Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.66. ஏழாம் அதிகாரம் பொது ஒழுக்கம்...சுவாமி சரவணானந்தா.
கரணநான் கிற்றான் கருணை யொழுக்கம்
மரணமாங் கேவல மாற்று.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     கருணை ஒழுக்கம் மேற்கொண்டு ஒருமையோடு வாழ, வாழ மனமானது சுத்தமுறும். அப்போது, புத்தி கூர்மையாகி நிலைத்து, சித்தம் தெளிந்து, அகங்காரம் ஒழிந்து, மெய்ப் பொருட்காட்சியுண்டாகும்.

     இப்படி, மனம், புத்தி, சித்தம், அகங்காரமாகிய அகக்கரணம் நான்கும் மெய்ப் பொருட் காட்சி பெறும்போது, மனோ வாக்கு காயமாகிய புறக்கரணம் மூன்றும் கருணைச் சோதியின் சேர்ப்பால், கேவல மரணாவத்தையை ஒழித்துச் சுத்த தயவொடு திகழுமாம்.
20140713_221310.jpg

20140713_221310.jpg