Karunai Sabai-Salai Trust.
யார் சொல்றதுதான் இங்கு உண்மை?? (யானை கதை)– ஏபிஜெ. அருள்.
ஓர் வேண்டுகோள்:
எனது பணி, கருணை சபையின் பணி, என் குடும்பம், என்னை சுற்றியுள்ள அன்பர்களின் குடும்பங்கள் அனைத்துமே, அனைவரிடத்திலுமே ஒரே குறிக்கோள் தான். அது யாதெனில்; வள்ளலாரின் நெறியானது எந்த ஒரு சமய,மத,மார்க்கத்தின் கீழும் இருப்பது அல்ல அவர்தம் நெறி ஒரு தனி நெறி, அவர் தம் மார்க்கத்தின் சாதனம் புதியது, அவர்தம் மார்க்க பயன் புதியது அது மட்டுமில்லைமிகப்பெரியது என்பதை தான் இந்த உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளே அன்றி வேறு ஒன்றுமில்லை. வள்ளலார் கண்டது உண்மை கடவுள், பொது வழி, பெரிய பயன் என்றுச் சொல்ல வேண்டுமானால் அது எந்தொரு சமய,மத,மார்க்கத்தின் கடவுளையோ, அதன் ஆச்சாரங்களையோ, அவை தரும் பலன் போலவோ இருக்க முடியாது. கூடாது.

அப்படித்தானே!!!

ஆம் என்றால், ----, -----, எப்படி நம் கடவுளாக கருதமுடியும்?
ஆம் என்றால், ----, ----, யை எப்படி நாம் அணிந்துக் கொள்ள முடியும்?
( --, ---, யை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். எதுக்கு பிறர் வம்பு..comments..)
ஆம் என்றால், சொர்க்கம், நரகம் குறித்து நமக்கு ஏது விசாரணை?

பல முறை சொல்லியாச்சு. எவரையும் தாழ்வாக பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. பிறர் குற்றம் விசாரியாதிருத்தல் வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளை. வள்ளலாரின் நெறியே சிறந்தது. உயர்ந்தது என்று கூட சொல்ல முயற்சிக்கவில்லை. காரணம், அனுபவம் நான் ( நாங்கள்) பெறவில்லை என்பதே.
ஆனால் அதே நேரத்தில்......
வள்ளலாரின் முடிபான நெறியை மறைத்து, அவரால் கைவிடப்பட்ட சமய நெறியிலேயும், அச்சமய அடையாளத்துடனும் அவரைக் காட்டுவது மிக மிக தவறே ஆகும். இதை சுட்டிக்காட்ட பெரிய அறிவு தேவைப்படவில்லை.இந்த அடிப்படையிலேயே எங்களின் பணி கடந்த 11 வருடங்களாக நடைப்பெற்று வருகிறது. நெருங்கிய அன்பர்கள் சிலருக்கே என்ன என்ன பணிகளை மேற்க்கொண்டுள்ளோம், எத்தனையில் சிறப்பான ஆணைகள் பெற்றுள்ளோம் என்பதை அறிவர். இந்த விசயத்தை எங்களை உயர்த்திக்கொள்ள சொல்லவில்லை எங்கள் பணியில் சுய நலம், அறியாமை,பொய், குரோதம் இல்லை என்பதற்கே. இந்த விளக்கம் கூட இங்கு தரப்பட்டதற்க்கு காரணமே எங்களை பல்லாயிரம் பேர்கள் பாராட்டி வந்தாலும், சிலர் அதுவும் 4,5 பேர்கள் புரியாமல் இருப்பதை கருத்தில் ஆன்ம நேயத்துடன் எடுத்துக் கொண்டு, அவர்களையும் நம்மவர்களாக ஆக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையே என்னிடத்தில் உண்மையாக உள்ளது. அவர்களும் எங்களின் அன்புக்குரியவரகளாக ஆகும் நாள் வெகு தூரமில்லை. வள்ளலார் எனக்கு துணை புரிவார்கள். உண்மை ஆண்டவரும் அருள் புரிவார். எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே. நன்றி.– ஏபிஜெ. அருள்.)

