என்பதை உணர்ந்து தாம் அனுபவித்த அனுபவங்களையே அருட்பெரும் ஜோதி அகவலில் குறிப்பிடுகிறார்.
 
சத்திய ஞான சபையை நிர்மானித்தபோது 1870 ஆம் ஆண்டில் தாம் பெற்ற அனுபவத்தைக் காட்டுகிறார்.
 
சித்திவளாகத் திருமாளிகையில் 1872 ஆம் ஆண்டில் வள்ளல் பெருமான் தாம் பெற்ற பெரும் பேற்றை அடைவதற்கு இன்னும் இரண்டு தடைத் திரைகளை நீக்கியாக வேண்டும் என்பதை அனுபவத்தில் காண்கிறார்.
 
அந்த ஞான யோக பரிணாம அனுபவத்தைத்தான் திருஅருட்பெரும் ஜோதி அகவலில் எட்டாவது, ஒன்பதாவது திரைகளாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
 
இது வள்ளல் பெருமானின் ஞானயோக பரிணாமத்தைக் காட்டுவதாகும்.
 
எனவே வடலூர் சத்திய ஞான சபையின் ஏழு திரைகளையும், திருஅருட்பெரும் ஜோதி அகவலில் வரும் ஒன்பது திரைகளையும் ஒன்றாக எண்ணித் திகைக்க வேண்டியதில்லை.
 
ஏழு திரைகளைக் கடந்தவர்களை “கோன் கண்ட குடிகள்” என்று கூறிய திருஅருட்பிரகாசர், ஒன்பது திரைகளையும் கடந்தவர்களை “கோன் கொண்ட குடிகள்” என்று சிறப்பித்துச் சொல்கிறார்.
 
திருஅருட்பாவிலேயே திருஅருட்பெரும் ஜோதி அகவல் திருஅருட்பிரகாச வள்ளலாரின் ஞானயோக பரிணாம வளர்ச்சியைப் பற்றிக் கூறும் சத்திய சரித்திர வாக்குகள் ஆகும்.
 
திருஅருட்பெரும் ஜோதி அகவலுக்கு வெறும் தமிழ் அறிவும் சன்மார்க்க பக்தியும் மட்டும் இருந்தால் உரை காண முடியாது.
 
ஓரளவு ‘கோன் கண்ட குடி’ என்ற அளவுக்காவது, அதாவது அருட்பெரும் ஜோதியை தம்முன் காணுகின்ற அளவுக்காவது உயர்ந்து இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சன்மார்க்க ஞானிகளால்தான் திருஅருட்பெரும் ஜோதி அகவலுக்கு விளக்கமாக உரை எழுத முடியும்.
 
திருஅருட்பெரும் ஜோதி அகவலுக்கு உரை விளக்கம் எழுதி இருக்கும் சுவாமி சரவணானந்தா அவர்கள் வள்ளலார் கூறி இருக்கும் கோன் கண்ட குடிநிலைக்கு உயர்ந்தவர்.
 
நம் காலத்தில் வாழும் சமரச சுத்த சன்மார்க்க ஞானி அவர்.
 
அவரால்தான் திருஅருட்பெரும் ஜோதி அகவலுக்கு உரை எழுத முடியும். மிக எளிமையாகவும், விரிவாகவும் சுவாமி சரவணானந்தா அவர்கள் திருஅருட்பெரும் ஜோதி அகவல் முழுவதற்கும் உரை எழுதி இருக்கிறார்.
 
அவர் வாழும் காலத்தில் நாம் வாழும் பேறு பெற்று இருக்கிறோம். சன்மார்க்கிகள் ‘கோன் கண்ட குடிகளாக’ உயர்வதற்கு அருட்பெரும் ஜோதியைத் தம்முள் கண்டு இன்புறும் அளவுக்கு இந்த திருஅருட்பெரும் ஜோதி உரைவிளக்கம் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
 
சமரச சுத்த சன்மார்க்க ஞானியான சுவாமி சரவணானந்தரின் இந்த அரும் பணிக்கு சன்மார்க்க உலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.
 
சுவாமி சரவணானந்தா அவர்களின் திருஅருட்பெரும் ஜோதி உரை விளக்க நூலை இரண்டாம் பதிப்பாக இராமலிங்கர் பணிமன்றம் வெளியிடுவதில் பெருமை அடைகிறது.
 
சுவாமி சரவணானந்தா அவர்களின் சன்மார்க்கப் பணி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று அருட்பெரும் ஜோதி ஆண்டவரைப் பிரார்த்திக்கிறேன்.
 
அருட்பெரும் ஜோதி! அருட்பெரும் ஜோதி!
தனிப்பெரும் கருணை! அருட்பெரும் ஜோதி!
 
 
18-9-90 நா. மகாலிங்கம்
சென்னை-32. இராமலிங்கர் பணிமன்றத் தலைவர்
 
*****
 
முன்னுரை
 
(முதல் பதிப்பு)
 
திருவருட் பிரகாச வள்ளற் பெருமான் அருளிய திருவருட்பாவாகிய ஞானக்களஞ்சியத்தில் தனிபெருஞ் சிறப்புடையதாய் மிளிர்வதானது அருட்பெருஞ்சோதி அகவலாகும். வள்ளற் பெருமான் அருளிய அருட்பாவில் மெய்ஞ்ஞான விளக்கத்தின் மேலானதாக இதனைக் கருதிப் போற்றுவது மரபு. வழிபாட்டில் அருட்பெருஞ்சோதி அகவலை ஓதி உணர்வது சன்மார்க்க சங்கத்தவரின் சீரிய செயலாகும். வாரந்தோறும் வியாழக்கிழமையில் அகவலைத் திருவடிப்புகழ்ச்சியுடன் பாராயணம் செய்து வரும் சன்மார்க்கிகள் பலருளர். வள்ளற் பெருமானோடு பழகிய ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகள் “திருவருட் பிரகாச வள்ளற் பெருமான் அருளிய திருப்பாசுரங்கள் யாவும் விசேடமேயாயினும், முன்னைந்து திருமுறைகள் சமயத்திற்குட்பட்ட சொரூப தோத்திரமாயும், ஆறாவது திருமுறை சமயாதீத பரவஸ்துவினிலக்கணத்தை யுள்ளடக்கி நிற்கும் தோத்திரப்பாக்களாயும், அதிலும் அத்திருமுறை முன்புள்ள அருட்பெருஞ் ஜோதி அகவற் பாவானது அவ்வள்ளற் பெருமானுக்கு அருள் தரிசனம் உண்டாங் காலையில், அருளிச் செய்ததையும் உணரப் பெற்றேன்” என்று குறித்தார். வேதத்துள் ஸ்ரீருத்திரம் போல அருட்பாவுள் அருட்பெருஞ்ஜோதி அகவல் விளங்குகிறது. ‘இஃது அருட்பாவின் அட்டவணை’ என்று அழகரடிகளாரும் திரு.வி.க வும் பாராட்டுகின்றனர்.
 
மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் பெருமான் தங்கியிருந்த போது, அருட்பெருஞ் சோதியின் நிறையருளில் திளைத்த ஞானப் பெருக்கால், அவ்வகவலை ஓரிரவிலேயே அடிகள் எழுதி அருளினார்கள். அருட்பெருஞ்ஜோதி என்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி என்று முடியும் இதனைப் பொருளறியாது ஓதினாலும்கூட, அருட்பெருஞ்ஜோதி என்னும் மகா மந்திரத்தை ஓராயிரம் முறைக்குமேல் உரைத்த புண்ணியம் நமக்கு உண்டாகும். அளவாலும், பொருளாலும், அருளுணர்வின் செறிவாலும் விழுமிய இவ்வகவல் தோத்திர அழகும், சாத்திர நுட்பமும் வாய்ந்தது. ஆகமங்களில் பரந்தும், அறிவியலில் சுரந்தும் உள்ள உண்மை விளக்கங்கள் எல்லாம் இவ்வகவலில் சிறந்து தோன்றுகின்றன. 1596 அடிகளால் அமைந்த இவ்வகவல் தமிழிலக்கியத்திலேயே மிகப்பெரிய அகவலாகும். சுவாமிகளின் திருக்கரத்தாலேயே 24 தாள்களில் கடுக்காய் மையில் எழுதப்பெற்ற ‘சுந்தரக்கை சாத்திய திருஏட்டு’ வடிவில் இவ் அருட்பெருஞ்ஜோதி அகவல் இன்றுவரை சாலையில் இருந்து வருவது நம் தவப்பயனாகும்.
 
உயிர்களின் தோற்றம், திருவருள்திறம், ஐம்பூத நிலைகள், ஐந்தொழில், ஆறந்தங்கள், ஏழு திரைகள், கரும, யோக, ஞான சித்தியின் விளக்கம், ஞான சித்தி அனுபவம், அருட்பெருஞ்ஜோதியின் அருமை பெருமை, ஜோதியை உறவு நிலையில் வைத்தழைக்கும் உரிமை உணர்வுகள், சாகாக் கலை முதலிய அருட் செய்திகள் அகவலின் நூற்பொருளாக அமைந்துள்ளன. சன்மார்க்க உலகுக்குச் சத்திய ஞானசபையை வழிபாட்டு நிலையமாகவும், அங்கே ஓதி உருகும் தோத்திர நூலாக அகவலையும் அமைத்துச் சபையைச் சிந்திப்பதும், அகவலை வந்திப்பதும் நாம் கடனாகக் கொள்ள வேண்டும் என்று பெருமான் குறிப்புக் காட்டினார்கள் போலும்!
 
