Universal Government of Suddha Sanmaarkkaa
வடலூரில் மாதப் பூசம் தினத்தில் மூலிகை உணவு சேவை:
வடலூரில் மாதப் பூசம் தினத்தில் மூலிகை உணவு சேவை:

வடலூரில் மாதப்பூச தினத்தன்றும் மேலும் முக்கிய விழா நாட்களிலும் மாலை 6.30 மணி அளவில், சத்திய ஞானசபைக்கு நேரே அமைந்துள்ள மூலிகைச்சித்தர் அய்யா அவர்களின் உணவுக்கூடத்தில் மூலிகை உணவு வழங்கப்படுகின்றது.

இந்த மூலிகை உணவில் வள்ளல் பெருமான் அருளிய முக்கிய மூலிகை உணவுகள் அதாவது கரிசலாங்கண்ணி,

தூதுவளை,

முசுமுசுக்கை,

சீரகம்,

சுக்கு,

திப்பிலி

கருநெருஞ்சில்,

லவங்கம்,

அதிமதுரம்,

சீந்தில்,

வல்லாரை,

ஆரை,

ஜோதிவிருட்சகம்,

ரெட்டிமதுரம்,

ரோஜா மொக்கு,

கொத்தமல்லி,

ஆவரம் பூ,

வெட்டிவேர்,

ஏலக்காய்,

வெந்தியம்,

கொல்லிமலை சீரகம்,

மாதுளம் விதை,

அமுக்குராய்,

பவழமல்லி இலை,

கம்பு,

கேழ்வரகு,

முருங்கை இலை,

திணை,

குதிரைவாளி,

கற்றாழை 

போன்ற மேலும் 120 மூலிகைகளின் கலப்பு முறையாக சேர்க்கப்பட்டு ஜோதி தரிசனம் காண வரும் அன்பர்களுக்கு இலவசமாக அமரவைத்து உணவு வழங்கப்படுகின்றது.

இம்மூலிகை உணவினை தயாரிக்கும் முறையும் வேண்டிய அன்பர்களுக்கு இச்சேவையில் ஈடுபடும் அன்பர்கள் மூலம் கற்றுத்தரப் படுகின்றது.

இம்மூலிகை உணவினை உட்கொள்வதால் நாள்பட்ட நோய்கள் நீங்குவதாகவும், உடல் ஆரோக்யம் பெறுவதாகவும் அன்பர்கள் கூறுகின்றனர், இவ்வுணவு வழங்கப்படும் முன்பு இது குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றது.

பண்ருட்டி சன்மார்க்க அன்பர்கள் தொடர்ந்து காய்கறிகள் தந்து உதவுகின்றார்கள், பொறியாளர் இரவிகுமார் சிவமணி, மூலிகை மருத்துவர் இளங்கோவன், மூலிகைச்சித்தர் உணவுக்கூடத்தின் பொருப்பாளர்கள், சன்மார்க்கம் இணையதளக் குழுவினர், மற்றும் பல அன்பர்கள் இம்மூலிகை உணவு சேவைக்கு உதவி வருகின்றனர்.

வடலூர் மாதப்பூச விழாவிற்கு வருகைத்தரும் அன்பர்கள், இவ்விடம் சென்று வள்ளல் பெருமானின் மூலிகை உணவினை உண்டு பயன் அடைய வேண்டுகின்றோம்.

மேலும் விவரம் அறிய/இப்பணியில் பங்கு கொள்ள கீழ்கண்ட எண்ணைத் தொடர்புகொள்ளவும்: 098408 99581

அன்புடன்.
மூலிகை உணவு பொருப்பாளர்கள்,
வடலூர்.

Valadur Mooligai Food (3).jpg

Valadur Mooligai Food (3).jpg

Valadur Mooligai Food (2).jpg

Valadur Mooligai Food (2).jpg

Valadur Mooligai Food (4).jpg

Valadur Mooligai Food (4).jpg

Valadur Mooligai Food (1).jpg

Valadur Mooligai Food (1).jpg

2 Comments
Daeiou  Daeiou.
பாராட்டுதலுக்குரிய நல்ல பணி...தொடர வாழ்த்துக்கள்.
Sunday, May 27, 2018 at 11:25 am by Daeiou Daeiou.
Williams  Chelliah
It is a great appreciable attempt.Solution to all problems of living beings.Food with herbal will solve all diseases.Members please add and enhance this activity in our planet
Arutperunjothi Thaniperunkarunai Andavar is always with us.
Friday, June 8, 2018 at 05:06 am by Williams Chelliah