SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
இறைவனின் பெயர் அருட்பெருஞ்சோதி
இறைவனின் பெயர் அருட்பெருஞ்சோதி

இதுவரை தோன்றிய சமயங்கள் இறைவன் ஒருவன்தான் என்று தெளிவாக மக்களுக்குக் காட்டாமல் வெவ்வேறு உருவங்களிலும்,வெவ்வேறு பெயர்களிலும் இறைவனைக் காட்டி அவ்வளவும் வெவ்வேறு தெய்வங்களாகவும் அத்தனையும் உண்மையிலேயே இருப்பதாகவும் காட்டினார்கள். ஒவ்வொரு சமயத்தவரும் தங்கள் சமயத் தெய்வம்தான் உயர்ந்தது என்று உறுதியாக எண்ணியதால் சமயச் சண்டை பெருகி அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போயினர் என்கிறது வரலாறு. இந்த அவல நிலைக்கு ஒரு முடிவு கட்ட இறைவனுக்கு வள்ளலார் அருட்பெருஞ்சோதி என்று ஒரு பொதுவான பெயர் சூட்டுகிறார்.அந்த ஆண்டவனையும் தவம் செய்து அனுபவத்தில்தான் காணமுடியுமே தவிர புறத்தே தோன்றாது என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்
தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர்
அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி (.அகவல் வரி 118)21
தனு என்றால் உடம்பு அதாவது . மெய்,வாய் .கண்.மூக்கு, செவி ஆகிய ஐந்து இந்திரியங்கள் கரணாதிகள் என்றால் மனம், புத்தி,சித்தம்,
அகங்காரம்,ஆகியவை. இந்திரியங்களும், கரணங்களும் கடந்து அறியக்கூடிய ஓர் அனுபவமே அருட்பெருஞ்சோதி வள்ளலார் தரும் விளக்கம் இதுவேயாகும்