சித்தி நூற்றாண்டு விழா நினைவாக வள்ளற் பெருமான் கருத்துக்களை மேலும் பரப்புவதற்கான வகையில் பல நூல்கள் வெளியிட வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்குத் தோன்றியது. அதன் விளைவாக ‘வள்ளலார் வாழ்வும் வாக்கும்’, ‘வள்ளலார் கண்ட ஒருமை வாழ்வு’ முதலிய நூல்கள் இராமலிங்கர் பணிமன்றத்தில் வெளியாகியுள்ளன. திருவருட்பா முழுமைக்கும் உரை வேந்தர் பேராசிரியர் திரு ஒளவை துரைசாமி அவர்களை உரை எழுதுமாறு வேண்டி மூன்று திருமுறைகளுக்கு உரை எழுதும் பணி நிறைவேறியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் அதனை வெளியிட இசைந்துள்ளது. திருவருட்பாவில் சில பகுதிகளுக்குச் சில உரைகள் அவ்வப்போது வெளி வந்துள்ளன. ஆயின் அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு விளக்கவுரை ஒன்றும் இதுகாறும் எழுதப்பெறவில்லையே!
பாட்டின் பொருள் உணர்ந்து பயில்வதற்கு ஏற்ற வாய்ப்பில்லையே என்று பலகாலும் நான் எண்ணிவந்தேன்! ஆனால் திருவருள் இருந்த திறம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
 
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தவஞானப் பயிற்சியும் தத்துவ முதிர்ச்சியும் கொண்டு அரிய துறவுநிலையில் வாழ்ந்துவரும் பெரியாராவார். 1910 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் தோன்றிய இவ்வருளாளர் இளம் வயது முதலே அருள்தொண்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திருவருட்பாவில் பேரீடுபாடுடைய தவத்திரு சபாபதியடிகளிடம் சுவாமிகள் அருளுபதேசம் பெற்றதோடு திருவருட் பிரகாச வள்ளலாரின் அருட் காட்சியையும், அவர்தம் இயற்கைக் கற்பூர மணத்தையும் ஒருங்கே அடையப் பெற்ற பெரியாராகச் சுவாமிகள் விளங்குகின்றார்கள். சன்மார்க்க உண்மைகளை விளக்குகின்ற பல அருள் நூல்களை இயற்றியுள்ளார். அவர்கள் திருவருட்பாவுக்கு அரிய விளக்கங்கள் எழுதி இருப்பதையும், அருட்பெருஞ்சோதி அகவலுக்கு ஒரு பேருரையை எழுதி வைத்திருப்பதையும் அறிந்து நான் பெரிதும் மகிழ்ந்தேன். அவர்களைக் கண்டு நான் உரையாடிக்கொண்டிருந்தபோது எவ்விதத் தடையும் கூறாமல் அருள் உணர்ச்சியோடு இவ்வகவல் உரையினை அச்சிட்டுக் கொள்ளுங்கள் என்று என்னிடம் அன்போடு வழங்கினார்கள். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. சன்மார்க்க உலகத்திற்கு அவர்கள் வழங்கிய நன்கொடைக்கு நாம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
 
இவ்வுரை சுவாமிகளின் அருளனுபவத்தையும் அறிவாற்றலையும் அழகுறக் காட்டுகின்றது. சுவாமிகளின் புதிய விளக்கங்கள் பலகால் அவர்கள் செய்த ஆராய்ச்சியின் பயனாக வெளி வந்துள்ளன. ஆடம்பரம், விளம்பரம் விரும்பாமல் அமைதியாக இருந்து அவர்கள் ஆற்றிவந்த இப்பணிக்கு ஈடில்லை. ஞானசபைத் திருப்பணி நடந்து வரும் இக்காலத்தில், அகவலின் விளக்க உரை நூல் வடலூர்த் திருநாளாகிய இவ்வைகாசி 11ல் வெளிவருவது பெருமானின் திருவருட் குறிப்பேயாகும் என்று கருதுகிறேன்.
 
இந்த நூலை ஆர்வத்தோடு அழகுற வெளியிட்டுள்ள நாவல் ஆர்ட் அச்சகத்தாரின் உரிமையாளர் திரு. நாச்சியப்பன் அவர்களுக்கு எங்கள் நன்றி. அச்சக புரூப் பார்த்தல், திருத்தல் முதலிய பணிகளைச் சுவாமிகளே செய்தார்கள் என்றாலும் சென்னையில் அப்பணிகளைச் செய்த பேராசிரியர் திரு.மு. இராமலிங்கனாருக்கும் நம் நன்றி உரித்தாகுக. அகவல் வெளியீட்டு விற்பனையில் வரும் நிதி முழுவதையும் வடலூர் ஞானசபைத் திருப்பணிக்கே வழங்குவதென இராமலிங்கர் பணி மன்றம் முடிவு செய்துள்ளது. எனவே சன்மார்க்க உலகம் இந்த அருள் நூலை வாங்கிப் பெரும் பயன் எய்துமென நம்புகிறோம்.
 
“வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே!”
 
இராமலிங்கர் பணிமன்றம் அன்புள்ள,
சென்னை -86. நா. மகாலிங்கம்
18-5-74
 
PRELUDE
 
The Boundless Benevolent Effulgence is known as Arutperunjothi in Tamil language. Benevolence or Compassion or Karuna is the innate nature of the Almighty. This compassion emanates as fivefold aspects namely 1. matter, 2. energy, 3. intellect, 4. spirit and 5. grace, Man, when he attains perfection realises that the Compassionate Effulgence is the source of all that is manifested and unmanifested.
 
The true of this Effulgence has not been realized so far. Man, endowed with reasoning mind, is slowly rising from the physical plane and making faltering steps towards the spiritual plane. This, he is able to achieve by trail and error through many births in his long journey towards perfection. His intellectual faculty constitutes the middle plane from where he can either look down at the material/physical world or look up in wonderment at the spiritual plane. When he looks up, he comprehends, though partially, truths about spirit, soul and God.
 
Many of the oriental sages were adepts in comprehending the higher realms of spiritualism. By sheer concentration of their minds on the ultimate reality, they were able to perform miracles called siddhis. They also had charted out ways and means to attain these occult powers. They focused all their attention on the soul from where they drew all their inspiration and spiritual powers. Various religious and philosophical systems came into existence during this time. The most discussed among them in Advaita.
 
Since all mystical powers and experiences originate from the soul, its was considered to be Divinity Itself and the perennial source of our lives. It was also held that we are but eternal souls temporarily encased in this physical body. The followers of Advaita thought that the grace of the Lord would deliver us from this physical imprisonment. Advaita preaches that Soul and God remain as one without duality. The aim is to merge this Soul into God-head and become an inseparable entity.
 
But a serious question arises with this hypothesis. How can one hold one’s consciousness without a vehicle to hold it? The physical body is like the glass of an electric bulb. As long as the bulb is intact light will glow from the bulb. The moment the bulb cracks, the glow stops emanating. Similar is the case with the physical body. When it is dropped and the principle of consciousness is merged with the Almighty, it ceases to be functional. But the philosophers of Advaita insist that this illusory body is only needed till the principle of consciousness merges with the Brahman. They maintain that after merger we can drop the mortal frame and remain in oneness with God forever. They conveniently forget that though the soul is eternal in existence, such existence alone cannot be called as illumination. To get illumination and divine experience, some sort of vehicle (either Suddha or pranava or Gnana) is needed throughout eternity.
 
Saiva Siddanta holds a different view in the realisaiton of oneness with Siva, the Supreme Being. It states that realization according to Advaita is only speculative and as such the soul can never get rid off its bondage. Soul has no inherent or active power which makes it free from bondage. Only through the grace of Siva, the bondage is removed. Only then can the soul be able to merge with Siva. Even here the soul in its divine oneness loses its identity and individuality and becomes more or less a non-entity.
 
Thus almost all religious and philosophical systems insist on a body-less liberation. After illumination, they insist, one has necessarily to shed one’s mortal frame. But common sense tells us that one should have the sembalance of a body whether physical, psychical or ethereal to hold on one’s consciousness. Those sages of yore never thought that it is possible to lead illumined lives, at the same time retaining this frame. They taught humanity to aspire for the dizzy height of God-head and in the process to discard its physical body.
 
Such outmoded, stale, fossilised and institutionalised religious and philosophical systems placed more and more fetters one man instead of liberating him. He has been groaning under its weight during the centuries of his existence.
 
Fortunately, the Almighty Himself has come to the rescue of mankind. All the above said miracles, siddhis and liberation are only a fraction of His compassion. The major portion has just now been revealed to mankind through his chosen disciple Thiru Arul Prakasa Vallalar (Ramalinga Swami of Vadalur).
 
The soul of man is nothing but a spark of God and as such is God Himself in miniature. The compassionate Lord exists in every heart in the form of guiding light. Hitherto, man was thinking that he was separated from God and that he had to reach Him through his individual efforts. He has forgotten his divine identity and is searching everywhere except within himself. Now the Compassionate Effulgence has shown that He is within him and He is guiding him and in course of time and with His guidance, he can become He. In other words, God has emanated as a human being in-order to make man realise himself as one with Effulgence.
 
The divine light has descended from lofty heights into the human material frame in order to make it immortal. That way it is different from the ancient paths. From the soul of man, it spreads throughout, transmuting the mortal body into an immortal golden one during the process.
 
Now, what has man to do to make this divine Effulgence grow in his soul? He has to eschew the thought that he is the physical body and alienate himself from its clingings. A life of utter mercy towards all beings must be lived, always thinking about his own smallness in the scheme of things and the greatness of the Lord. By doing so, he will find himself little by little the Divine grace filling up his whole being, body, mind and spirit all included. He will realise that the abode of the Soul and the Effulgence are one and the same, namely the mid portion of the forehead, the place of the third eye. By constantly placing his mind there, he finds the Effulgence spreading the whole of his being. He also will find the inadequacy of the paths of yore and disentangle himself from them. Slowly he funds the Effulgence engulfing him, but without losing his consciousness. He has become It, It has become him and both remain as inseparable single unit. Now he has found himself to be that Effulgence and lives on forever obeying the commands of the Effulgence. In this process nothing is lost; everything is gained.
 
