அருள்பாவலர் சக்திவேல் .வே
வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே....!
" வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே...."
என்று வள்ளல் பெருமானார் திருஅருட்பா (4482) பாடியுள்ளார்கள்.
ஆம் ...
வடலூர் வடதிசைக்குத் தைப்பூச நன்னாளில் வாருங்கள்... இகலோக-பரலோக வாழ்விற்கான வரங்களையெல்லாம் பெறலாம்....

★" உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்தடைமின்.! உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர்! ( திருஅருட்பா பாடல் எண் 5588)
★"உலகியரே! மெய்மை உரைக்கின்றேன். நீர் (நீங்கள்) வேறு நினையாதீர்!
★"உலகீர் வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன்... எனது மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்! (திருஅருட்பா 5595).
★பொய்தான் ஓர் சிறிது எனினும் புகலேன்... சத்தியமே புகல்கின்றேன் (கூறுகின்றேன்) நீவிர் (நீங்கள்) புனிதமுறும் பொருட்டே..! (அருட்பா 5597)..
★"உலகீர்! ஒளித்துரைக்கின்றேன் அலன்...(ஆன்மீக உண்மைகளில் எதையும் ஒளித்து - மறைமுகமாக பெருமனார் கூறவில்லை)
★"நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்(இறைவன்) தன் வார்த்தை.... நம்புமினோ ! ..... ..... ஏன் உரைத்தேன் ? இரக்கத்தால் எடுத்துரைத்தேன் .கண்டீர் ! யா(நா)ன் அடையும் சுகத்தினை நீர்(நீங்கள்) தான் அடைதல் குறித்தே.....(அருட்பா 5594)

★"உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே! .... இனி நீர்(நீங்கள்) சமரச சன்மார்க்க மெய்ந் நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே ... எண் தகுசிற்றம்பலத்தே எந்தை(என் தந்தை)அருள் அடைமின் !" (அருட்பா 5579).
★"புனைந்துஉரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்!" (அருட்பா 5576)
★"வைதாலும் வைதிடுமின் ! வாழ்த்தெனக் கொண்டிடுவேன்.... மனங்கோனேன்!
★"எல்லாம் செய்யவல்லான் ... என்னுள் அமர்ந்து இசைக்கின்றான்....
★"உத்திர ஞான சிதம்பரமே (வடலூர்க்கு வள்ளல் பெருமனார் இட்ட பெயர்) சித்தி எ(ல்)லாம் தரும் அம்பரமே! (அருட்பா5081)
★"அருட்பெருஞ் சோதியைக் கண்டேனே! ஆனந்தத் தெள்ளமுது உண்டனன்! (அருட்பா 5115)
●என்றெல்லாம் வள்ளல் பெருமனார் திருஅருட்பாவில் மனமுறுக பாடி உள்ளார்கள்.

●திரைப்படங்களில் தோன்றும் போலியான நாயகர்களின் பஞ்ச் டயலாக்குகளை நம்பும் தமிழகமே
●மேடைகளிலும் ஊடகங்களிலும் பொய்வாக்குறுதிகளை அள்ளி வீசி; கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு காசுக்காக அலையும் அரசியல்வாதிகளை நம்பும் தமிழகமே!
★ வெளிநாடுகளில் உற்பத்தியாகும் பொருட்களை தமிழ்மண்ணில் விற்பதற்காக நட்சத்திர நடிகர்களும் , நட்சத்திர விளையாட்டு வீரர்களும் கூறும் பொய்களை நம்பும் தமிழகம
●தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் தோன்றி....
சுத்த ஞானியாக வாழ்ந்து.... மரணமில்லா பெருவாழ்வில் பேரொளியாய் வாழும் ...
அருள் வள்ளலின் அருள் வார்த்தையை நம்புமின் .... நலமெல்லாம் பெறலாம்....!

"சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் ..
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்...
நித்திய ஞான நிறை அமுது உண்டனன்.....
(திருஅருட்பா.4909)