SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
பொற்றம்பம் என்பது எது

அருட்பாவில் ஒரு பாடல்
ஆணிப் பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி என்ற கீர்த்தனையில் ஒரு வரி
பொற்றம்பம் கண்டேறும்போது நான் கண்ட புதுமை என் சொல்வேனடி -அம்மா
என்சொல்வேனடி
பொற்றம்பம் என்பது எது? நம்முள்ளே ஏதாவது கம்பம் இருக்கின்றதா அதற்கும் அருட்பாவிலேயே விளக்கம் கிடைத்தது .
அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண்டிங்கே அருட்பெருஞ்சோதியாய்ஆடும் அழகர்

  உறங்காதவண்ணம் சிற்றம்பலம் பாடி உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்றபோது

புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே பொற்கம்பம் ஏறினை சுவர்க்கம் அங்கப்பால்

இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா ........1069


உயிர் இரக்கமாகிய ஜீவகாருண்யத்திற்கே அற்பணித்துக்கொண்டஎன்னை ஆட்கொண்டு

அருட்பெருஞ்சோதியாய் ஆடும் அழகர் உறங்கிவிடாமல் சிற்றம்பலப் பயிற்சியில் இருந்தபோது (அது என்ன

உறங்காத வண்ணம்..சாதனை முறைகள் நாட்டிலே எவ்வளவோ உள்ளன. மூச்சுப் பயிற்சி, கண்களைச்

சுற்றுதல்,முறைத்துப் பார்த்தல் போன்று எவ்வளவோ பயிற்சிக ள் உள்ளன.அவற்றைப் பயின்றால் உறக்கம்

வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் வள்ளலார் பயிற்சியோ மனதில் எந்தவித நினைப்பும் எழவொட்டாமல்

மனதை அடக்குவது ஆகும். இதில் உறக்கம் வர வாய்ப்பு உண்டு.உடம்பில் உஷ்ணம் ஏறியபின்பு உறக்கம்

வராது. இந்த நிலையைத்தான் உறங்காத வண்ணம் என்று சொன்னது) ஒண்மை உதயமானது,அந்த

ஒண்மையில் நான் துதிக்கின்றபோது இறைவன் எழுந்தருளி புறங்காதல் செய்வார் போல் (புறங்காதல் என்பது

என்ன.?இந்த உலக மக்கள் முதலில் காதல் என்று சொல்வார்கள்.சில காலம் சென்றதும் மாறிவிடுவார்கள்.நீ

அதுபோல் மாறிவிடாதே) மனம் அடங்கி ஒருமை உதயமான நிலைதான் பொற்கம்பம் ஏறிய நிலை ஆகும்

.அருகில் சொர்க்கம் ஆகிய இறைவனின் தரிசனம் கிட்டப்போகிறது.ஆகவே இந்த நிலையில் இருந்து இறங்கிவிடாதே என்கின்றார்;உறக்கம் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதற்கு ஆதாரம்.

ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என்செய்தோம் என்று அயர்ந்தபோது பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெ ட்டது ஒன்றுமிலை நம் பெருஞ்செயல் என்று எனைத் தேற்றிப் பிடித்த பெருந்தகையே திருமடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச் செய்தருளிச் சிறுமை எலாம் தீர்த்த தனிச் சிவமே கருமடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணிமன்றில் காட்டு நடத்தரசே என் பாட்டும் அணிந்தருளே ......583

இந்தப் பாடலில் ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து என்றது தூக்கமாகிய மூதேவி என்னை வலிய அணைந்து கலந்து அகன்றாள்.நான் தவம் செய்யத்தான் உட்கார்ந்தேன் ஆனால் (தூக்கத்தை மூதேவி என்று சொல்வது உண்டு)தூக்கம் என்னை வலிந்து கலந்து அகன்றது என்ற நிலையைத்தான் ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து என்றார்.இதை ஒரு பெண் என்று நாம் எண்ணிவிடக்கூடாது,.அயர்ந்தபோது என்ற சொல்லையும் நாம் கவனிக்கவேண்டும்.நாம் தவம் செய்ய அல்லவா உட்கார்ந்தோம் தூக்கம் வந்துவிட்டதே என்று எண்ணித்தான் அயர்ந்து போனது.காலம் பூராவும் தூங்கிக் கொண்டேவா இருப்பது.ஒரு காலத்தில் தூக்கம் அடங்கிப்போகும்.அதற்குப் பிறகுதான் ஒருமை உண்டாகும். இந்தக் கட்டுரையின் நோக்கமே பெருமானார் பொற்கம்ப ம் ஏது    அது  எந்த அனுபவம் என்று விளக்குவதற்கே ஆகும்.

 

2 Comments
venkatachalapathi baskar
"உடம்பில் உஷ்ணம் ஏறியபின்பு உறக்கம்

வராது". இங்கு உஷ்ணம் என்று கூறப்படுவது நல்ல உஷ்ணமா?. நல்ல உஷ்ணம் உடலில் ஏறுகிறது என்பதை எதைவைத்து அறிந்து கொள்ளலாம்?
Sunday, September 30, 2018 at 12:00 pm by venkatachalapathi baskar
Muthukumaaraswamy Balasubramanian
அன்புள்ள ஐயா நம் உடம்புக்குத் தேவையான உஷ்ணத்தைப் பெறுவதற்கே நாம் உணவு உண்ணுகிறோம்.தவத்தால் வரும் உஷ்ணம் நல்ல உஷ்ணம். அந்த உஷ்ணம் வரும்போது நாம் இதுவரை உண்டுவந்த உணவின் அளவு குறைவதையும் நாம் இப்போது தூங்குகின்ற தூக்கத்தின் அளவு குறைவதையும் கவனித்தால் நல்ல உஷ்ணம் நம் உடம்பில் ஏறுகின்றது என்பதை அறியலாம்.
Sunday, December 23, 2018 at 11:01 am by Muthukumaaraswamy Balasubramanian