கவிஞர். கங்கைமணிமாறன்
ஏழிசைத்தமிழ் கமழும் ஏழாம் ஆண்டு விழா
திருவருட்பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டுவிழா வரும் செப்டம்பர் 17..ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அகவல் ஓதுதலுடன் துவங்கி நள்ளிரவு வரை நடைபெற உள்ளது.
்ஆன்மலாபம் அருளும் அகவல் பாராயணம்
 ்அன்பர்சீர் பரவும் ஆராதனை முற்றம்
 ்தேனால்  செய்த தீந்தமிழ்ச்சோலை
 ்மகரந்தம் சிதறும் மகளிர் மேடை
 ்இளைப்பற வாய்க்கும் இன்சுவை உணவு
 ்மாணவத் திலகங்களுக்கு மகத்தான பரிசுகள்
 ்தக்கார் தமக்குத் தகைசான்ற விருதுகள்
 ்நலிவுற்றார்க்கு நலத்திட்ட உதவிகள்
 ்பைந்தமிழ்க் கொடிபறக்கும் பட்டிமண்டபம்
 ்மண்ணிசை மலரும் இன்னிசை வானம்
என...
அற்புத நிகழ்ச்சிகளின் அணிவகுப்பில் ஒரு நாள் விழா உற்சாகத்திருவிழாவாய் மலரவுள்ளது.
   சைவநெறிக்காவலர் -சன்மார்க்க சஞ்சீவி -மருத்துவர்
எம்.ஏ.ஹுசைன் அய்யா, முனைவர் இராம.பாண்டுரங்கன் அய்யா, மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி அய்யா ஆகியோர் பங்கேற்று சன்மார்க்கப் பேருரை ஆற்றிப் பேருவகை தரவுள்ளனர்.
  வேதாத்திரியப் பேராசிரியர்.திருமதி.அமுதா ராமானுஜம் அவர்கள் மகளிர் மேடையில் மகத்துவ உரையாற்றுகிறார்.
  ஏழு சமூகநலத் தொண்டர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்புச் செய்யப்படுகிறது.
   பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இடையே தனித்தனியே  நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும் மொத்தம் ரூபாய் 16,500 ரொக்கப்பரிசு வழங்கப்படவுள்ளது.
   வழக்கம்போல் நலிவுற்ற ஆதரவற்ற ஏழைத் தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கப்படுகின்றன.
  பங்கேற்கும் பொதுமக்கள் அனைவருக்கும் தரமான மரக்கன்றுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  சனி இரவு, மற்றும் ஞாயிறு மூன்று வேளையும் அறுசுவை ததும்பும் இன்சுவை உணவு படைக்கப்படவுள்ளது.
 விழாவின் உச்சமாக எளியேனை நடுவராகக் கொண்டு சங்கத் தமிழ்மணக்கும் சன்மார்க்கப் பட்டிமண்டபம் நடைபெறவுள்ளது.
  இன்றைய வாழ்வியல் வானில் வள்ளலார் சிந்தனைகள்...வளர்பிறையா? தேய்பிறையா? என்பது பட்டிமண்டபத் தலைப்பு.
  தஞ்சை,நாகை,திருவாரூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து சன்மார்க்க வாணர்கள், சாதகர்கள் , பலரும் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர்.
  அழைப்பிதழ் பிறகு பதிகிறேன். என் முகநூலில் அழைப்பிதழ் பதியப்பட்டுள்ளது.
  அன்பர்கள்,வள்ளல்கள்,சன்மார்க்க சீலர்கள் ஒல்லும் வகையான் உதவுமாறு பணிந்து விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
   பெயர்:திருவருட்பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை
  அக்கவுண்ட் நம்பர்:32219357683
பேங்க்: STATE BANK OF INDIA,PERALAM.
IFSC CODE: 144 400
  ஓர் அசத்தலான...அறிவுப்பூர்வமான..ஆன்மநேயம் வளர்க்கும் அமிழ்தத் திருவிழாவிற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் உத்தமர்களே!
  வணக்கம்.நன்றி.
தொடர்புக்கு: +919443408824.