The distinction or the veil between I and Thou is removed leading to the fact that every being is God Himself. We find that God alone is the ‘I’ of everything. Plurality is gone and individuality alone remains. Then and only then man begins to realise that this ‘I am’ can be found in the ninth plane of awareness. The other eight are fire, sun, moon, and stars which belong to the visible part of Effulgence and soul, vital life, mental faculty and physical sense organs, all functioning inside man. Beyond these eight planes, lies the awareness of the Divine Effulgence waiting to be realised.
 
Incidentally, it is interesting to note that the English letter ‘I’ occupies the ninth place in the alphabet. So also in Tamil the letter ‘ஐ’ (I) occupies the same positions. Besides, this identy of ‘I am’ can be realized in the physical body in the region of cerebro spinal cavity which is in the form of ‘ப’ (Pa). This ‘ப’ forms the ninth consonant in Tamil.
 
The Lord of Infinite Light of Grace, Arutperunjothi, was completely realised by Vallalar (Ramalingaswami of Vadalur). He has made all supplications, prayers, songs etc. to the Lord in thousands of verses. This single verse ‘Arutperunjothi Agaval’ contains the essence of all his teachings and is considered as the most valuable jewel in the crown of the Lord.
 
This Agaval or Call Divine is the longest poem in Tamil containing 1596 lines. This outpouring was composed by Vallalar in a single night and at one stretch. This stupendous effort was not due to his material learning or scholarship but through the grace of the Lord. There are many great works in Tamil but none can equal this divine poem in its sublimity.
 
Compassion occupies the core place of the Lord. The universe is enlightened by this compassion. Similarly if man aspires for illumination, he must start his quest from within. This practical way, called அனகநெறி (anaganeri), is the way of Suddha Sanmarga which leads to Sachidananda. He who makes his life anew by following this way, finds Arutperunjothi in one and all and paves the way to Universal Brotherhood.
 
Any work of divine inspiration needs divine guidance for its interpretation. Mere scholarship and a great knowledge of lexicon are of no use in the interpretation of such esoteric works. One has to reach the ninth plane (the plane of the soul) to find out the true significance of such works.
 
The inner guiding Light commanded me on the eve of first of January 1960 to begin this interpretation. A couple of lines were taken every morning for interpretation. The work went on without any break and was finished in 798 days (1596/2) i.e. from 1st January 1960 to 8th March 1962. The much feared conjunction of eight planets in Capricon (makam) took place on February 4th and 5th of 1962. February 4th was a Sunday and also a new moon day.
 
‘‘திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே
வரையெலாம் விளங்க வயங்கு செஞ் சுடரே.’’
 
The above two lines were taken on that day for annotation. It means that ll the obstructing veils were removed and the sun rose splendidly on the mountain tops.
 
This has rather a special significance. We can observe the dawn of the divine Effulgence from the position of the middle star poosam in Cancer. We are safe in the hands of the divine light, which guides all the planets, seen in the opposite sign Capricon, the sea-monster. Westerners were not able to realise this significance because western hemisphere experienced solar eclipse on that day. These are only examples to show how the inner reflects in the outer World.
 
This concept of Siva found in this work is refreshingly different from concepts prevalent during the middle ages. It goes back to prehistorical time. Infinite Divine Light was called Siva by the ancient Tamils. They also called It as Kandazhi (கந்தழி). They came to know of it with their mind’s eye or third eye. The last level of grace is only revealed now through Saint Ramalinga. Since Tamil language is based on Siva Tatva, it has become a proper medium of expression for divine light. But we must remember that Sivam mentioned here has no religious connotation in it. Arutsivam means Arutperunjothi. Sivam contains three letters. The letter ‘சி’ Si is the light ‘வ’ va is the power of grace or compassion and ‘ம்’ m is the life experienced man. So, Sivam means the divine light not only converging into the soul of man but also diverging from there, completely transmuting him into an immortal one in the process.
 
In this Agaval, the evolution of the Universe, through the grace of the Lord, is vividly described. Arutperunjothi is evoked in five hundred alternate lines of the couplets. By going through these lines patiently, we will be able to draw inspiration, realise our own identity with the Lord and live in Him.
 
Not only that. Regular study of this work kindles us and brings out the dormant spiritual personality in us; it also brings a wonderful peace of mind. Purity of mind and deed is absolutely essential. In course of time the divine light makes us feel its presence in our forehead and from then on our transmutation begins.
 
Agaval is to be invoked in the presence of the Inner Light. Also a few lines may be taken for recitation daily and their meaning deeply pondered over. As time goes on, truth will be revealed step by step. This interpretation more or less is a guidebook towards illumination. So, it is earnestly requested to go through line by line slowly so as to get the maximum benefit.
 
An English rendering of this volume is now available. It is earnestly hoped that the ideals of Vallalar spread to all corners o the World. Ahimsa and Universal Brotherhood are ideals which find an honoured place in every heart irrespective of caste creed, religion or nationality. When its is actively practiced, the coming generations will find out earth – a place of peace and prosperity.
 
Fanatics are always there ready to fight tooth and nail any new thought which apparently contradicts the age old beliefs. They are afraid that their ignorance would be exposed and their comfortable way of life might become shaky by these so called unconventional ideas. They cling tenaciously to their old faiths, afraid to transcend and thoughts o the ancestors. When such people go through these pages, they will find to their astonishment that there exists no contradiction at all. Rather they will find these expositions more beneficial to them than the thoughts of yore; they will realise that their regard towards this work and its author Thiru Arutprakasa Vallalar growing day by day. They will come to know for sure that this Divine light is guiding them in their daily lives and avoiding all pitfalls. Finally they come to understand that they live in Him, work for Him, liberated by Him and become ONE WITH HIM.
 
May that day be speeded up by the Grace of Arut Prakasha Vallalar!
 
DAEIOU
 
SARAVANANDA
 
உள்ளுரை
 
முன்னுரை (மூன்றாம் பதிப்பு)
முன்னுரை (இரண்டாம் பதிப்பு)
அணிந்துரை
முன்னுரை (முதல் பதிப்பு)
PRELUDE
அகவல் பொருளடக்கம்
அருட்பெருஞ்ஜோதியில் திருவருட்பா
அருட்பெருஞ்ஜோதி உண்மை விளக்கம்
அருட்பெருஞ்ஜோதிச் சின்னமும் அனுபவமும்
அருட்பெருஞ்ஜோதி அகவல்
உரை விளக்கம் (முதல் பாகம்)
அகவல் பொருளடக்கம்
 
