Anandha Barathi
திருக்குறள் சன்மார்க்க உரை - ஆசிரியர் தயவுத்திரு. வடலூர் . சீனி சட்டையப்பர் அய்யா
திருக்குறள் சன்மார்க்க உரை - ஆசிரியர் தயவுத்திரு. வடலூர் . சீனி சட்டையப்பர் அய்யா

திருக்குறள் உலகப்பொதுமறை, இதன் பொதுத்தன்மை காரணமாக சமயங்களையும், பகுத்தறிவையும் அடிப்படியாகக் கொண்டு பல்வேறு உரைகள் வெளிவந்துள்ளன, இதற்கு சன்மார்க்க நோக்கில் உரைகானும் பொருட்டு சன்மார்க்க உலகின் மூத்த முன்னோடியும், சன்மார்க்க இளைஞர்களின் வழிகாட்டும், வள்ளல் பெருமானின் வழி வழித் தொண்டருமான ஆசிரியர் தவுத்திரு. வடலூர் . சீனி சட்டையப்பர் அய்யா (தமிழ் அண்ணா) அவர்களின் இதற்கு இறை அருளால் சன்மார்க்க உரை கண்டு தன்னகத்தே வைத்திருந்தார்கள்.

சன்மார்க்க சாது மதுரை தயவுத்திரு. முரளீதரன் அய்யா மற்றும் பல சன்மார்க்க அன்பர்களின் முயற்சியால் இன்னூல் 2011 ஆம் ஆண்டு தைப்பூச நாள் அன்று தயாமூலம் பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்தது.

இதுவரை காணாத முற்றும் புதிய சன்மார்க்க கோணத்தில் அய்யா இதற்கு உரை கண்டுள்ளார்.

புத்தகம் அனைத்தும் விற்று தீர்த்துள்ள நிலையில், அன்பர்களின் அன்பு வேண்டுகோளின் வண்ணம் இன்னூலின் மென்பொருள் வடிவம் இங்கு அன்பர்களின் வசதிக்காக வெளியிடப்படுகின்றது.

அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெற வேண்டுகின்றோம்.

அன்புடன்..

வள்ளலார் இளைஞர் மன்றம்.
கோட்டக்கரை - வடலூர்.

Thirukkural Sanmarkka Urai Page_3.JPG

Thirukkural Sanmarkka Urai Page_3.JPG

Download:

2 Comments
TMR RAMALINGAM
சன்மார்க்க அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. திருக்குறளுக்கு உரை எழுதுபவர்கள் இவ்வுலகில் இன்னும் பிறந்துக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு காலத்திற்கு ஏற்ப அது தனது முகத்தை வெவ்வேறாகக் காட்டிக்கொண்டிருக்கின்றது. அந்த வகையில் வள்ளலாரின் பார்வையில் திருக்குறள் எப்படி இருந்தது என்பதனை இப்பதிவில் இடம்பெற்றுள்ள மின்னூல் நமக்குக் காட்டும். இனிமேல் சன்மார்க்கிகள் திருக்குறளின் உரையினை மேற்கோள் காட்ட இந்நூலை பயன்படுத்துவார்கள். இவ்வுரையை எழுதிய காலஞ்சென்ற சீனி சட்டையப்பர் ஐயா அவர்களுக்கும், நாம் எல்லோரும் அதனை படித்து பயனுற இங்கு அந்நூலை மின்னூலாக கொடுத்த நமது பாரதி ஐயாவிற்கும் நன்றி.
Friday, March 20, 2015 at 06:40 am by TMR RAMALINGAM
Anandha Barathi
நன்றி T.M.R. அய்யா.

திரு. சட்டையப்பர் அய்யா அவர்களின் நூல்கள் மிக எளிமையானவை அதோடு மிக முக்கிய சன்மார்க்க தகவல்களை உடையவை. அன்பர்கள் படித்து பயன்பெற வேண்டும்.
Friday, March 20, 2015 at 09:24 am by Anandha Barathi