priya kumara
வள்ளலார் மேட்டுக்குப்பதில் வசிக்க ஆரம்பித்தது 1870 அல்லது 1871.

நான் வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து வருகிறேன். கந்தசாமி பிள்ளை அய்யா எழுதிய புத்தகத்தில், மேட்டுக்குப்பத்துக்கு அவர் சத்தியஞான சபை ஆரம்ப கட்டிட வேலை நடக்கும் போது (அதாவது 1971 இல் ) சென்றதாக கூறி உள்ளார். பொதுவாக அனைத்து சன்மார்கிகளும் கூறுவது 1870 இல். இதில் எது சரி என்று தயவு செய்து விளக்கவும்

6 Comments
Anandha Barathi
இதில் ச மு கா வின் குறிப்பு சரியே, உரை நடையில் உள்ள அறிவிப்பு பகுதியும் இதற்க்கு சரியாய் உள்ளது.
Wednesday, May 1, 2019 at 13:55 pm by Anandha Barathi
priya kumara
ஐயா ஒன்றில் 1971 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மற்றொன்றில் 1970. இரண்டுமே எப்படி சரி என்று கருத்தில் கொள்ள முடியும்
Friday, May 3, 2019 at 13:14 pm by priya kumara
Anandha Barathi
நீங்கள் 1870 , 1871 என்று எழுதுவதற்க்கு பதிலாக 1970, 1971 என்று எழுதினீர்கள் என்று நினைக்கின்றேன், உங்கள் கேள்விக்கு பதில் உரை நடைப்பகுதியில் உள்ள அழைப்புகள் அறிப்புகள் கட்டளைகள் என்னும் பகுதியில் உள்ளது.
Friday, May 3, 2019 at 15:35 pm by Anandha Barathi
priya kumara
Thanks Sir.
Sunday, May 19, 2019 at 03:05 am by priya kumara
priya kumara
இந்த தகவலை புத்தகத்தில் படித்தேன். இதில் கூறி இருக்கும் அனைத்தும் உண்மையா ?தயவு செய்து தெரிவிக்கவும்
வள்ளலார் அமைத்த ஞான சபை - 16 அடி சுற்றுவட்டத்தில் ஒரு பாதாள அறையும் , அதன் மேற்புறத்தில் ஒரு மேடையும் , அதன் மேல் பகுதியில் கல் தூண் போன்ற ஒரு கம்பமும் , அதில் பிறை போன்ற ஒரு அமைப்பும் அந்த பிறை மேல ஒரு அகல் விளக்கின் உருவமும் , அதில் எண்ணெய் ஊற்றி திரி போட்ட விளக்கும் , அதற்கு முன்னால் ரசம் பூசிய கண்ணாடியும் , நான்கு புறத்திலும், இரத்தின கம்பளங்கள் விரிக்கப்பட்டு , நான்கு புறத்திலும் ஏழு வண்ணங்கள் கொண்ட திரைகள் தொங்கவிடப்பட்டுள்ளன
Sunday, May 19, 2019 at 03:14 am by priya kumara
Anandha Barathi
வாரியார் சுவாமிகள் இது குறித்து விரிவாக தனது வாழ்க்கை வரலாற்றி எழுதி உள்ளார்கள். அந்த நூலில் ஞானசபை திருப்பணி என்னும் பகுதியை காண்க.

விளக்கு, ஏழு திரைகள் ஆகியவற்றை இன்றும் நாம் காணலாம். மற்றைய செய்திகளுக்கு வாரியாரின் நூலில் உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.

நன்றி
Tuesday, May 21, 2019 at 09:34 am by Anandha Barathi