Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
மெய்யறிவை எவ்வாறு உணர்வது ? சுவாமி சரவணானந்தா..
(கடவுள் வாழ்த்து) என்ற நூலிலிருந்து.

உலகெலா முணர்ந்து ஓதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

     உயர் ஞானமாகிய மெய்யறிவைப் பெற்றுக் கொண்டு, பண்பாடெய்தி வாழ்கின்ற மக்களே சிறந்தவர்களாவர். அவர்கள் அறிவு பகுத்தறிவுக்கு எட்டாத பதித் திருவடி வண்ணமாகவே திகழும். அப்பதியின் சக்தியே உண்ணின்று மலர்வதும், அப்படி உள் விரிய புறம் சூழ்ந்து உதவுவதும் எல்லாம் வல்ல அப்பதியின் அருட்பெருஞ் செயலேயாகும். அம்மெய்யருள்தான் நமது மெய் அறிவாகி விளங்குகின்றதாக, அதுவே உணர்த்த உணர்ந்து கொண்டுள்ளோம். அது அப்படி உணர்த்தாதவரை நாம் உணர முடிகின்றதில்லை. அப்போது நமது அறிவு மிகக் கீழ்நிலையில் அற்பமாக இருக்கின்றதாம். நமது அறிவு அசுத்த கரண மனவறிவாயும்,ம் அதற்கு உறுதுணையாய் சூழ்ந்த ஐம்பொறி வாயில் துய்க்கின்ற புலனறிவு உடன் கொண்டு இலங்குகின்றதாம். இப்பொறிவாயிற் சென்று சென்று புறந்திரிந்து அலைகின்ற உணர்வு சக்தியைத் திருப்பி அகம் நாட்ச் செய்தல் தான் மெய்யறிவை யுணரும் முறையாகும்.
New Doc 2018-08-10_1.jpg

New Doc 2018-08-10_1.jpg