Vallalar Universal Mission Trust   ramnad......
சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது - அது மயங்கவே
சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது -
அது மயங்கவே
 
அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே


பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது -


அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன -


மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது -



சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது -


பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன -


வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன -


கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது -


காது கும்மென்று செவிடுபடுகின்றது -


நா உலர்ந்து வறளுகின்றது -


நாசி குழைந்து அழல்கின்றது -


தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது -


கை கால் சோர்ந்து துவளுகின்றன -


வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது -


பற்கள் தளருகின்றன -


மலசலவழி வெதும்புகின்றது

-
மேனி கருகுகின்றது -


ரோமம் வெறிக்கின்றது -


நரம்புகள் குழைந்து நைகின்றன -


நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன -


எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன -


இருதயம் வேகின்றது -


மூளை சுருங்குகின்றது -


சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது -


ஈரல் கரைகின்றது -


இரத்தமும் சலமும் சுவறுகின்றன -


மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது -


வயிறு பகீரென்றெரிகின்றது -


தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன -


உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.