SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் அருட்ஜோதி ஆனாரா
அன்புடையீர் வந்தனம்.
அருட்ஜோதி ஆனேன் என்று வள்ளலார் பாடியுள்ளது உண்மைதான். நான் கூறியுள்ள கருத்தை மீண்டும் 
இங்கே குறிப்பிடுகின்றேன்..பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்ஜோதி அளித்து என்ற தொடருக்கு என்ன பொருள்? அருட்ஜோதி என்ற ஒன்றை  ஆண்டவன் அளித்தான்.பணம் வந்ததால் பணக்காரன் ஆனான்.பணக்காரன் ஆனேன் என்றால் என்னிடம் பணம் இருக்கிறது என்றுதான் பொருளே தவிர நானே பணமாக மாறிவிட்டேன் என்று பொருள் ஆகாது.. சற்று சிந்தித்துப் பாருங்கள்.பணத்தை வைத்துக்கொண்டு வீடு வாங்கினான், கார் வாங்கினான். அதுபோல வள்ளலாரும் 
  அருட்ஜோதியால்  சித்திகள் செய்வேன் என்று பாடியுப்ள்ளார்.பாடலைப் பாருங்கள்.
துதி செயும் முத்தரும் சித்தரும் காணச் சுத்த் சன்மார்த்தில் உத்தம ஞானப் 
பதி செயும் சித்திகள் பற்பலவாகப் பாரிடை வானிடைப் பற்பல காலம் 
விதி செயப் பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருட்ஜோதியால் விளைவிப்பன் னே அவ் 
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருட்பெருஞ்சோதி கண்டாடேடி பந்து . இந்தப் பாடலில் நான் பெற்ற அருட்ஜோதியால் சித்திகள் செய்வேன் என்று பாடியுள்ளார்.அருட்ஜோதி என்பது பெருமானார் பெற்ற சக்தி அல்லது ஆற்றல் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.
வள்ளலார் அவராகத்தான் இருக்கிறார் என்று சொன்னது என் எனில் அவர் தேகம் அழியாத தேகமாக இன்றும் 
உள்ளது .அது ஞான தேகமானதால் அதனை நம்மால் காண இயலவில்லை/கடவுள் நிலை அறிந்து அம்மையம் ஆதல் என்றால் கடவுளுடன் கலந்து விடுவதல்ல. அவர் நிலை அறிந்து தானும் அந்த நிலையை அடைதலே ஆகும்.
என் நிலை இத உறு நின்னிலை இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய்......இதுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். 
Muthukumaaraswamy Balasubramanian
My dear brodhers.i wish you all the best.kindly open you mind and write your opinion which may take us to சத் விசாரம். நன்றி முபா .
Sunday, December 23, 2018 at 10:29 am by Muthukumaaraswamy Balasubramanian