ஆம். நல்ல விசாரணைக்கு வருவோம்.

யார் சொல்றது தான் இங்கு உண்மை? (யானை கதை)

ஆண்டவர் நம்மை பல பிறவிகள் எடுக்க வைத்து உயர் அறிவை பெறுதற்குறிய இந்த மனித தேகத்தில் செலுத்தியுள்ளார்கள்.
நிற்க! இந்த மனித தேகத்தில் நமக்கு சிறிதறிவு மட்டுமே தோற்றி விடுத்துள்ளார் ஆண்டவர் என்பதை நாம் தெரித்துக்கொள்ள வேண்டும். இந்த சிறிதறிவை தான் நல்ல விசாரணையில், இந்த பிறவிலேயே சத்திய அறிவாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த மனித தேகத்திலேயே பல லட்ச பிறவிகள் எடுத்த பின்பே சத்திய அறிவை பெற முடியுமென்பதே இயற்கை. நம் ஆன்மிக சான்றோர்கள் கூறும் உண்மை. இந்த பிறவிலேயே (எந்த தாழ்ந்த தரத்தில் இருந்தாலும்) சத்திய அறிவை பெறக்கூடிய வழியை கண்டுபிடித்தவரே நம் வள்ளலார். அந்த வழியின் பெயரே “சுத்த சன்மார்க்கம்” ஆகும். இந்த வழி போல் எந்த மார்க்கத்திலும் இல்லை.
சரி ஒரு யானை கதைக்கு வருவோம். ( ஒரு பெரிய மகான் சொன்னது தான். நம் வள்ளலாரும் ஒரு பாட்டில் சொல்லியுள்ளார்கள்.).
நான்கு குருடர்கள் ஒரு யானையை பிடித்திருந்தனர். அவர்கள் பிடித்திருந்த பகுதியை வைத்து பேசிக் கொள்கிறார்கள். காலை பிடித்திருந்த ஒருவன் “யானை தூண் போல் உள்ளது” என்றான். யானையின் காதை பிடித்திருந்த 2ம் நபர்; “ இல்லை இல்லை யானை சோலகு போல் உள்ளது” என்றான். வாலை பிடித்திருந்த 3ம் நபர்; “ இல்லை. யானை குச்சி போலுள்ளது” என்றான். துதிக்கையை பிடித்திருந்த 4 ம் நபர்; “இல்லவே இல்லை யானை உலக்கை போலுள்ளது” என்றான். இவர்கள் இடத்திற்கு வந்து இவர்கள் பேசியதை கேட்ட கண் பார்வை உடைய 5ம் நபர் அவர்களிடம்; நீங்கள் அனைவரும் சொல்லியது முழு உண்மையல்ல என்று கூறி யானையின் ”முழு வடிவத்தையும்” அதன் உண்மை நிலையையும் அவர்களுக்கு விளக்கினார்.
அன்பர்களே!
அந்த 4 பேர்கள் சொல்வதில் பொய் இல்லை. அதே நேரத்தில் 4 பேர்களும் முழு உண்மை உரைக்கவில்லை. காலை பிடித்தவர் யானை தூண் போல் உள்ளது என்பதில், அவர் என்ன பொய் சொல்லிவிட்டார்?. அவர் பிடித்தளவில், அவர்க்கு இருந்த அறிவில் அறிந்தளவில், நண்பர்களுக்கு நல்ல
எண்ணத்தில் தானே வியம்பினார்? ஆனால் அவர் முழு உண்மையவா உரைத்தார்? அவரை குறைச் சொல்ல முடியாது. அதே நேரத்தில் அவர் கூற்றை சத்திய அறிவில் ஒத்துக் கொள்ள முடியாது.
இது போல் தான் சமயங்களை, மார்க்கங்களை உருவாக்கிய நம் சான்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் அவர்களுக்கு தெரிந்த வண்ணம்,அறிந்த வண்ணம் நமக்கு நல்லெண்ணத்தில் தான் தெரியப்படுத்தினார்கள். ஆனால் இன்று சுத்த சன்மார்க்க வழியில் உண்மைக் கடவுளின் நிலையானது, ”எங்கும் பரிபூரணராக ஒளி வடிவில்” உள்ளது என்று தெரிய வந்தப் பிறகு,எங்ஙனம் கடவுளை பல வடிவத்தில் காட்டப்பட்டுள்ளதில் நாம் லட்சியம் வைக்க முடியும்?
அன்பர்களே!
யானையிடத்தில் அவன் கண்ட கால் உள்ளது. ஆனால் கால் யானையாகாது
யானையே முழு உண்மை. அதன் கால் அதன் அம்சம்.
இந்த நோக்கிலே தான் வள்ளலார் சொல்லிய உண்மையை தெரிதல் வேண்டும். அவர் பாடிய பாடல்களையும் ஊற்று நோக்க வேண்டும்.
என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
என் மார்க்கத்தில் உண்மையறிதலே, என்கிறார் வள்ளலார்.
(ஆதாரம்:
வள்ளலார் அவர் கைப்பட எழுதி வெளியிட்ட அறிவிப்பு நாள் 21-04-1871.)

