Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தேகப்பற்றற்றுத் தெளிவு ஒளி காண வேண்டும்...இராமலிங்கர் வாழ்க்கை உண்மை நூலிலிருந்து.
இராமலிங்கர் வாழ்க்கை உண்மை.
சுவாமி சரவணானந்தா.

00000000000000000000000000000000000000000000

     நம் வள்ளலார் நம் புற வடிவை வைத்துப் பிறர் வழிபடல் விரும்பாததற்குக் காரணம், நித்தியமாகிய அருட்ஜோதி தெய்வத்தைத்தான் எவரும் கண்டு போற்ற வேண்டும் என்று கருதியதேயாம்.

     ஆகவேதான், ஒரு சமயம், தம் புற வடிவைப் போன்ற பிரதி ஒன்றை மண்ணால் செய்து கொண்டு வந்து, பயபக்தியோடு கரத்தில் ஈந்து, திருவடிகளை வணங்கி நின்ற பக்தரை நோக்கிப் “பொன்னான மேனி மண்ணாயிற்றே” என்று கூறிக் கொண்டே கை நழுவ விட்டு விட்டார். அம்மண்ணுருவம் விழுந்து இஐந்து சுக்கலாயிற்று.  இது கண்ட அந்த ஓவியர் உள்ள்ம் பதறியது, சில விநாடி கழித்து வள்ளலாரே வாய் மலர்ந்து தெளிவுரை கூறலானார்.

     திருவருள் ஒளியின் சேர்க்கையால், புற வடிவத்தையே சுத்த அருட் பொன்னாக மாற்றி அமைக்கப் பெற்றுக் கொண்டுள்ளேன். ஒவ்வொருவரும் இந்த அருள் ஒளியின் சேர்க்கை பெற்று சுத்த சுகானந்த வடிவு அடைந்து வாழ வேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றேன். அப்படியிருக்க, இதற்கு ஒரு தடை போலவன்றோ, நீ இந்த மண்ணான உருவைச் செய்து கொண்டு வந்து விட்டாய். உலகுக்கு இதுவா தேவை ? அல்லவே .. என்றெல்லாம் புறத்தில் சொல்லாமல், “பொன்னான மேனி மண்ணாயிற்றே” என்று மட்டும் ந்மெதுவாகச் சொல்லிக் கீழே போட்டு விட்டார்.


20150325_094954.jpg

20150325_094954.jpg