Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள்.64 ஏழாம் அதிகாரம்..பொது ஒழுக்கம்..சுவாமி சரவணானந்தா.
விலங்கிய லிச்சை விடுத்துத் தயைசேர்
நலந்தரு மாற்றில் நட.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

    தயவு ஒழுக்கத்தை மேற்கொண்டு, இறை இன்ப வாழ்வாம் உயர்ந்த குறிக்கோளோடு உலகியலை நடத்தல் வேண்டும்.

     தேகப்பற்று இல்லாது, தயா மார்க்கத்தில் அதிகம் ஈடுபட ஈடுபட விலங்கியலிச்சை (animal passion) குன்றி ஒழியும். மற்றபடி, தயாவொழுக்கம் மேற்கொள்ளாது, இவ்விச்சையுடன் கூடிக் குடும்பத்தைப் பெருக்கிக் கொண்டு போவதும், இயந்திர, தந்திர, கருவிகளின் உதவியால் சிறு இன்ப வாழ்வில் திளைப்பதும் ஒழுக்கமற்ற செயலேயாம்.

     தயாவொழுக்கம் கடைப்பிடித்தால் பெருநலமுண்டாகும்.


20150405_081919.jpg

20150405_081919.jpg