Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கிதமாலை பாடல் எண்.45க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.
இட்டம் களித்த ஒற்றியுளீர் ஈண்டுஇவ் வேளை எவன் என்றேன்
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறியச் சொலும் என்றேன்
பட்டுள் மருங்குல் பாவாய்நீ பரித்த (து) அன்றே பார் என்றே
எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இதுதான் சேடி என்னேடீ.            (இங்கித மாலை பாடல் எண்.45)

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

உரை விளக்கம்.

     சர்வ சுதந்திரராகிய நம்பதி திருவொற்றியில் தனிச்சையாகவே களித்திருக்கின்றார். அவர் திருவுள்ளப்படி, திருவருள் பாலித்து பூரண சுயேச்சையுடன் நாம் வாழ உதவுகின்றார். “இப்போது இங்கு வந்துள்ளது யார்? இந்த வேளை யார்?” என்று கேட்டாள் தலைவி. இளஞ்சிவமாம் முருகனே செவ்வேள் ஆவார். பிச்சாண்டி கோலத்தில் இருப்பவரைத்தான் கேட்டாள்; அவருடை ஜாடையில் குமரைனையே காண இருத்தலின், அந்த வேள்தன் சுதனே, புத்திரனே என்று கூறுகின்றார். புறத்தே மாயா அழகுத் தோற்றம் காட்டி, நிற்கும் வடிவிலும், உள்ளே மாயா(த) அழகோடு மன்னி இருப்பவர் இளமை மாறா நம் சிவஜோதி பதியே ஆவர். சுத்த தயா ஞானத்தால் ஒருவருக்கு நெற்றிக் கண் திறக்கப்பெறாதவரை, புறக்கவின் காட்சியில் கவிந்து, அழியவே நேரும். ஞானக் கண் திறக்கப் பெற்று உள் நோக்கும் சமயமே, உள்ளிருக்கும் அருட்ஜோதி முருகனையே கண்டு நிற்கலாகும்.

     நெற்றிக் கண்ணால் மன்மதனை(க் கரு வேள்ஐ) சுட்டதும், உள்ளிருக்கும் (செவ்) வேள் காட்சியாகும். மன்மதன் என்பது காம இச்சைப் புறத்தேக வடிவமே. இந்த தேகப் பற்றை மெய்ஞ்ஞானத்தால் ஒழிப்பதுதான், நெற்றிநடு ஞானத்தீ(க்)கண்ணால் சுட்டு நீறாக்குவதாம்.  தேகப்பற்றுதான் நீக்கப்படுவதே ஒழிய, தேகமே ஐத்து விடப்படுவதல்ல. அப்போது உள் அருவமாய் இருந்த கடவுட் ஜோதியே பெரிதாய்த் தூண்டி விடப்பட்டு, முன்னிருந்த கருவேள் (மன்மதன்) வடிவம் முற்றிலும் மாறிச் செவ்வேளை முருகன் வடிவமாகித் திகழ்வதாம். நெற்றிக் கண் வழித்தோன்றிய ஆறுதீப் பொறியே, உள் பகரக் குழியில் (சரவணப் போய்கையில்) ஆறுமுகன் ஆன உண்மையும் இதுவாம். இதுதான் சுட்டும் சுதனின் உண்மை. இதனைத் தெளிவாக, நேரடியாக இதுதான் என்று சுட்டி அறியும்படி சொல்ல வேண்டும் எனத் தலைவி கேட்கிறாள். அதற்கு அவர் கூறுகின்றார்; “பட்டுண் மருங்குல் பாவாய் நீ பரித்த(து) அன்றே பார்” என்றே எட்டுங்களிப்பால் உரைக்கின்றார்.

     ஆறுமுகப் பெருமானின் தோற்ற உண்மையை நீ அறிய வேண்டின், உனது ஆதிக் கரு நிலையையே பார். அதற்கு என்றே உனக்குப் பட்டுண் மருங்கும், பாவகப் பண்பும் வழங்கப்பட்டுள்ளன என்று சொல்லிப் பெருமகிழ்வுறுகின்றார். ஆறுமுகப் பெருமானுக்கும் இந்த ஆன்மாவுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறதாம். அதனை தெளிவாக அறிந்து கொள்ளுவதகே, இந்த மனிதப் பிறப்பு அமைந்துள்ளதாம். சர்வ வியாபகி (எங்கும் நிறைந்தவர்) ஆகிய கடவுள் இம் மனிதனின் கருநிலை ஆரம்ப முதலே, ஆன்ம அணுவடிவாய் வெளியாகியுள்ளதாம். ஆனால் இந்தக் கடவுளான்ம அத்துவைத இரண்டற்ற ஒன்றான) உண்மை மனிதனுக்கு அபக்குவத்தில் அறியப்படுகின்றதில்லை. இவன் கடவுளைக் காண எங்கெங்கோ தேடு தேடென்று தேடுகிறான்.

      எங்கும் உள்ளதாகச் சொல்லப்படும் கடவுலை மனிதன் ஏன் காணமுடியவில்லை, ஏன் எங்கும் காண முடியவில்லை..என்னதான், அந்தக் கடவுளுக்கும் இந்த மனிதனுக்கும் இடையிலிருந்து மறைத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இங்கே, பட்டுண் மருங்குல் எனப்பட்டுள்ளது. அப்படி என்றால் புலனறிவாளன் சொல்லுகிறான், “இடையில் (மருங்குல்) கட்டப்பட்டுள்ள பட்டுத் துணியாம், பாவை போன்ற தலைவிக்கும் கடவுளுக்கும் இடையே பட்டாடையே மறைப்பாய் இருக்கின்றது” என்று. இத்திரை விலக்கத்தால் கடவுள் இன்பம் கண்டு கொள்ளவா முடியும்..உண்மை இதுதான்; ‘பட்டுண்ட’ என்றால், அழிந்து பட்டுப் போய் இருக்கும்; அதாவது இல்லாதே இருப்பது போல் தோற்றுகின்றது எது ? அதுதான் மருங்குல் (இடை) அதாவது கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் இல்லாதே இருக்கும் மாயை மறைப்பு. உண்மை அறியாமையைத் தவிர வேரு எந்த ஒரு மறைப்பும் கடவுளுக்கும் இவனுக்கும் இடையில் இல்லை என்பது தெளிவு, இந்த அறியா அறியாமையை நீக்கி விட்டு ஆதிக்கடவுளான்மா அத்துவைத நிலையையுணர்ந்து அதனைப் பாவித்து பாவித்து, அதுவாகவே விளங்குவாய் பாவாய் . பாவை என்பது பாவிப்பவள், பாவனை அல்லது பாவகம் செய்யும் பண்பினன் என்பது குறிப்பு. இப்படித் தெளிவித்து, அவைவித்திடும் இன்புடையவராய், இதனை வெளியிடுதலையே எட்டும் களிப்பால் உரைக்கின்றார் என இங்கு இங்கிதமாய் மொழியப்பட்டுள்ளது.

New Doc 2018-07-06 (4)_1 (1).jpg

New Doc 2018-07-06 (4)_1 (1).jpg