SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் சொல்லியுள்ள தியான முறை
வள்ளலார் சொல்லியுள்ள தியான முறை.

நான்காம் திருமுறை அன்பு மாலை என்ற தலைப்பில் 16 வது பாடல்;

சுற்றது மற்றவ்வழி மாசூதது என்று அறியாத தொண்டரெலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார்

எற்ற தும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியம் என்னுடைய துரையே நின்னுடைய அருளால்

கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே

பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பற்றி அதிசயமே....2170


இந்தப் பாடலில் உள்ள முக்கியமான சில வார்த்தைகள்;
கற்றது...........................தியானம் செய் முறை
கேட்டது.......................நாதம்,
கண்டது.........................ஒளி
உட்கொண்டது ................அமுதம்
பெற்றது.........................மரணமிலாப் பெருவாழ்வு
இன்புற்றது ...................இறைவனுடன் கலந்தது

எல்லா அனுபவங்களையும் பெற்றுவிட்ட பெருமானார் 21-4-1872 அன்று எழுதிய அருட்பெருஞ்சோதி அகவலில் இதே அனுபவ வரிசையைக் கூறுவதைக் காணலாம்.

அறிபவை எல்லாம் அறிவித்து என்னுள்ளே பிரிவற விளங்கும் பெரிய சற்குருவே. வரி ..........1056

கேட்பவை எல்லாம் கேட்பித்தென்னுள்ளே வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே 1058

காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே மாண்பதம் அளித்து வயங்கு சற்குருவே 1060

செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே உய்பவை அளித்தெனுள் ஓங்கு சற்குருவே 1062

உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் பண்பினில் விளங்கும் பரம சற்குருவே 1064

சாகாக் கல்வியின் தரமெலாம் கற்பித்து ஏகாக் கரப்பொருள் ஈந்த சற்குருவே 1066

அறிபவை......தியானம் செய்முறையை அறிந்துகொள்வது.தக்க ஆச்சாரியனைக் கொண்டு நெற்றிக்கண்ணைத்
திறந்து கொள்ளவேண்டும். ஆரம்ப நிலையில் புருவ மத்தியில் ஓர் அசைவு தோன்றும். இதையே
வானத்தின் மீது மயில் ஆடக்கண்டேன் என்றார்.

கேட்பவை.....முதலில் நாதம் கேட்கும்.மயில் குயில் ஆச்சுதடி என்று வரி இதையே சுட்டுகிறது
.
காண்பவை ....பரநாத நிலையில் உள்ளே ஒளி தோன்றும். அனுபவமாலை 54 வது பாடல்.

ஈற்றறியேன் இருந்து இருந்து இங்கு அதிசப்பது என் நீ என்கின்றாய். நீதான் எனை விட்டு
ஏகுதோறும் நான்தான்
காற்றறியாத் தீபம் போல் இருந்திடும் அத்தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட
பகிரண்டம்
தோற்றறியாப் பெருஞ்சோதி மலை பரநாத த்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே
தோன்றியது ஒன்று அதுதான்
மாற்றறியாப் பொன் ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும் வள்ளல் அருள் ஒளியோ
ஈது அதிசயிக்கும் வகையே
.
செய்பவை ........தேகத்தில்ஏற்பட்ட மாற்றங்கள். உணவு,நித்திரை முதலியவை நீங்கியவை.

உண்பவை. அமுதம் உண்டது.
கள்ளுண்டாள் எனப் புகன்றார் கனக சபை நடுவே கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி.
அனுபவமாலை பாடல்.
இந்த அனுபவம்தான் சாகாக் கல்வியின் தரம் ஆகும். ,
.