SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
1 4. நான் துணை இருக்கப் பயம் ஏன்? 1 9 8 4

வடலூர் பாத யாத்திரை புறப்படுமுன் காலை,பகல்,இரவு ஆகிய மூன்று வேளை உணவிற்கு ஒவ்வொரு ஊரில் உள்ள அன்பர்களுக்குக் கடிதம் முன்னதாகவே எழுதிவிடுவோம். அப்படித்தான் கரிக்கம்பட்டு என்று கிராமத்தில் இருந்த இராமலிங்க ஆசிரியர் வீட்டிற்கும் நாங்கள் வரும் தேதியைக் குறித்துக் கடிதம் எழுதி இருந்தோம். அந்த ஆசிரியர் தன் மனைவியுடன் திருப்பதி சென்றிருந்தார்.தபால்காரன் நாங்கள் எழுதிய கடிதத்தை வீட்டுக் கதவில் சொருகி விட்டு சென்றுவிட்டார். எங்களுக்கு அவர்கள் வீட்டில் இல்லை என்பது தெரியாது. நாங்கள் திட்டமிட்டபடி சென்று கொண்டிருந்தோம்.கரிக்கம்பட்டு கிராமத்திற்கும் சென்றோம் . இராமலிங்கம் ஆசிரியரின் மனைவி எங்களை வரவேற்று உணவும் அளித்தார்கள். சாப்பிட்டவுடன் கதறிக் கதறி அழுதார்கள். காரணம் புரியாமல் நாங்கள் திகைத்தோம். அழுதுகொண்டே அவர்கள் சொன்னது. ஐயா நாங்கள் திருப்பதிக்குப் போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. நீங்கள் எழுதிய கடிதத்தை நாங்கள் பார்க்கவே இல்லை. இன்று விடியற்காலை என்னுடைய கனவில் ஒருவர் வந்து உடனே நீ ஊருக்குப் போ என்று வேகமாகச் சொன்னார்.அதைக் கனவுதானே என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. என்மனதில் ஏதோ ஒரு உந்தல் ஊருக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்று. இருந்துபோகலாம் என்று சொன்ன என் கணவரின் சொல்லையும் மீறி நான் புறப்பட்டு வந்துவிட்டேன். தொழுவூர் வந்தபோதுதான் உங்கள் பாத யாத்திரையைப் பார்த்தேன். இதற்குத்தான் என்னை ஊருக்குப் போகச் சொன்னார் என்று புரிந்துகொண்டேன்.நான் வராமல் இருந்திருந்தால் நீங்கள் இந்த ஊரில் என்ன செய்வீர்கள்.ஒரு டீக்கடைகூட இந்த ஊரில் இல்லையே. நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருந்தால் வள்ளலார் என்னை உடனே ஊருக்குப்போ என்று சொல்லி இருப்பார்.என்றார்.அன்னதான வள்ளல் எங்களைப் பட்டினி போடுவாரா? வல்ளலார் எங்கள்மீது கொண்டிருக்கும் அன்பை நினைத்து நினைத்து மகிழ்கிறோம்

3 Comments
Hariharan Elumalai
அற்புதம்!! அற்புதம்!!! அருள் அற்புதம் அற்புதமே!!!
Wednesday, December 26, 2018 at 00:46 am by Hariharan Elumalai
venkatachalapathi baskar
தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை படித்துப் பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது.
Wednesday, December 26, 2018 at 11:59 am by venkatachalapathi baskar
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
அவர் எல்லாம் வல்லவர்!
Thursday, December 27, 2018 at 05:49 am by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்