Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.134..பதினான்காம் அதிகாரம்.மனோகரண நானிலை. சுவாமி சரவணானந்தா.
தரங்கத் தடிநீர் சலியா திருக்கும்
கறங்காத புத்திநிலை காண்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     சலித்துக் கொண்டிருக்கும் கடலலைக்குக் கீழ் நீர் அமைதி கொண்டிருக்கும். இது, நிலைத்த புத்தி நிலைக்கொப்பாகும். சத்விசாரத்தால் அமைதியுற்ற உள்ளத்தில் மெய்ப்பொருளுணர்வு நிலைத்திருப்பதாம். எது போன்று எனில், ஆழ்கடல் நீரடியில், ஒரு நிலையில் பல சீவர்கள் நிலைத்து வாழ்கின்றன போல.

     அந்நீர் நிலையில், மேல் மட்டத்திற்போல் அலையும், கொந்தளிப்பும் உறைதலும் கிடையா. இத்தன்மை (Anomalous expansion of water) கடல் நீரில் காண்பது போல், கடவுள் அருள் தன்மையை மனத்தின் கண் காண்கின்றோம்.
20150405_081919.jpg

20150405_081919.jpg