Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.21க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
துதிசேர் ஒற்றி வளர்தரும துரையே நீர்முன் ஆடலுறும்
பதியா(து) என்றேன் நம்பெயர்முன் பகர்ஈர் எழுத்தைப்பறித்த தென்றார்
நிதிசேர்ந் திடும்அப் பெயர்யாது நிகழ்த்தும் என்றேன் நீயிட்ட(து)
எதுவோ அதுகாண் என்கின்றார் இதுதான் சேடி என்னேடி.                  (திரு அருட்பா)

உரை விளக்கம்.
     
     புகழ்ந்து போற்றப்படும் திருவொற்றிவாணர், தருமதுரையே என்று அழைக்கப்படுகின்றார். அருள் ஒளிதான் உண்மை தருமம். அவ்வொளியால் சிறந்து விளங்கும் ஒருவரே துரையாவார். அவர் திருவிளையாடல் புரிகின்ற தலம் எதுவோ எனக் கேட்கிறாள் தலைவி. அவருடைய பெயராக குறிக்கப்பெற்ற சொல்லின் முன் இரு எழுத்தை நீக்கப்பட்டு விட்டால் எதுவோ அதுவே என்கின்றார். தரும துரை என்றதையே அவருடைய பெயராகக் கொண்டு, அதில் முதல் இரண்டு எழுத்தாம் தரு என்பன நீக்கப்பட்டு விட்டால் எஞ்சி இருப்பது மதுரை. ஆம். மதுரைதான் அவர் திருவிளையாடல் புரியும் இடம் என்பது பொருளாம். இந்தத் திருவிளையாடலுக்காகத்தான் இம்மதுரைக்கு வந்தார். ஆனால், எப்போதும் ஆடும் இடம் பொன்னம்பலமே ஆம். அங்கு புரியும் ஆடல் ஐந்தொழில் நடனம், ஆன்மாவுக்கு பக்குவ நிமித்தம் பண்டே தொட்டு நிகழ்த்தப்பட்டு வருவது. அது சிவ நடனம் எனப்படுவது. இந்தப் பொது நடனத்தால் ஓர் ஆன்மாவுக்கு பலவாகிய பிறவிகள் வந்து வந்து கழிந்துள்ளன. முடிவிலே இந்த மனிதப் பிறவி ஏற்பட்டபோதுதான், உயிர் வாழ்விலே, அன்பும் அறிவும், இன்பமும் சேரும்படி இங்கு வாசி நடம்புரிய அந்தச் சிவபதி நாடிவந்துள்ளாராம். ஆகையால்தான் இதனை முன் நாடலுறும்பதி என்றார் எனக்கொள்ளத்தகும். வகரக்கால் சிவத்தில் இடமாய் இருப்பதும், வலமுறும்போது வாசி ஆவதும் குறித்து இங்கு கால்மாறி ஆடும் இடமாக கூறப்படும்.

         நாடலுற்ற மதுரையம் பதியிலே, ஆடலுற்ற திருவிளையாடலாலே, திருவாம் அருள்நிதி சேர்வதாயிருக்கின்றது. ஆகவே அந்நிதிசேர்பதியும் இம்மதுரையே என்பது மேலும் குறிக்கப்பட்டுள்ளதாம். நம் பதியாகிய தருமதுரை, நமக்கு அருளும் பொருளும் ஆனந்த வாழ்வும் தருமதுரை இதுவே.
vlcsnap-2014-03-01-19h28m45s121.png

vlcsnap-2014-03-01-19h28m45s121.png

1432741756728.jpg

1432741756728.jpg

Audio:

Download: