Anandha Barathi
ஸ்ரீ சித்தி வளாகம் - வினா ‍- விடை
ஸ்ரீ சித்தி வளாகம்

அறிமுகம்:

வையகத்து – வானகத்து – வளம் எலாம் கிடைக்கும் இடம் சித்தி வளாகம். அதனது அருமையையும், பெருமையையும் வள்ளல் பெருமான் பெற்ற அருட்சித்தியையும் பற்றிப் பேசுவதே இன்னூல், வள்ளலின் சித்திவளாகப் பெருமையைப் பேச மூவருக்கும், முத்தருக்கும் சித்தருக்கும் தகுதி போதாது, அப்படி இருக்க அடிமைகளாகிய நமக்கு அதுபற்றி பேச என்ன உரிமை இருக்கின்றது, அதுவும் ஆன்ம நேய உரிமையைத் தவிர.


ஆக்கம்:

மன்ற ஆசிரியக்குழுவினர்,
வள்ளலார் இளைஞர் மன்றம் ‍கோட்டக்கரை - வடலூர்

1. வளாகம் என்றால் என்ன அர்த்தம்?
செளபாக்கியம் விளையும் இடம் என்று அர்த்தம்.

2. சித்தி வளாகம் என்றால் என்ன அர்த்தம்?
எல்லாம் வல்ல இறைமைச் சித்தி விளையும் இடம் என்று அர்த்தம்..

3. ஸ்ரீ சித்திவளாகம் என்றால் என்ன?
திருவருள் வசீகரமுடைய (அருட்சித்தி) இறைவனின் திருவருள் ஓளியுடைய இடம் என்று பெயர்.

4. திருவருள் வசீகரமுடைய அருட்சித்தி யார்?
அது அருட்பெருஞ்ஜோதியாரின் அருளின் ஒருபகுதி.

5. அப்புறம்?
தனிப்பெருங்கருணையின் மறுபகுதி.

6. மேலும்?
அருட்பிரகாச வள்ளல் பெற்ற அற்புதப்பேறு.

7. அத்துடன்?
திருவருட் பேரரசின் பட்டத்தை வள்ளலுக்கு வழங்கியது அது.

8. அப்போது சீர்மிகு சித்திவளாகம் யாருக்கு சொந்தம்?
யாருக்கு சொந்தம்? அந்த அருட்சித்தியை உடைய நம் வள்ளலுக்கு தான்.

9. எப்படி நம் வள்ளலுக்கு சொந்தம் ஆயிற்று?
இறைவன் அளவுக்கு இராமலிங்க வள்ளல் உயிர்களுக்கு இரக்கம் காட்டியதால் சொந்தமாயிற்று.

10. இராமலிங்க வள்ளல் அப்படிப்பட்டவரா?
அப்படியே தான்.

11. எப்படிச் சொல்கிறீர்?
ஈச்சிறகு ஒன்று எரிந்து போனாலும் தான் எறிபவர் அவர் – அதனால்.

12. அப்போது?
வள்ளல் பெருமானின் கருணை உள்ளத்துக்கு எவ்வுலகிலும் யாதும் யாரும் இணை இல்லை.

13. அதனால்?
அருட்பிரகாச வள்ளலிலுக்கு அருட்சித்தி பேற்றை அருளினார் ஆண்டவர்.

14. அருளிய பிறகு?
அவரை, அகம், அகப்புறம், புறம் புறப்புறம் ஆகிய நான்கு இடத்திலும் கலந்து கொள்ளும் படியும் கருணை கூர்ந்தார் ஆண்டவர்.

15. விளைவு?
எல்லா உலகும் – எல்லா உயிரும் – எல்லா ஞானமும் – எல்லா வித்தையும் – எல்லா போகமும் – எல்லா இன்பமும் வள்ளலின் உடைமைகள் ஆகும்படி செய்துவிட்டார் ஆண்டவர்.

16. சித்திவளாகம் எங்கே உள்ளது?
வடலூருக்கு வடமேற்கில் 4 கிலோ மீட்டரில் உள்ளது.

17. செல்லும் வழி?
வடலூர் குறுக்கு ரோடு வழி விருத்தாசலம் செல்லும் பாதையில் 2 கி.மீ. சென்று பின் தெற்கே திரும்பி 2 கி.மீ. செல்ல வேண்டும்.

