SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் உருவம் ஒரு முடிவுக்கு வரலாமே.
திரு வள்ளுவரின் உண்மையான உருவம் கிடைக்காததால் கலைஞர் ஆட்சிக் காலத்தில் பல ஓவியர்களைக் கொண்டு பலவிதமான படங்களை எழுதவைத்து அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இதுதான் இனி திருவள்ளுவரின் உருவம் என்று நிச்சயிக்கப்பட்டது.அந்த உருவம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விவேகானந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர் போன்றோர் உருவங்கள் ஒரே மாதிரியாக இருக்கக் காண்கிறோம்.
ஆனால் வள்ளலாரின் உருவம் மட்டும் படத்திற்குப் படம் மாறுபட்டுள்ளது. வள்ளலாரின் முகம் ஒரு படத்தில் குழந்தைபோல் உள்ளது.ஒரு படத்திலோ கிழவர் போல் உள்ளது. சில படங்கள் அந்தக் காலத்தில் மகா பாரதக் கதைப் புத்தகத்தில் ஒரு குள்ளமான குண்டான படம் போடுவார்கள்  அதுபோல் உள்ளது. இவற்றை மாற்றி திருவள்ளுவருக்குச் செய்ததுபோல் வள்ளலாருக்கும் செய்யலாமே. இதற்கு என்னுடைய கருத்தை முதலில் வைக்கிறேன். நான் முதன் முதலில் 1958ம் ஆண்டு மேட்டுக்குப்பம் சென்றேன்.அப்பொழுது அங்கிருந்த கருக்காப் படையாச்சி என்ற மிக மிக வயதான ஒரு பெரியவரைச் சந்தித்தேன்.அவர் வள்ளலாரை நேரில் பார்த்தவர் என்று எல்லோரும் சொன்னார்கள்.சித்தி வளாகத்தில் பணி செய்துவந்த நளச் சக்கரவர்த்தி என்ற முதியவரும் அது உண்மைதான் என்று சொன்னார்.வள்ளலாரை நேரில் பார்த்தவருடன் சில மணி நேரம் வள்ளலாரைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டேன்,வள்ளலார் எப்படி இருந்தார் என்றும் கேட்டேன்.கருங்குழியில் உள்ள மீசை வைத்த உருவமே வள்ளலாரைப் பார்த்து ஒரு ஓவியர் வரைந்த படம் என்று சொன்னார்.அதுதான் வள்ளலாரின் உண்மை உருவம் என்றார்.அதிலிருந்து நானும் என்னைச் சார்ந்தவர்களும் அந்தப் படத்தையே பூஜைக்கு வைத்துள்ளோம் வள்ளலாரை நேரில் பார்த்த ஒருவர் ஊர்ஜிதம் செய்த உருவத்தை நாம் ஏற்று

 

vallalar-portrait-web.jpg

vallalar-portrait-web.jpg

2 Comments
Senthil Maruthaiappan
ஆதலால் தான் நமது வள்ளலார் இணைய தளத்தில் மீசையுடன் கூடய படம் உள்ளது வெகுகாலமாக! both in vallalar.org and vallalarspace.org. Also in our iphone and android apps logo etc.,
Monday, July 29, 2013 at 23:57 pm by Senthil Maruthaiappan
தமிழ்சரவணன்
இடது கையில் கருப்பாக ஏதோ வைத்திருக்கிறாறே அது என்ன ஐயா?
Friday, March 9, 2018 at 12:16 pm by தமிழ்சரவணன்