h balaji
அசைவம் உணவு உண்பவர்களுக்கு சைவ உணவு அன்னதானம்?
அசைவ உணவு பரிமாறும் ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு கல்வி உதவி செய்வதற்காக சென்றிருந்தோம். அங்கே அன்னதானம் செய்ய உதவலாம் என்று நினைக்கும் பொழுது மனம் ஏற்கவில்லை.என்னுடைய எண்ணம் சரிதானா?
3 Comments
SOULMATE S
ஒரு காலத்தில் அசைவ உணவு சாப்பிடும் மிருகமோ அல்லது மனிதனோ, சில மணி நேரம் உணவு இல்லாமல் தவித்தபோது, அதை கண்ட நீங்கள் அந்த சீவர்களுக்கு அன்னதானம் செய்வீர்களா அல்லது மாமிசம் உண்பவை என்று எண்ணி யோசிப்பீர்களா மற்றல்லது அவர்கள் அசைவர்கள் என்று எண்ணி துன்பப்படட்டும் என்று விட்டுச்செல்வீரா...

அதாவது நீங்கள் செய்யும் அன்னதானத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டால், செய்யலாமே.... அசைவம் சாப்பிட்டவர்கள் உங்களால் ஒரு வேளை சைவ உணவு சாப்பிட்ட புண்ணியர்கள் ஆகட்டும்.


உங்களுடைய அன்னதானத்தை அவர்கள் வேண்டாம் என்று கூறி உதாசீனப்படுத்தினால், நீங்கள் அன்னதானமோ, பணமோ அல்லது மற்றை எதுவம் செய்யாமல் அவ்விடம் விட்டு வருவது நல்லது.
Wednesday, July 17, 2019 at 02:58 am by SOULMATE S
Natarajan Subbiramani
அய்யா... நீங்கள் சைவ உணவை அன்னதானம் செய்யும் போது தயக்கம் ஏன்? அடுத்தவர் பசிப்பிணி தீர்ப்பதே நம் நோக்கம் அல்லவா. வேண்டுமாயின், அந்த காப்பக நிர்வாகத்திடம் சைவ உணவின் மகத்துவத்தை எடுத்துரைத்து நன்வழிப்படுத்தலாம்
Wednesday, July 17, 2019 at 10:43 am by Natarajan Subbiramani
balaji h
தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி ஐயா. எனக்கு ஜீவகாருண்யம் பற்றி போதிய தெளிவு இல்லாமை தான் இந்த மன குழப்பத்திற்கான காரனம் என்று கருதுகிறேன். பசி என்று வருபவர்கள் சைவமோ அசைவமோ என்ற பேதம் பாராமல் நாம் அன்ன விரயம் செய்து வருவோம்.
Friday, July 19, 2019 at 09:37 am by balaji h