18. மாவட்டமும் வட்டமும் எது?
கடலூர்.

19. சித்திவளாகத்தில் வழிபடவேண்டிய நிலைப்பாடு?
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தீபம்.

20. அதற்குப் பிறகு?
திருக்காப்பிட்டுக் கொண்ட திருஅறை.

21. சித்திவளாகம் இருக்கும் இடம் திசை?
மேட்டுக்குப்பம், தெற்கு நோக்கி.

22. அந்த இடம் யாருடையது?
ஊர் பொதுமக்களுடையது.

23. அதற்கு மாளிகை என்ற பெயர் எப்படி வந்தது?
மேட்டுக்குப்பம் வாசிகளுக்கு குலகுருமார்கள் திருவரங்கத்து தேசிகர்கள் அவர்கள் தங்கி வந்து உபதேசித்த இடம் ஆதலில் மாளிகை என்று ஆயிற்று.

24. சித்திவளாகம் அமைப்பு?
ஒரு வீதிப்பிரகாரம், ஒரு உட்பிரகாரம், அத்துடன் ஒரு நான்கு தாழ்வாரச் சுற்று வாசல் உடையது.

25. திருத்தீபம்?
தெற்கு நோக்கியது.

26. திருவறை?
மேற்கு நோக்கியது.

27. அய்யா திருப்பள்ளிக்கு எழுந்தருளியது எப்படி?
திருவடிகள் கீழ்ப்புறமும், திருமுகம் வடபுறமும் இருக்க எழுந்தருளி இருக்கின்றார்கள்.

28. திருக்கரம்?
இடது கரம் தலையைத் தாங்கியது, வலது கரம் திருமேனியின் மீது கிடக்கின்றது.

29. இருக்கை?
உயரமில்லாத குருஞ்சட்டமுடைய ஒரு இருக்கை.

30. படுக்கை?
மெல்லிய படுக்கை.

31. திருவறைக்கு முன்பு உள்ள வாசலில் அய்யாவிற்கு அருள் மணம் (திருவருள் வழங்கும் வைபவம்) நடந்தது?
ஆமாம்.

32. அப்படி செய்து வைத்தது?
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

33. காரணம்?
அருளாட்சிப் பேற்றினை வள்ளலுக்கு வழங்க.

34. திருவருள் வைபவம் நடந்த இடம்?
திருவறைக்கு முன் உள்ள திருவறையில் தெற்கு நோக்கி.

35. எப்படி?
வெகு விமர்சையாக.

36. அய்யா?
அவர் பாட்டிற்கு சத்திய ஞானசபையை நிர்மாணித்துவிட்டு அமைதிப்பேற்றில் திளைத்தார்கள்.

37. அப்போது?
“அருள் ஒளித்திருவை” உனக்கு உரிமை செய்விப்பேன் என்று அருளினார் ஆண்டவர்.

38. எப்படி அருளினார்?
எழுந்திடு, சவுளம் செய்திடு, அழகுமங்கலக் கோலம் பூண்டிடுக, பூண்டு ஏழுலகும் அறியும்படி “அருள் சித்திக்கு உரியவன் என்பதை காட்டிடுக என்று உத்தரவிட்டார்.

39. எப்படி?
மங்கலக் கோலம் தரிக்கச்செய்து.

40. அப்புறம்?
கங்கணம் பூணச் செய்தது.

41. பிறகு?
ஆழி அணியச் செய்து.

42. தொடர்ந்து?
மஞ்சள் வஸ்திரம் கட்டச் செய்து.

43. அத்துடன்?
கையில் பொற் பிரம்பு ஒன்று ஏந்தச் செய்து.

44. மேலும்?
திருவடிகளில் ஆர்காடு வெல்வெட் ஜோடு தரிக்கச் செய்து.

45. பிற்பாடு?
அரும்பு மீசை வைக்கும்படி அருளிச் செய்து.

46. மேற்கொண்டு?
தலைமுடியை வளரச் செய்து.

47. அப்போது அய்யா எப்படி இருந்திருப்பார்?
அண்டகோடிகளுக்கும் இராஜ இராஜான் என பிரமாதமாய்
காட்சி தந்திருப்பார்.