1. அருட்பெருஞ்ஜோதி
2. அருட்சிவம்
3. ஆகம ஆரணம்
4. இகபர நிலை
5. இகபரத்தின் மேற்பொருள்
6. உரைமனம் கடந்த வெளி
7. ஊக்கம் முதலியன அருள்வது
8. பிறவித் தொல்லை நீங்கியது
9. ஏறா நிலைமிசை ஏற்றியது
10. ஐயமும் திரிபும் ஐயமும் நீக்கியது
11. ஒன்று இரண்டு அன்றெனல்
12. ஓதாது உணர்தல்
13. ஔவிய மாதி தவிர்த்த இயல்
14. தனிவெளி சிவவெளி அருள்வெளி
15. சுத்த சன்மார்க்க வெளி
16. சுத்த மெய்ஞ்ஞான சுகவெளி
17. கலாந்த வெளி
18. யோகாந்த வெளி
19. போதாந்த வெளி
20. நாதாந்த வெளி
21. வேதாந்த வெளி
22. சித்தாந்த வெளி
23. தகரமெய்ஞ்ஞான வெளி
24. தத்துவாதீத வெளி
25. சச்சிதானந்த வெளி
26. சாகாக்கலை வெளி
27. ஆரண சிற்சபை
28. ஆகம சிற்சபை
29. வேதாகம ஆதாரம்
30. என்றாதிய சுடர்நிலை
31. சமயங் கடந்த வெளி
32. முச்சுடர்களுக்கு முதற் சுடர்
33. துரியம் கடந்த சுகபூரணம்
34. சுகங்கள் யாவும் அருள்வது
35. இயலுண்மை இன்ப சிற்சபை
36. சாக்கிராதீத வெளிநிறை சிற்சபை
37. சுட்டுதற்கரிய சுகாதீத வெளி
38. அவம் தவிர் சிற்சபை
39. உபய பக்கக் காட்சி
40. சித்திநிலைக்கு ஆகரம்
41. அனாதி சிற்சபை
42. ஆதி சிற்சபை
43. அழியா வரம்தரு அமுதசபை
44. இழியா நலம் அருள் சிற்சபை
45. கற்பாந்த அற்புதம்
46. எண்ணிய அனைத்தும் தரும் சபை
47. அருள்புரி ஆணிப் பொன்னம்பலம்
48. அம்பலமே எம்பலம்
49. பரஞான சிதம்பரம்
50. சபை: பொது
51. வாடுதல் நீக்கிய மணி மன்று
52. ஆடகப்பொது
53. கற்பனை கடந்த சிற்சபை
54. தாயினும் தயவான்ற சவை
55. எண்ணியாங் கின்புறத் தருசபை
56. எம்மையும் பிரியா அம்மையப்பன்
57. பிறிவறியா அறிவுக்கறிவு
58. சாதி மதம் சமயம் காணாதது
59. தநுகரணாதிகள் கடந்த அனுபவம்
60. உன்னும் உணர்வு கடந்தது
61. பொது உணர்வு
62. அளவினில் அளவாதது
63. இறவா வரம் அளித்தது
64. உறவளித்த அருட்பெருஞ்ஜோதி
65. தோற்றா அடிமுடி
66. அவனுக்கவனாம் அருட்பெருஞ்ஜோதி
67. அவளுக்கு அவளான உண்மை
68. அதனுக்கு அதுவாம் விளக்கம்
69. எப்பாலும், அப்பாலும் ஆயது
70. எல்லாமாகியும் அல்லதாம்
71. மெய்ப்பொருள் அருட்பெருஞ்ஜோதி
72. அகிலாண்ட சராசரநிலை
73. சத்தர்கள் தழைத்திட விளங்குவது
74. சத்திகளெல்லாம் தழைக்க
75. ஐந்தொழில் ஐவர்க்கு அளிப்பது
76. பெரிதும், சிறிதும், அரிதும்
77. காட்சியும் ஆட்சியும் ஆயது
78. சித்திகளெல்லாம் அன்புடன் அருள்வது
79. இறவா வரமளித்த அறவாழி
80. நானந்த மில்லா ஆனந்தம்
81. எண்ணிய எண்ணியாங் கியற்ற
82. நீ அது ஆயினை
83. செழுந்தேனும் தெள்ளமுதும்
84. சிவம்பெறு, சிந்தையில் துன்பொழி
85. அங்கங்கிருந்து அருள்வது
86. சகமுதல் முற்றுமாம்
87. சிகர வகர உகர அகர மாயது
88. உபரச வேதியின் பரம் அபரம்
89. அந்தணர் வழுத்தும் மந்தணம்
90. இதய அம்புயத்து அருட்பெருஞ்ஜோதி
91. அடியருக்கே தருவது
92. அன்பருக்குச் சுகம் தருவது
93. பொதுவும் சிறப்பும், புதியதும் பழையதும்
94. பரை ஆதனத்துச் சேதனப் பெருநிலை
95. ஆமயத் தடைதவிர் ஓமயத் திருவுரு
96. என் கருத்துப்படி அருளியது
97. விழைவின் வண்ணம் அருளல்
98. உளம்திரியா அங்கைக்கனி
99. பார் உயப் புரி எனும் உள்ளொளி
100. ஆவியிற் கலந்து திருவுரு தருவது
101. வேதாகம மெய் வழி
102. அருள் ஐயறி வளித்தது
103. சாமாறு அனைத்தும் தவிர்த்தது
104. சிவ சத்தியே சத்தியம்
105. சாவாநிலை தந்தது
106. சாதியும் மதமும் சமயமும் பொய்
107. மனத்தெளிவும் திடமும்
108. திருநெறிப் பொருளியல்
109. உலகம் கருணைச் சித்திச் செயல்
110. குலமும் இனமும் உருவின் தோற்றம்
111. இறைவனும் மதமும்
112. கருநிலை ஈரியல்
113. எண்ணிலா அண்ட நிறை ஒளி
114. தாரகமும் உயிர்க்குயிரும் ஆனது
115. நீடூழி வாழ ஓர் ஆழி
116. மாய்ந்தவர் மீட்டும் வருநெறி
117. எச்சம் நினக்கிலை
118. நீயே நீடுநின் றாடுக
119. முத்திறல் வடிவமும் முன்னியாங் கெய்தல்
120. மூவகைச் சித்தியின் முடிவு
121. கரும சித்திகளை ஆள
122. யோகசித்திகள் அருள்வது
123. ஞானசித்தி யருளல்
124. முத்தி அடைவது சித்தியின் பொருட்டே
125. முத்தி என்பது சாதனை நிலை
126. சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்
127. சிற்சித்தியே ஏகம் அனேகம்
128. அன்பருக்காம் இவ்வின்ப சித்தி
129. எட்டு இரண்டு முதற்படி
130. இப்படியே அப்படியும்
131. பாரிது அடிமுடி
132. ஜோதியுட் ஜோதியே அந்தமும் ஆதியும்
133. சிற் ஜோதியின் இயலுரு
134. நீயே ஆதி
135. அமுதால் அல்லலை நீக்கியது
136. அற்புதம் இயற்றக் கற்பகம் கொடுத்தது
137. கண்களிற் கதிர்நல அதிசயம்
138. அருளறிவில் விரிந்த அருள் நெறி
139. மனப்பதியில் பரையொளி அரசு
140. சக்திகளின் வல்லபம்
141. நான்கிடத் தமர்ந்து நல்லமு தருளல்
142. சூரிய சந்திர ஜோதியுட் ஜோதி
143. பிறிவிலா அறிவே வடிவம்
144. எஞ்சேல் உலகில் அஞ்சேல்
145. மாண்டுழலாது ஆண்டுகொண்டது
146. பற்றொடு அற்றமும் நீங்கியது
147. சார்பு விடுத்த அமயம் தோன்றுவது
148. மறை ஆகமங்களால் ஆய்தற்கு அரியது
149. எல்லாம் வல்ல உனையல்லா தில்லை
150. நவை யிலா வுளத்தில் நாடிய அளிக்கும்
151. கூற்றுதைத்து ஆற்றல் அளித்தது
152. அறிவறியா நாயினை யாண்டது
153. நாயினும் ஈயினும் தாழினும் அருள்வது
154. ஆத்திரம் அளித்தது
155. சோதனை யில்லா சுகம் அருள்வது
156. ஏறாநிலை நடு ஏற்றி ஆறாறு கடத்தியது
157. துயரம் தவிர்த்து ஆபத்து நீக்கியது
158. அருட் குரு ஆகியது
159. உருவமும் அருவமும் உபயமும் ஆகியது
160. அருளமுதம் இருளறுப்பது
161. உளத்திருந்து தெருட்டிய அருணிலை
162. பொருட்பதமும் அருட்பதமும்
163. உளம் சலியாது அருள்வழி நிறுத்தல்
164. அருள் விளக்கால் திரிமல நீக்கம்
165. மனச் சுருள் விரிவு அறுத்த அருள் ஒளி
166. விருப்பு வெறுப்பில்லா அருட்பேறு
167. அருட்பேரும் அருட்சீரும்
168. உளத்திருந் தோங்கும் அலகிலா ஒளி
169. விண்ணிறைந்த ஜோதி
170. காற்றின் விளைவும் நிலையும்
171. அனல் விளக்க நிலையும் அருட்ஜோதியும்
172. புனலின் விளக்கமும் பெருக்கமும்
173. புவியின், அகம், இடை, புறம், விரிநிலை
174. விண்ணிலை சிவம்
175. வளிநிலை சக்தி
176. நெருப்பு நிலை அளவியது
177. நீர், திரைநிலை யளவியது
178. புவி நிலை, சுத்த பொற்பதி
179. மண்ணியல் விரி
180. நீரியல் விரி
181. தீ யியல் விரி
182. காற்றியல் விரி
183. வெளியியல் விரி
184. அகப்புற விரி
185. ஐம்பூதக் கலப்பின் விரி
186. வெளிவகை விரி
187. அண்டப் பகுதி விரி
188. கடல்வகை
189. மலைவளம்
 
*****
 
அருட்பெருஞ்ஜோதியில் திருவருட்பா
 
அருட்பெருஞ்ஜோதி என்ற சொற்றொடர், நிறை அருள் அனுபவத்தால் கண்ட இறை பரம்பொருளின் உண்மையை, உலகவர் எல்லோர்க்கும் உணர்த்தி உய்வளிக்க வந்ததாகும். அகண்ட பேரிறை நிலை, அளவு கடந்த வான் வெளி முற்றும் அனாதியே நிரம்பி, பேருலகெல்லாம் விளங்கியோங்கிப் பெரும் பயனுறச் செய்துகொண்டுள்ளதாகும். அந்த வான் வெளிநிறையொளி தானே, உலகம் யாவுமாய், பொருள்கள் எல்லாமாய், உயிர்கள் எவையுமாய், அவ்வுயிர்களிற் சிறந்த மக்கள் யாவருமாய், மக்களில் அருள் அறிவாய் விளங்கி, அந்த அருள் அறிவால் மெய்யாக உணர்ந்து அடைந்து அனுபவிக்கப்படுகின்ற ஒன்றாக, அதுவே அருட்பெருஞ்ஜோதியாக இருக்கின்றதாம். ஆம். அகண்ட பெருஞ்ஜோதிமயமாய் என்றும் இருக்கும் கடவுள் உண்மை, இன்று எல்லாம் ஆன, எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியாக அறிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது.
 
மேற்படி அருட்பெருஞ்ஜோதி இறை உண்மையைக் கண்டு, அனுபவத்தில் பெற்று, அதுவாகியிருந்து கொண்டு, வெளியிட்டவர் நம் திருவருட்பிரகாச வள்ளலார் ஆவர். வேறு விதமாகக் கூறுவதாயின், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தானே, இதுகாறும் எவருமாய் உள்ளிருந்து விரிந்து அவரவராய் விளங்கி நின்றும், அவ்வுருவத் தோற்றத்தை விடுத்து மறைவுற்றுக் கொண்டும் இருந்தவர், இப்பொழுதுதானே தனது நிறை அருள் அனுபவம் வெளிப்பட்டு என்றும் நிலவும்படி இந்த அருட்பிரகாசர் வண்ணமாய்த் திகழ்கின்றவராகி விட்டுள்ளார் என்பது உண்மையாம். இதற்குமுன் இவ்வண்ணம் ஆனது இல்லை. அதனால் முன்தோன்றி மறைந்த எந்த ஒருவரும் அடையாத பேறு பெற்றுள்ளவர் நம் வள்ளலார் என்றால் அது முற்றிலும் உண்மை! உண்மை!! உண்மையே!!
 
அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மை வெளிப்படுத்தப்படுவதற்கென்றே நம் வள்ளல் அடிகள், சிதம்பரம் இராமலிங்கம் எனப் பிள்ளைப் பேருடன் விளங்கி இருந்தார். அந்தப் பிள்ளைமை உள்ளத்தில் விளங்கின இறையொளியே, தமிழ் மொழிக்கும் அது கொண்டு குறிக்கப்படுகின்ற, கடவுள், இயவுள், செய்யுள், யாவுக்கும் அடிப்படையாய்க் கண்டிருந்தார். அதனால், அவர்க்கு உள்ளும் புறமும் வெளிப்பட்டு விளங்கின மெய்யனுபவக் காட்சியில், எத்தெய்வத்தையும், எப்பெரியார்களையும் கண்டு போற்றியும், பிற எவ்வெவரையும் இரக்கத்தோடு, தேற்றியும் மேல்நிலைக்கு ஏற்றியும் வந்தார். அப்படியே செய்து பக்குவப்படுத்திக் கொண்டும் உள்ளார் என்பதை அருளாளர் காண்பர்.
 
