அருள்பாவலர் சக்திவேல் .வே
மன்னையில்.... வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற பெருநாள்..விழா...
இன்று... 11 -10-2018 வியாழக்கிழமை...

திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி சன்மார்க்க அன்பர்கள் ஒருங்கிணைந்து ...
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற பெருநிலை பெருவிழாவைக் கொண்டாடினார்கள்...

★ விடியற்காலை 4.30 மணி முதல்
காலை 6.30 மணியளவில் திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி
அகவல் பாராயணக் கூட்டு வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது..

★காலை 6.45 மணியளவில் ஜோதி தரிசனம் நடைபெற்றது...

★ அதன்பின்....காலை 7 மணியளவில்... வள்ளலார் ஞான மூலிகை கொண்டு தயாரிக்கப்பெற்ற ஞானமூலிகை திருவமுது வார்த்தலும் ; அன்னதானமும் நடைபெற்றது.....

இச் சன்மார்க்க நிகழ்வை ... நிகழ்த்திய ... எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்க்கு அனேக வந்தனங்கள்...

"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

"வள்ளல் மலரடி வாழி... வாழி...!

[குறிப்பு : மேற்கண்ட ... மன்னார்குடி... மூன்றாம் தெரு... தாமரை மெடிக்கல் வளாகத்தில் அமைந்துள்ள ... வள்ளலார் தர்மச்சாலையில் பிரதி வியாழக்கிழமைத் தோறும்.... காலை 5 மணி முதல் 7மணி வரை... திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணக் கூட்டு வழிபாடும்...
வள்ளலார் ஞான மூலிகை திருக்கஞ்சி வார்த்தலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது...... இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும்... தயவே உருவான வள்ளல் பெருமானாரையும் பிராத்திக்கின்றோம்...]

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி...

🙏🙏🙏🙏🔥🙏🙏🙏🙏