Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.60. ஆறாம் அதிகாரம்..தெய்வ வழிபாடு..சுவாமி சரவணானந்தா.
தியாகேசன் தாள்படுமித் தென்னிந் தியாவே
தயாமூல பண்டாரந் தான்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

     நம் தென்னிந்தியா தான், தியாகேசனை உள்ளவாறு அறிந்து வழிபட்டு, தயா உண்மையைக் கண்டு கொண்டது. தென்னிந்தியா என்பதன் உட்பொருள் ஆன்மாவாம்.

     நமது ஆன்மாவில்தான் தியாகேசனாகிய கடவுள் திருவருள் பொருந்தி நின்று இன்பானுபவம் வழங்குகின்றது. இவ்வான்மாவே தயாமூல பண்டாரம்.

    பண்டாரம் == பொருள்., வைப்பிடம்., கருவூலம், பண்டாகிய பரம்பொருள் உள்ள நிலையம். அதனை உளங்கொண்ட துறவியுமாம்.

     நமது ஆன்மநாதன் தான் எல்லோருடைய ஆன்மாவிலும் உள்ளவன். அன்றியும், பிற எல்லா உயிர்களின் அகத்தும் உள்ளவன்,  நம் அகமுடையானாகிய தியாகேசனே.

     தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கு மிறைவன் என்றதன் கருத்தும், நம் தென்னிந்தியாகேசனே எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இறைவன் என்றதும் உண்மையே.
20140806_082447.jpg

20140806_082447.jpg