இந்த அருள் ஒளி கொண்டு, அருட்ஜோதியின் துணை கொண்டுதான், நம் பெருமானின் உண்மை வரலாற்றையும், அவர் தம் திருவருட்பா விளக்கத்தையும் உள்ளவாறு கண்டு தெளிதல் வேண்டும். மற்றபடி, கடினபாடு பட்டுப் பலகாலும், பலவிடத்தும் பலவான செய்திகளையும், ஏடுகளையும் தேடித், தேடித் திரட்டி, வகைப்படுத்தித் தொகுத்து, நல்ல முறையில் அச்சிட்டு வெளிப்படுத்துதல் போதாது. ஆராய்ச்சியும், பேருழைப்பும் கண்டு, புறப்புலனெறி உலகம் போற்றிக் கொள்ளக்கூடும்; ஆனால் அருள் ஆட்சியாலும் தயவுப் பணியாலும்தான் எல்லோருக்கும் பெரும்பயன் உண்டாவது திண்ணம்.
 
அருட்பெருஞ்ஜோதியில் திருவருட்பாவைக் காணவேண்டும் என்பது முக்கியம். அருட்பெருஞ்ஜோதியில் (அருட்பெருஞ்ஜோதியினால், அருட்பெருஞ் ஜோதி கண்டு திருவருட்பாவைக் காணவேண்டுமேயன்றி) அருட்பெருஞ்ஜோதியில்லாத, இல்லாமல் அருட்பாவைக் காணச் சொன்னதாகக் கொள்ளக்கூடாது. அருட்பாவில் அருட்பெருஞ்ஜோதி இருக்கின்றது உண்மைதான். எனினும், அக அருட்கண் கொண்டு காணாவிடில், அருட்பாவில் அருட்பெருஞ்ஜோதி இருந்தும் இல்லாதது போன்றேயுள்ளதாம். ஆகவே, அருள் ஒளி கொண்டு இத்திருவருட்பாவை நோக்கும் போது, இதில் விடுபட்டுள்ள முக்கியக் குறிப்புகளும், பகுதிகளும், முடிந்த திரிதேக சித்தி வாழ்வு அனுபவமும் இணைக்கப்படவேண்டியதின் அவசியம் நன்கு விளங்கும். அங்ஙனம் இணைக்கப்பட வேண்டியவை ஈண்டு குறிப்பாம்.
 
1. திருவருட்பா-பெயர்ச் சிறப்பு
 
திருவருட்பா, திருவருளால் பாடப்பெற்றது என்பதில் சிறப்பு ஒன்றுமில்லை. ஏனெனில், திருவருளின் துணை இன்றி, எவராலும், எந்தப் பாவும் இசைக்கப்படுவதில்லை. ஆகையால் தெய்வ நம்பிக்கையும் பக்தியும் கொண்டு பாடப்பெற்றுள்ள எவருடைய செய்யுளும் அருட்பா எனக் கொள்வதில் குற்றமுமில்லை, தவறுமில்லை. எனினும் இதுவரை வெளியான பெரியோர்களின் பாக்களுக்குத் திருவருட்பா என்ற பெயர் வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது வள்ளலாரின் நூலுக்கே இந்தத் திருவருட்பா என்ற பெயர் வெளியாகி நிலவவும் நேர்ந்துள்ளது. மேலும், இந்தப் பாக்களும், இதனுடன் விளங்கும் பிற பகுதிகளும், இதுகாறும் அறிந்து அடையப்பெறாத, அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மையை அனுபவத்தில் அடையப்பெற்ற தனிப்பெருஞ் சிறப்பு கொண்டிலங்குகின்றதால், இதற்குமட்டும் திருவருட்பா என்ற சிறப்பு மிகப் பொருந்துவதாயுள்ளதாம். எனவே, இத்திருவருட்பா, திருவருளால் பாடப்பெற்றதோடு, அவ்வருள் நிறை பரம்பொருளை யுள்ளவாறு கண்டு அடையும்படி செய்வது என்று உணர்த்தப் பெறுகின்றோம். இதற்கு இதனை உலகுக்கு வழங்கி விளங்கும் வள்ளலே சான்றாக உள்ளார். இதனால்தான் திருவருட்பாவின் உயர்வு என்றும் சிறந்து திகழ்வதாம்.
 
2. குறிப்பு விளக்கங்கள்
 
திருவருட்பாவில் தோத்திரப்பகுதி மிகுதியே எனினும், இது வெற்று பக்தி நூல் அல்ல. அப்பக்திப் பாடல்களும்கூட பழைய தெய்வநிலைப் பேற்றைக் கடந்து, முடிவில் அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் நிலை எய்தவே உதவ வந்தனவாகக் கொள்ளவேண்டியுள்ளதாம். ஆதலின், அருள் ஒளி கொண்டே எப்பாடலுக்கும் மெய்ப்பொருள் கண்டு தெளிதல் பொருந்தும். அந்த அருள் ஒளியைப் பெற வேண்டித்தான் உரைப் பகுதியாகவும், குறிப்புகளாகவும், விளக்கங்களாகவும் பல இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை:-
 
(அ) ஜீவகாருண்ய ஒழுக்கம்.
(ஆ) உண்மை நெறி.
(இ) விண்ணப்பங்கள்.
(ஈ) சன்மார்க்கக் குறிப்பு விளக்கங்கள் முதலியன.
 
3. மகாவுபதேசம்
 
இதில்தான் ஜீவதயவும், சத்விசாரமும் எவ்வளவு முக்கியம் என்பதும் பழநெறிப்பற்று மேலேறவிடாதென்பதும், ஒன்றான அருட்பெருஞ்ஜோதியையே கொண்டு உய்வு பெற வேண்டும் என்பதும் குறித்து மிக விளக்கமாக வழங்கியுள்ளார். இதன் வழிநின்று பயின்ற அருட்பெருஞ் ஜோதி அகவற்பாவை ஓதினால் உண்மை எல்லாம் விளங்கும். முடிவில் ஓதரிய உண்மையாம் அருட்பெருஞ் ஜோதி சித்தியின் விளக்கமும் தெளிவாம்.
 
4. வள்ளல் பெற்ற சித்தியின் தனிச் சிறப்பு
 
முன்னோர் அடைந்த முடிவு நிலை, உடலை நீத்து, இறையிற் கலந்து மறைந்து ஒழிவதேயாம். கன்ம சித்தி, யோகசித்தி, ஞானசித்தி பெற்றவர்களும், காயகல்ப சித்தி பெற்றவர்களும், சூக்கும ஒளியுடம்பு பெற்ற தேவதேகிகளும், இறையடியிற்றங்கி பிறவா நிலையுற்ற முத்தர்களும், பூரண சித்தி நிலை கொண்டு விளங்காது போனவர்களேயாவர். அன்னோர் முத்தி முடிவு ஒரு முடிவன்று! அருட்பெரும்பதி மயமானோர் அதுவாகி, அழியாது, மறையாது அருட்பெருஞ் சித்திச் செயலோடு என்றும் வாழ்ந்து கொண்டிருத்தல் வேண்டும். இந்நிலையே நம் வள்ளல் பெற்றது. முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம் என்றும், சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்றும், சித்தியின் பொருட்டே, முத்தியை அடைவது என்றும் அனுபவத்தில் கண்டுதான் அகவலின்கண் குறித்துள்ளார்.
 
முன்னோர், கடவுள் நிலையைத் தமக்கு வேறாக அயலாகக் கண்டு, திருவருளால் அடைய முயன்று முடிவில் அத்திருவருளும் கூட்டிவைக்க, அவர்களும் அக்கடவுள் நிலையிற் கலந்து, கரைந்து மறைந்து போயினர் என்பது உண்மையே. இந்த ஒரு முடிவுதான் சைவ சமயத் தனிப் பெருமை கொண்ட மணிவாசகர் பெற்ற, தில்லை சோதியில் மறைந்த பெருநிலையாக சைவ உலகம் போற்றிக் கொண்டுள்ளது. இப்படி மறைவுறு முன், பெற்றிருந்த அனுபவம், “கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை, என்னையும் இருப்பதாக்கினன்”, என்ற திருவண்டப் பகுதி அகவலிற் கூறியுள்ளதும் மெய்யே. அன்றைய அனுபவ நிலை அவர் உடல் நிலையிலிருந்து, திருவருளால் பாச நீக்கம் பெற்ற ஆன்மாவாய், சிவானந்த பரவச நிலையினின்று கண்டு, தான் அதுவாய் முன்னும், பின்னும், என்றும் இருப்பதையுணர்ந்து வெளியிட்டதாகும். அந்த ஆனந்த அனுபவம் மணிவாசகராய் இருக்கும்வரை இருந்ததும் உண்மையே. ஆனால், அவர் தில்லை சோதியில், இல்லையாம்படி மறைந்துவிட்ட தருணம்,
 
“அவர்க்குத் தனி இருப்பு மில்லை, ஆனந்தானுபவமுமில்லை
தனி வாழ்வுமில்லை என்பதுதான் சத்தியம்”.
 
நம் அருட்பிரகாசரின் நிலை வேறு. இவர் கடவுளை அடையச் செல்லவில்லை. கடவுளே இவர் தம் வடிவையே அருட்பெருஞ்ஜோதி அனுபவம் என்றும் கொண்டு விளங்கற்கான சுத்த பிரணவ ஞான தேகமாக ஆக்கிக் கொண்டு திகழலாகிவிட்டார்.
 
