SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்கவேண்டும்.
மனுமுறை கண்ட வாசகம்  என்ற பகுதியில் குருவை வணங்கக் கூசி நின்றேனோ என்று வள்ளலார் கூறியுள்ளார்.குருவை வணங்காமல் இருப்பது பாவம் என்கிறார்.வள்ளலாரைத் தெய்வமாக ஏற்போர் அவரை வணங்கியே  தீருவர். சிலர் அவரை குரு என்று சொல்கிறார்கள். ஆனாலும் அவரை வணங்குவது இல்லை. நாம் செய்துள்ள செய்கின்ற பாவங்கள் போதாதா. இன்னும் ஒரு பாவம் சேரவேண்டுமா. வள்ளலாரை வணங்குவது  பெரிய குற்றமா என்ன.இறைவன்  உங்களுக்குத் துணையாக என்னை இருக்க  வைத்திருக்கின்றான் என்று பாடியுள்ளார்.நமக்கு என்றும் துணையாக இருக்கும்  அவரை விடலாமா. என்றும் அழியாத தேகம் பெற்று இன்றும் நமக்காக ஆண்டவனிடம் பிரார்த்தனை  செய்துகொண்டு இருக்கும் வள்ளலாரை வணங்குவது சரியானதே. இறைவனே வள்ளலாரை நீ என்பிள்ளை என்று கூறியிருக்கிறான்.ஆண்டனின் பிள்ளையும் ஆண்டவன்தானே . அதனாலும் வள்ளலாரை வணங்கலாம். உலகினில் உயிரகளுக்கு உறும்  இடையூறேலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க  என்று வள்ளலாருக்கு ஆண்டவ ன் கட்டளை இட்டிருக்கின்றான் .அதன்படியும்  நம் துன்பங்களை நீக்கவேண்டிய கடமை வள்ளலாருக்கே உண்டு. எனவே நாம் உண்மையை உணர்ந்து வள்ளலாரை வணங்கி சுகம் பெறுவோம்.
natarajan jaganathan
அருள் ஜோதி டிவியிலும், பல மேடைகளிலும் சொ்ன்னதை இங்கே வரிவடிவத்தில் பகிர்ந்து கொண்ட ஐயாவுக்கு மிக்க நன்றி. சன்மார்க்க வழியில் நடக்க முயற்சிக்கும் என் போன்றோர்க்கு இந்த அனுபவ உரைகள் மிக்க பயனுள்ளதாக அமையும். பழுத்தி அனுபவமிக்க உங்களது அனுபவங்களை மேலும் எதிர்ப்பார்க்கிறோம்.
Sunday, December 30, 2018 at 11:09 am by natarajan jaganathan