48. திருவருள் வைபவத்தின் அடையாளம்?
திருவருள் முழுவதும் நம் வள்ளலுக்கு அருளி அவரின் அருள் ஆட்சி நடக்கும்படிச் செய்வதே ஆகும்.

49. அருட்சித்தியை பெருமானுக்கு அருட்ஜோதியார் இவ்வளவு சிறப்பாக கொடுத்தாரா?
இளவரசருக்கு பட்டாபிசேகம் அல்லவா! அது, அதனால்.

50. ஓகோ?
ஆமாம்.

51. அது எதற்கு அடையாளம்?
அது அருள் ஆட்சிக்கு அடையாளம்.

52. அப்போது ஆண்டவர் நிலை என்ன?
அருட்பிரகாச வள்ளலின் ஆட்சிக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமே.

53. எப்பொழுதிலுருந்து இந்த நிலை?
1873 ஐப்பசி 7 முதலாக.

54. அதற்கு அடையாளம்?
சன்மார்க்க கொடி கட்டி காட்டியது.

55. சரி, அப்போது அய்யா பெரிய உபதேசமா செய்தார்கள்?
ஆமாம், அது பேருபதேசம்.

56. அதில் சொல்வது என்ன?
பல செய்திகள்.

57. ஒவ்வொன்றாகச் சொல்லலாமா?
சொல்லலாமே.

58. முதலில் சொல்லியது?
வீண் காலம் போக்காமல் சத்விசாரம் செய்ய வேண்டும்.

59. சத்விசாரம் என்றால்?
அண்ட, பிண்ட மனிதாபிமான மனிதநேய, ஆன்ம நேய சம்பந்தமான விவகாரங்களை சிந்திப்பது.

60. அப்புறம்?
கடவுளைச் சிந்திப்பது வேண்டும்.

61. மற்றபடி?
தோத்திரம் செய்தல் வேண்டும்.

62. மேற்கொண்டு?
நாம் உய்வுபெற சீரிய சாதனமாகத் திருவருள் மகாவாக்கியத்
திருமந்திரத்தை சாதகமாகக் கொள்ளுதல் வேண்டும்.

63. அது என்ன?
அது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை – திருமந்திரம்.

64. மேற்கொண்டு?
ஒருமை உணர்வு தேவை.

65. அத்துடன்?
ஒருமைப்பாட்டு உணர்வு தேவை.

66. அதற்கு ஆதாரமாக?
ஜீவதயவு உடையவராய் வாழ்தல் வேண்டும்.

67. அப்புறம் சொன்னது என்ன?
அருட்பெருஞ்ஜோதி தீபம் வைத்து ஒழுக்கம் நான்கினும் பழகும்படிச் சொன்னார்கள்.

68. அப்பொழுது எழுத்துப்பணியுமா செய்தார்கள்?
ஆமாம், அருட்பெருஞ்ஜோதி அகவல், அருட்பெருஞ்ஜோதி அட்டகம் வரைந்தருளினார்கள்.

69. தொடர்பணி?
உலகம் அடையும் நன்மைகளை “உலகப்பேறு” என்னும் தலைப்பில்
பாடி அருளினார்கள்.

70. மற்றபடி?
தீயவர்களைக் கூடத் திருந்தும்படிக் கட்டளையிட்டார்கள்.

71. தோத்திரம் செய்ய?
வேண்டுகோள்-விண்ணப்பம்-முறையீடு இவை போதுமென்றார்கள்.

72. அய்யா எழுதிய விண்ணப்பங்கள்?
பிள்ளைச் சிறு விண்ணப்பம், பிள்ளைப் பெரு விண்ணப்பம் முதலிய பாடல்கள்.

73. உரைநடையில்?
சமரச சுத்த சன்மார்க்க சிறு விண்ணப்பம் மற்றும் பெரு விண்ணப்பம் முதலியவை.

74. ஆமாம், மேட்டுக்குப்பம் வந்தபின் அய்யா தம் நிலையங்களுக்குப் பெயர் மாற்றினார்கள்?
ஆமாம்.

75. சங்கத்திற்கு என்ன பெயர்?
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.

76. சாலைக்கு?
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை.

77. ஞானசபைக்கு?
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை.

78. அதன் அமைப்பு?
எண் கோண அம்பலமாக.

79. கூரை?
தாமரை நிற செப்பு ஓடுகள் வேய்ந்ததாக.