“என்சாமி எனதுதுரை என்னுயிர்நா யகமே
இன்றுவந்து நான் இருக்கும் இடத்திலமர் கின்றார்
பின்சாரும் இரண்டறை நாழிகையி லேயெனது
பேருடம்பிற் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்!!”
 
என்றபடி அருட்பெருஞ்ஜோதிபதியே இந்த அருட்பிரகாச வடிவிற் போந்து அற்புத சித்தியோடு விளங்குதல் உண்மையாகும். இனிமேலும், அந்த ஒன்றான கடவுள்தானே எல்லோருமாய் உண்ணின்று விளங்கலாலே, அவர்தம் திரிதேக சித்திப் பேறுதான் ஒவ்வொருவருக்கும் ஆணை செய்யப்பட்டுள்ளது என்பது முழு உண்மையாகும். உலகமெல்லாம் இவ்வுண்மை கண்டு அடைந்து, உய்யும் வழிவகை செய்யவேண்டும் நம் திருவருட்பா.
 
அருட்பெருஞ்ஜோதி வாழ்க!
 
ஓம்
 
அருட்பெருஞ்ஜோதி உண்மை விளக்கம்
 
அருட்பெருஞ் ஜோதியே அனாதி நிலைப்பொருள்
அருட்பெருஞ் சக்தியே யாவும் ஆயது
அருட்பே ராற்றல் அகநின் றியக்க
அருட்பேருலகத் தணுமுதற் பொருள்களும்
அருட்பெரு மியக்க ஆக்க மனைத்தும்
அருட்பெரு முயிருணர் வுடலிடை தோற்றிட
அருளறி வோங்க ஐம்புல னிகந்து
அருளறி வுக்குமுன் ஆறறி வாமனம்
அருணனி யுற்றிட அகத்தி லொன்றி
அருணிலை மோனத் தான்ம ஞானமாய்
அருளலா யோக சித்தியுங் கடந்து
அருளது தானே அருட்பெரு நிலைகொள
அருட்பெருஞ் சோதி அனுபவ மாவது
அருட்பெருஞ் ஜோதி அகவல் லமையிது
அருட்பிரகாசர் அகநின் றெழுந்து
அருட்பிர காச வடிவது கொண்டு
அருட்பிர பஞ்சத் தார்ந்திடு மக்கட்(கு)
அருட்பிர சாதம் அளித்தழி யாதுற
அருட்பெரும் ஆனந்த அற்புதச் சித்தியோ(டு)
அருட்பெரும் வாழ்வில் விளங்கச் செய்வது;
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மை
அருட்பெரும் பக்குவம் அடைந்திடா வரைக்கும்
அருட்பெருந் தன்மையாய் அகமறைந் திருந்து
அருட்பெரும் உலகுயிர்த் தோற்றம் யாவுமாய்
அருட்குண மனிதனில் அவனே தானாய்
அருட்பயன் அளித்தும் அடைந்தும் விளங்கலை
அருட்பெருஞ் ஜோதி அகவலிற் காண்பாம்,
அருட்பெருஞ் ஜோதி அதுதா னான
அருளொளி வள்ளல் நம் அகமும் புறமும்
அருளொளி கூட்டி அகிலமீ தென்றும்
அருணிறை இன்பொடு அழிவிலா துலவிட
அருணிறை வளிப்பது ஆணை ஆணையே.
 
(விளக்கம்)
 
அருட்பெருஞ்ஜோதி உண்மை விளக்கம் என்ற மகுடத்துடன் இங்கு நம் திருவருட்பிரகாச வள்ளலாற் கண்டு, அடைந்து வழங்கிய அருட்பெருஞ்ஜோதி அகவலின் குறிப்பும், விளக்கமும் பயனும் விரித்துரைக்க நேர்ந்துள்ளது. அருட்பெருஞ் ஜோதியை உபாய முறையால் ஓங்கார வண்ணச் சித்திர வடிவில் அமைத்து, அதனையே விரித்து “அருட்பெருஞ்ஜோதி உண்மை விளக்கம்” என்ற தலைப்பாக நிறுத்தப் பெற்றுள்ளது. இதுவே, பிரணவத்தின் அடிநடு முடிவாம் அ-உ-ம் கொண்டு விளங்குவதாய், நிறைஞான முழுமதிக்குரிய பதினாறு கலை கொண்டது சுட்டும் பதினாறு எழுத்துடைய மகுடமாய்த் திகழ்கின்றதாம். ஓம் வடிவம், உபாய ஞானம் குறிப்பதும், இத்தலைப்பே அகநிறை உண்மை ஞானம் கொண்டதுமாய்ப் பின், விரிந்திலங்கும் செய்யுள் அனுபவ ஞான விளக்கம் குறிப்பதாயும் கொள்ளலாம். இவற்றில் முன்ஞானம், பின்ஞானம் இரண்டுமே, உண்மை ஞான அனுபவ ஞானமாய், பதினாறோடு பதினாறு சேர்ந்து முப்பத்திரண்டு கலை நிறைவாய் விளங்குவதாம். இக் குறிப்பு தரும் செய்யுள் ஈண்டு முப்பத்திரண்டு அடிகொண்டதாய் அமைந்துள்ளது. இது திருஞான சம்பந்தர், மணிவாசகரின் ஞானானுபவத்தையும், அறங்கள் 32 என்றதன் கருத்தையும் கொண்டதாய் விளங்குவதாம்.
 
அருட்பெருஞ்ஜோதியின் தத்துவமும், தத்துவாதீத அனுபவ உண்மையும் ஒருவாறு அகவல் ஒளியிற் காண்பாம். அறிவரிய கடவுள் உண்மையை ஏகதேச அருள் உணர்வாற் கண்ட பெரியோர்கள், கடவுள் விளக்கத்தை வெளிப்படுத்தச் சில பல உபாய முறைகளைக் கையாண்டனர். எல்லாம் உண்மையைச் சுட்ட வந்த கற்பனைகளேயாம். எந்த ஒரு வடிவமும், அதற்குரிய ஒரு கற்பனைப் பெயரும் கடவுளர் உண்மையை உள்ளபடி காட்டுவதாயில்லை. அறிவாற் சுட்டி, அறிந்ததெல்லாம் பரம்பொருளின் (ஏகதேசங்களே) சின்னஞ்சிறு கூறுகளே யன்றி நிறைவுடையதல்லவாம். இவன் கடவுளுக்கு வேறாய் இருப்பதாகவே கருதி அடைய முயன்று முடிவில் கருதிய பொருளிற் கலந்து மறைந்து போகத்தான் முடிந்ததாம். பகுத்தறிவாலும், தத்துவ கற்பனா உணர்வாலும் கண்ட முடிவு, மனிதனை அழிவற்ற நல்லின்ப வாழ்வில் தழைத்தோங்கச் செய்யவில்லை. இதுசமயம் பரம்பொருளின் நிறை உண்மை தானே அருட்பெருஞ்ஜோதியாக வெளிப்பட்டுள்ளது. இந்த அருட்பெருஞ்ஜோதி, கற்பனாதீதமான எல்லாம் வல்ல நித்திய மெய்ப் பொருளின் உண்மையை அருள் உணர்வால் உணர்ந்து, அகமிருந்து அனுபவித்து ஆனந்தமாய்த் திகழச் செய்கின்றது பக்குவ மனிதனை.
 
அந்த அருட்பக்குவ நிறை மனிதர் இன்று நம் திருவருட்பிரகாச வள்ளலாராகத் திகழ்கின்றார். இந்த அருட்பிரகாசர் யார்? நித்தியமாயுள்ள அருட்பெருஞ்ஜோதியே, அகண்ட பிரபஞ்சத்து எல்லாப் பொருட்களாயும், உயிர்களாயும், இயல்களாயும், செயல்களாயும், தத்துவங்களாயும் தோன்றித் தோன்றி விளங்கி வந்து, இப்போது அதுவே (அந்த அருட்பெருஞ்ஜோதியே) இந்த அருட்பிரகாசராகி, அக-அனக நிறை அனுபவத்தோடு விளங்குகின்றார் என்பது உண்மையாகும். இவ்வுண்மையை அறியாதார், இந்த ‘அருட்பிரகாசர்’ என்ற பெயர், பிறர் மூலமாகப் புனைந்துரைக்கப்பட்டதுதானே என்பர்! உண்மையில், அருட்பெரும்பதியே யாவருள்ளும் இருந்து அவரவராய் விளங்கி, அருள் விளை ஆடலைப் புரிகின்றதை அறியும்போது, அந்த அருட்ஜோதி பதியே, அயலொரு உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தி, வள்ளலாருக்கு இவ்வருட்பிரகாசப் பெயரை வழங்கச் செய்துள்ளது என்று தெளியலாகும். கடவுட் பேரருளின் பெரும் உண்மை எவ்விடத்தும் எவ்வெவற்றின் வண்ணமாயும் என்றென்றும் இருந்து வந்தும், இத்தருணமே ஒரே ஒரு ஆன்ம சிற்றணுவிலே, நிறை இயல்பொடு உணர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றதாம். அந்த ஒரு சிற்றணுவே வள்ளல் உள்ளமாக, சத்திய ஞான சபையாக விளங்கி, அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தை வெளியாக்கி விட்டுள்ளதாம். எங்கும் அருட்பெருஞ்ஜோதியே எல்லாம் அருட்பெருஞ்ஜோதியே என்று இன்று நம் உள்ளத்திலிருந்து உணர்கின்றோம் நாம். இதுகாறும் இந்த உண்மை விளங்காதிருந்தது, வெளிப்படாதிருந்தது, புறநிலை அனுபவமே அறிந்து கொள்ளப்பட்டு வந்தது. காரணம், அருள் விளக்கம் நம் உள்ளத்தில் ஏற்படாததே. அந்த அருள் உள்ளும் புறமும் எப்போதும் இருந்து செயல் புரிந்துவருகின்றது உண்மையே எனினும், அபக்குவ அறியாமைக் காரணமாய் அக மறைந்திருந்தது போல் தோன்றுகிறது. உண்மையில் அந்த அருளை எதுவும் மறைத்திருக்கவில்லை. அவ்வறியாமைதான் பெரும்மறைப்பாக இருந்து, அது நீங்க உண்மை உள்ளபடி விளங்குகின்றதாம்.
 
