Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.61. ஏழாம் அதிகாரம் பொது ஒழுக்கம்...சுவாமி சரவணானந்தா.
ஒழுக்கம் வழிபாட்டிற் குற்ற துணையானல்
லொழுக்கம் உயிருக் குயிர்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     உலகியலில் அருள்  வழிபாடியற்ற நற்றுணையாய் உள்ளது நல்லொழுக்கமே.

     உடம்பிறகு உயிர் - விளக்கமும், இயக்கமும் தருவது போல் மெய்யுருவாகிய ஆன்மாவுக்கு கடவுள் அருளே விளக்கமும் வாழ்வும் வழங்குகின்றது.

     ஆதலின், அகமுணர்ந்து, அருள் வழி ஒழுகுதல், நம் உயிர்க்குயிரை வளர்த்து, என்றும் நம்மை வாழ்விப்பதாம். . பொதுவாகிய இவ்வருள் ஒழுக்கம், சிறப்பு வகையான் நம் இந்திரிய, கரண, ஜீவ, ஆன்மனில் விரித்துக் கொள்ளப்படும்.
20140224_122354~2~2.jpg

20140224_122354~2~2.jpg