80. வாயில்?
பளிங்கினால் ஆன சந்திர, சூரிய, அக்கினி வாசல்கள்.

81. ஜோதி பீடம்?
5 அடி உயரம் உள்ள கண்ணாடியாக.

82. திரைகள்?
அசுத்த – அசுத்தா சுத்த – சுத்த மாயைத் திரைகள் ஆறாக.

83. திருவருட் பிழம்பு?
அருள் நடமிடும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக.

84. அத்துடன்?
திருக்கலசம், திரு அகண்டம் கூடத் தந்தருளினார்கள்.

85. மற்றும்?
நங்கூரச் சங்கிலி பாதுகாப்பு வளையமாகத் தந்தருளினார்கள்.

86. அய்யா, எப்போது கொடி கட்டினார்கள்?
1873, ஐப்பசி 7, அமாவாசை தீபாவளி- சித்திரை நட்சத்திரத்தில்.

87. அய்யா எப்பொழுது அருட்ஜோதி தீபம் ஏற்றினார்கள்?
1873 நவம்பர் கார்த்திகை புனர்பூசத்து அன்றைக்கு.

88. அய்யா முடிவாக எழுதிய பாடல்?
“பிச்சுலகர் மெச்ச பிதற்றி நின்ற பேதையனேன்” என்னும் பாடல்.

89. பிரபஞ்ச வெற்றி என்றால்?
மாயா பிரபஞ்சத்தை வெற்றி கொண்டதை, முரசறைந்து தெரிவிப்பதாகும்.

90. அது என்ன பாட்டு?
“அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு” என்று தொடங்கும் பாடல்.

91. அய்யா சித்தி பெற்றது எப்பொழுது?
1874, ஜனவரி 30 ல் தை மாதம் 19 புனர்பூச நாளில்; வயது 51.

92. சித்தி பெறும் போது உடனிருந்தது?
தொழுவூர் வேலாயுதனார், கல்பட்டு அய்யா

93. இவர்கள் ஏன்?
இவர்களைத் தான் திருவறையைப் பூட்டுமாறு கட்டளையிட்டர்கள் அய்யா.

94. ஞானாம்பாள் என்பவர் யார்?
அவர் சென்னைவாசி – செல்வந்தர் வீட்டுப் பெண், பொன்னு ஞானாம்பாள் என்பது பெயர். சேலம் ஹவுஸ் என்னும் பங்களாவில் இருந்தவர். சித்திவளாகத்தை ஒட்டுக்கட்டடமாக மாற்றியவர்.

95. அத்துடன்?
சித்திவளாகத் தீபம் பார்க்கும் பொறுப்பை யாருக்கு வழங்காமல் அந்த ஸ்ரீ ஞானாம்பாளிடம் தான் அய்யா வழங்கினார்கள்.

96. அப்படியா! சங்கப்பொறுப்பு?
வேலாயுதனார் கண்காணிப்பில் இருந்தது.

97. சாலைப் பொறுப்பு?
கல்பட்டு அய்யா கண்காணிப்பில் நடந்தது.

98. சபை?
பிற்பாடு ஆடூர் சபாபதி சிவாச்சாரியார் பெறுப்பில் வந்தது.

99. சித்திவளாக இடம் பொறுப்பு?
ஊர் பொது மக்கள் மற்றும் மணியக்காரரிடம் இருந்தது.

100. அய்யா சித்தி பெற்றது எப்படி?
சமாதியில், இலிங்கத்தில், ஜோதியில் கலந்து விடாமல் ஆண்டவரும், அய்யாவும் ஒன்றுபட்டு நிறைந்து விளங்குகிறார்கள்.

101. சான்று?
“பாதி இரவில் எழுந்தருளி” என்னும் பாடலாகும்.

102. ஆதலின்?
அய்யா சித்தி ஓர் அற்புதப் பெரும் சித்தி.

103. அற்புதப் பெரும் சித்தி என்றால்?
மூவுலகும் வணங்கும் முதற்பெரும் சித்தி. முழுதுமாகிய முன்னவன் சித்தி.

104. மூவுலகு என்பது?
இம்மை, மறுமை, ஒருமை உலகுகள் ஆகும்.

திருச்சிற்றம்பலம்.

 

Siddhi_Valagam_old.jpg

Siddhi_Valagam_old.jpg