ஆகவே, எல்லாம் வல்ல அருட்பேராற்றல்தானே அறியப்படாதவரை, அதுவே, புறத்துற்ற எல்லாமாய்த் திகழ்கின்ற உண்மையும் அறியப்பட முடியாதிருந்தது. அகநிலையில் நித்த நிறைவாயிருந்து கொண்டு புறத்தே தேகாதி பிரபஞ்சம் எல்லாம் தோற்றி விளங்கச் செய்து கொண்டுள்ள பரம்பொருள், தன் பேரருளாலேயே யாவையும் விளங்கச் செய்கின்றதோடு ‘தானே’ ஒவ்வொன்றின் உண்ணின்றும் விளங்குகின்றது உண்மையே. மனிதன் தன்னை புறத்தானாய்க் கருதிக் கொண்டு அகநிலைப் பதியோடு கூட முயன்று வந்தது தவறே. அகநிலையிற் கலக்கக் கருதிச் சென்றொழிந்தது சரியல்ல. அந்த ஒழிவே, புற அழிவே முடிவெனக் கொண்டிருந்ததும் சரியல்லவாம். இப்போது உணர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்ற அருள் உணர்வால், அந்த அகப்பூரணத்திருந்தே யாவும் புறத்திலங்கும் உண்மையாய் விளங்கலால், தானும் அப்படி அகமிருந்து புறநிலை கொண்டிலங்குவதையும் அறிகின்றான் மனிதன். இப்படி அகமிருந்து அருட் பேராற்றலோடு வாழ்கின்ற மனிதன் அருள் ஒளிமயமாய் இருந்து கொண்டு அருட்செயல் புரிந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதியாகவே வாழத் தலைப்படுகின்றான். இதுதான் சமய மதாதீத சுத்த சன்மார்க்க வாழ்வாக உலக மக்கள் சமுதாயம் முழுமைக்கும் ஒத்ததாய்த் திருவருளால் வெளியாகியுள்ளது இன்று.
 
உலகில் மேற்படி அருட்பெருஞ்ஜோதி வாழ்வு வெளிப்பட்டு எல்லோருக்கும் பெருநலம் வழங்க இருப்பதால், அந்த சுத்த நெறி முறையை விரித்துக் கூற வந்ததே இந்த அருட்பெருஞ்ஜோதி அகவல் ஆகும். இதனால் இவ் அகவலின் பொருள் விளக்கம் அருள் நிலை நின்று, அருட்பெரு நோக்கோடு காண வேண்டுவது முக்கியம். பழைய நெறி முறைகளைப் பயின்று, அவற்றின் கருத்துக்களை அடிப்படையாய் உளம் கொண்டு, இவ் அகவல் அடிகளை ஆராயப் புகின் மெய்ப்பொருள் விளங்காது. இதில் பழ மரபுகள் ஒட்டியும் தழுவியும், விளக்கியும் சில குறிப்புகள் வந்துள்ள இடங்களில் கூட அருட்பொது நோக்கு கொண்டு எவரும் ஆய்தல் வேண்டும். அப்போதுதான் இந்த அருட்பெருஞ்ஜோதியின் உண்மையே முன்வந்த எல்லாவற்றிற்கும் உரிய உண்மையாய் இருந்து அது அதுவாய் இலங்கினதாகச் சந்தேகமின்றித் தெளிந்து ஏற்றுப் பயனுறலாகும்.
 
உலகம், மக்கள் எல்லோருக்கும் நல்லின்ப வாழ்வு பெற்றுத் தழைத்து விளங்கற்கரிய இடமாக அருட்பெருங்கடவுளால் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றான அருட்பெருங்கடவுளை, அருட்பெருஞ்ஜோதியாக இன்று எவ்வெவருள்ளும் இருந்து விரிந்து விளங்குவதை பேரருள் ஞானத்தாலே உணர்கின்றோம். இவ்வருள் ஞானம் கொண்டு அன்போடு கூடி வாழத் தெரிந்து கொள்ளாததாலேதான், இதுவரை உலக மக்கள் சமுதாயம் அவத்தைப்பட்டு அழிந்தும், அழிவைவிட மேலும் மேலும் பெருகிக் கொண்டும் இருக்கின்றதாம். பழநெறி முறையால் ஒன்றான அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது. அந்தப் பழநெறியையும் கூட முதலில் ஒரு நல்ல குறிக்கோளோடுதான் முன்னோர் வகுத்தளித்தனர். பலரும் அம்மாதிரி சில பல கொள்கை கோட்பாடுகளையும், வந்தனை வழிபாடுகளையும் ஏற்படுத்தினதினால், அவற்றைத் தழுவிய பின்னோர், வேறு வேறு பிரிவினராய்க் கூடி மக்கள் சமுதாயம் ஒன்று பட்டு அகவுரிமையோடு வாழமுடியாது செய்துவிட்டனர்.அதனால் உலகில் இன்று பேரவத்தையே பெருகி இருக்கின்றதைக் காண்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். மாறவேண்டும் என்பதுதான் நல்லோர் எல்லோரும் விரும்புகின்றனர். அதே சமயம் தம் சமயமத நெறிமுறைகளைக் கைவிடத் துணிகின்றார்களிலில்லை பலரும். இதற்கு என்ன செய்வது? இதற்கு முதலில் செய்யவேண்டுவது யாதெனின், அருட்பெருஞ்ஜோதியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டியதே முதற்படியாகும். ஒவ்வொருவருக்கும், உடம்பும், உயிரும், உணர்வும், வாழ்வும் தனித்தனியாக இருக்கின்றது. தனித்தனி ஒவ்வொருவரும் நல்லின்ப வாழ்வு பெற உரிமை உடையவர்களே. தன்போல் பிறரும் நலம் விழைவது இயல்பே என்பதை உளம் கொண்டு, எவர்க்கும் துன்பஞ் செய்யாது, அன்பு செய்திருப்பது நம் கடமையாகும். அன்புச் செயலால்தான் மெய் இன்பம் உண்டாகும். இந்த உலகில் எவ்வுயிர்க்கும் இன்பம் உண்டாகவே இயற்கை நியதி முறை ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வியற்கை இன்பச் செயல் முறைக்குக் காரணமாகிய இயற்கை நியதி அல்லது விதிமுறை, பேரன்பு அல்லது அருளின் அடிப்படையில் தோன்றியுள்ளது என்பதை அறிவோம். அந்த அருட்பெரும் அடிநிலையே அருட்பெருஞ்ஜோதியாய் எவர் உள்ளும் இருந்து அன்புச் செயல்புரியத் தூண்டிக் கொண்டிருக்கின்றது. ஆகவே, அன்புச் செயல் பெருகப் பெருக அருட்பெருஞ்ஜோதி யுண்ணின்று விரிந்து உடம்பும் உயிரும், உணர்வும் வாழ்வும் நிறை இன்பமயமாகி நிலவுவது திண்ணம். இப்படி அருட்பெருஞ்ஜோதியை உளம் கொண்டு வாழ்வதால் முன்னம் விதிக்கப்பட்டிருந்த தடைகளெல்லாம் ஒழிவது திண்ணம். அப்போது இந்த அருட்பெருஞ்ஜோதி முறையால், முன்பு எச்சமயத் தலைவர்களும் எதிர்பார்த்திருந்த நன்மையைவிட பன்மடங்கு பெரு நன்மை உண்டாவது சத்தியம். இதனால், இந்த அருட்பெருஞ்ஜோதியின் ஏற்பால் யாரும் எந்தவிதமான குற்றமும், குறைவும் கேடும் அடையவே மாட்டார்கள்! இது நிச்சயம். எனவே அருட்பெருஞ்ஜோதி உண்மையை இந்த அகவலிற் கண்டு கொள்ள வாரீர்.
 
 
அகவலுக்கு உரை காணும் வாய்ப்பு
 
திருவருள் கூட்டிவைக்கத் திருவருட்பாவைக் கண்டுபயிலும் வாய்ப்பு 1930 முதல் ஏற்பட்டது. முதலிலிருந்து முடிவு வரை ஓதியுணரற்கான சூழ்நிலையையும் வாழ்வுமுறையையும் திருவருளே கூட்டி வைக்க மேற்கொள்ளப்பட்டது. அருள் நெறி படர்வார்க்கு சூழ்நிலையும், கோள் நிலையும் நன்மையே செய்யும் என்பது நாளடைவில் புலனாயிற்று. ஜீவ தயவுப் பணியில் ஈடுபட்டு எஞ்சிய போதெல்லாம் அருட்பாவின் கண்ணும் அதற்கான விளக்கங்களினிடத்தும் மனம் சென்று சென்று தினமும் புதிய கருத்துக்கள் வெளியாகக் கண்டு வர நேர்ந்தது.
 
1938 தைப்பூசத்தின் போதும், அடுத்து சில தினங்களும் வடலூர் மேட்டுக்குப்பத்தில் உறைந்த சமயம், வள்ளற் பெருமானின் உண்மை பல உணரவும் காணவும் முடிந்தது. அடுத்து சத்திய ஞானசபைத் தத்துவ விளக்க நூல் வெளியிடத் திருவருளே உதவியது. மற்ற பல கருத்துக்கள் அப்போதப்போது வெளியாயின. 1943ல் சுத்த சன்மார்க்க உண்மை வெளிப்பட, வானக் கோளின் கணித முறைப்படி கடக நடு பூசக் காலில் சூரியன், சந்திரன், குரு விளங்கினபோது, கலிமுடிந்து கிருதயுகம் தோன்றும் என்ற குறிப்புக்கு மேலாக, அந்தக் கடக நடு (நம் உடலின் தலைநடு விளங்கும் காற்குளம் என்னும்) பூசத்தொரு காலில் வெளிப்பட்ட இரவிமதியும் குருவுமே நமது அகத்தே சுத்த, ஞான பிரணவ தேகத்தைக் குறிப்பதாய்க் கண்டு கொள்ளப்பட்டது.
 
புறவுலகில் கடகத்திடை முக்கோட் காட்சி தோன்றி மறைந்தது பெரிதல்ல, அதன் உண்மை நமது, அக அம்பரத்தில் சுத்தமாகி திரிதேகக் காட்சியைக் காட்டி நிலை கொண்டுள்ளது மிக மிக முக்கியமாம். இக்கருத்துடன் சுத்த சன்மார்க்க விளக்கம் தரவல்ல சுத்த தயவு பாக்கள் பலப்பல தொடர்ந்து வரையத் திருவுளம் கூட்டி வைத்தது. தயவே எல்லாமாய்க் கண்டு போற்றிக் கொள்ள நேர்ந்ததுதான் மிக முக்கியம். சத்விசாரத்துடன் பரோபகாரச் செயலும் இடையறாது தொடர்ந்தது. பலவான செய்யுளும் உரைகளும் அப்போதப்போது வெளியாயின.
 
1960ல் தான், முதல் நாள் தொடங்கி அருட்பெருஞ்ஜோதி அகவலுக்குத் தினமும் ஈரடிக்கு விளக்கம் வரைந்திடப் பெற்றது. அது எந்தக் காலத்தும் தடைபடாது இரண்டு ஆண்டும் இரு திங்களும், எட்டு நாட்களும் எழுதி நிறைவு செய்யப்பெற்றது. அந்த நாட்களில் உரை காணவிருந்த அடிகளுக்கும், புறச் சூழ் நிகழ்ச்சிகளுக்கும் பன்முறை விளக்கம் பொருந்தி வந்தனவாம். 798 நாட்களில் அகவல் அடிகள் 1596க்கும் விளக்கம் நாட்குறிப்பு ஏடுகளில் சுருக்கமாகவே வரைந்து வைக்கப்பெற்றிருந்தன. பின்னர் 1969ல் அருட்சுடரில் அகவலுக்கு உரை வழங்கச் சாலை சகாப்தத் திங்களாகிய வைகாசி முதல் ஒருவாறு ஆறு அடிகளுக்கு விரிந்த முறையில் விளக்க உரை தொடர்ந்து அனுப்ப ஏற்பாடாகியது. விரிவான உரை விளக்கத்தை முழுமையாக உருவாக்கக் கருதிய தருணம் நான்கு பெரிய நோட்டுப் புத்தகங்களில் ஓராயிரம் பக்கங்களில் உருவாக்கும் பணியில் ஈடுபட நேர்ந்தது. அதுவும் திருவருளால் நான்கு திங்களில் நலமே நிறைவுற்றது. வள்ளலாரின் சித்தி நிலைப்பேறு உற்ற நூற்றாண்டின் நினைவாக முழு நூலையும் வெளியிட உளம் கொண்டபோது, அத்திருவருளே அப்பெரும்பணியைத் தக்கோர் மூலம் வெளிப்படுத்த முனைந்தது அருட்பெருஞ்ஜோதியின் திருவுள்ளமேயாகும்.
 
அருட்பிரகாசரின் திருவுள்ளப்படி அவர்தம் சத்திய வாக்கு உலகம் எல்லாம் பரவட்டும்.
 
தயவு
 
 
 
அருட்பெருஞ் ஜோதிச் சின்னமும் அனுபவமும்
 
சுத்த தயா வொழுக்கத்தோடு, சத்விசாரம் செய்து வந்தால் நமது உலகுயிர் வாழ்வின் குறிக்கோளும் பயனும் இவை இவை என நன்கு விளங்கும்.
 
தயவு அடிப்படையில் நமது இறை இயல் உண்மையைக் காணத் தொடங்குவோம். நம் உண்மைத் தோற்றம், கரு ஆரம்பத்தில் ஒரு சிறு ஒளிப்புள்ளியாகப் பிரகாசிக்கத் தொடங்குகின்றது. அந்தப் புள்ளியை மையமாகக் கொண்டே ஓவண்ணக் கருப்பிண்டம் உருவாகி வளர்ந்து வந்து, உலகிடை தோற்றி விளங்குகின்றோம் ஒவ்வொருவரும். ஒருவனை, அவன் ஒரு நல்ல புள்ளி, என்பது அகவுண்மை சுட்ட வந்ததே.
 
கண், நாக்கு, மூக்கு, செவி, ஞானக் கூட்டத்து தலை நடுவுள்ளிருந்து, ஐவண்ண ஐந்தியல் ஆற்றல் கொண்டு விரிந்து, இறை இன்ப அனுபவம் பெற இருக்கின்றோம் நாம். நமது புற வடிவம் தூல ஐந்தெழுத்துருவாய் இருப்பதும்; நம், கை கால்களில் ஐந்தைந்து விரல்கள் விளங்குதலும், அகத் துறைக்காம் ஐந்நிலப்பாங்கும், அக அனுபவத்திற்காம் சாக்கிராதி துரியாதீத ஐந்நிலையும், உடல், உயிர், அறிவு, ஆன்மா, அருள் ஆகிய ஐஞ்சக்தி கொண்டும் திகழ்கின்றோம். பொதுவாக, உடலும், உயிரும், அறிவும் கொண்ட மனிதன், சாதாரணமாகப் பிறப்பதும், குறிப்பிட்ட காலம் இருப்பதும், பின் இறந்து போவதுமாய் இருக்கின்றான். விசேட ஆன்மசக்தியைக் கொண்டவனோ யோகாதி சயச் சித்திகளோடு பலகாலம் விளங்கி விட்டு முடிவில் அடங்கிப் போகின்றான். இந்நிலை வரைதான் மனித வாழ்வு உலகறிய விளைந்துள்ளது.
 
மேற்படி யோகசக்தியின் விளைவு கண்டு வியப்பில் ஆழ்ந்த உலகினர்க்கு, அருட்சக்தியின் விளைவு வெளிப்படவே திருவருட் பிரகாச வள்ளல் தோற்றுவிக்கப்பட்டுள்ளார். அருளின் நிறை விளைவு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வள்ளலார் மூலம் வெளியாக்கிவிட்டதாம். இப்பொழுது அருட்பிரகாசர், அருட்சக்தியை முழுமையாகப் பெற்றுக் கொண்டதினால், அதிலேயே மற்ற நாற்சக்தியும் கூடிய நிறை இறைவாழ்வாக அமைந்துள்ளதாம். இவர் தானே அக ஆன்ம சிற்சபையினின்று, அனக நிறைவால், ஐஞ்சக்தியோடு, ஐந்தொழிலையும் கொண்டு, அகண்ட வெளிநிறை பெருஞ்ஜோதி வடிவினராய், அருட்பெருஞ்ஜோதியே தன் பேருருவாய் விளங்குகின்றவராய் உள்ளார். இதுவே அருட்பெருஞ்ஜோதியின் சின்னத்தின் மேனிலையாம்.
 
அருட்பெருஞ்ஜோதி நிலையை அடைவிப்பது, கடவுள் தயவே. அனைத்து நாட்டு மொழியாம் ஆங்கிலத்தில் இத்தயவை, “DAEIOU” என்று எழுதித் தயவு என்றே உரைக்கலாம். இதில் D- என்பதை ஒன்றாகிய (A B C என்னும் மூவியல் கொண்ட) இறைவனைக் குறிக்கவும், அவ்விறைவனின் ஐஞ்சக்தி ஐந்தியலையே “AEIOU” என்னும் ஐந்து உயிர் எழுத்தாகவும் கொண்டு கூட்டி, இத்தயவினால் அனைத்துலக மக்களும் இறை நலவாழ்வு பெற்று இனிது தழைத்து ஓங்கலாம் என்பது குறித்தே இச்சின்னத்தின் அடியில் மலர்ச்சியுற்றியங்குகின்றது இத்தயவு.
 
தயவு அனுபவம், கடவுளான்மப்புள்ளியிலிருந்து விரிந்து நம்மில் நிறைந்து சூழ்ந்து அகண்ட பேரொளியாய், அருட்பெருஞ்ஜோதியாய் விளங்கிக் கொண்டிருப்பதாக.
 
தயவு
 
 

Download:

8 Comments
mm moorthy
Plese send the PDF of அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம் by சுவாமி சரவணானந்தா
Friday, July 26, 2013 at 10:05 am by mm moorthy
Vallalar Space
we just converted this page to pdf, please download from here
Friday, July 26, 2013 at 13:46 pm by Vallalar Space
Vasudevan Sivakumar
Ayya,
This one does not seem to have the entire version. Please give us the entire version(two books) in the pdf format.
Friday, July 26, 2013 at 17:39 pm by Vasudevan Sivakumar
Alagaraja R
Ayya,

Where can I buy சுவாமி சரவணானந்தா அகவல் உரை Book? Is it available as a Hard copy?
Tuesday, April 27, 2021 at 05:26 am by Alagaraja R
Daeiou  Daeiou.
திண்டுக்கல்லில் உள்ள திரு இராமலிங்கம் அவர்களிடம் அகவல் உரை விளக்கம் உள்ளது. அவரது மொபைல் எண்.99767 50609.
Tuesday, April 27, 2021 at 07:42 am by Daeiou Daeiou.
Alagaraja R
Thank you. I message him and he has sent the book to me.
Monday, May 17, 2021 at 15:24 pm by Alagaraja R
Kulothunkan Palasundram
Vanakkam ayya. Please send me the agaval urai full pdf to my email address: kulothunkan@gmail.com. Mikka nandri.
Thursday, April 20, 2023 at 23:43 pm by Kulothunkan Palasundram
Daeiou  Daeiou.
It is only available in book form.
Sunday, April 23, 2023 at 13:53 pm by Daeiou Daeiou.