நன்றி.– ஏபிஜெ. அருள்.
elephant-1.jpg

elephant-1.jpg

elephant leg.jpg

elephant leg.jpg

elephant ear.jpg

elephant ear.jpg

elephant trunk.jpg

elephant trunk.jpg

elephantn tail.jpg

elephantn tail.jpg

10 Comments
ram govi
Arul, your family had done so much contribution for SSSS renaissance then anyone I know off that too beyond our financial abilities, kudos from all of us, Vallalar is with you and he is nurturing your intelligence , VS visitors are witnessing it, the moment I heard about your family, I always think that your kids are of my own all the time, just want to mention our proximity with your family here.

Everyone in Life have different scale of SWOT (strength weakness opportunity threat), its nature's design for all of us to have limitation , its due to fulfill our responsibilities, not to pinpoint anyone here, I have so many limitations in abilities, social interactions, leaderships etc.,

We cannot look at our own back, but all your postings and books have two themes Truth and Non Religiousness, they are core of SSSS, that is very good for new comers but SSSS is more than that, it is deep and inscrutable, just some one talking about religion, caste system, applying holy ashes, giving holy ashes, idol worship etc., doesn't make that individual unworthy, he might be a Utthaman and with the particular maya part attribute just like us without awareness eating two times a day food (No gratitude to God and not surrender triggers hunger) , eating full stomach, sleep and asleep (not wakeful) are continuous sin we do every day.

We all know that we can live without food like Vel, Porur Samy etc., but still we eat and fail to solidify our vital fluid, precipitate and quantimize it to radiate Light.

Also individual might act like Vallalar by visiting temples (for kids and family), apply holy ashes (for business purpose), talking about caste/religion (for scientific enquiry) etc.,

Humans existence are complex to say, just by talking about SSSS we are not superior than who follow religious system, drinking, apply ashes etc., there might be Great Atman seated in the physical body , we can never go near their Noble characters, please don't be deceived, everyone is aware of acahras please let us go beyond, caste and religion talk I am married to an individual from different caste so might be the story from everyone here, we have to discuss here , how to refrain from four evils (food, sleep, senses and fear) scientifically and apply systematic observation, measurement, and experiment, and the formulation, testing, and modification to the process by modern day protocols along with surrender to APJ to not to kick off ego/sympathetic system.

Please do not undermine people who do not follow SSSS principles, observe sharply , we will understand why God had given human sheaths for those individuals, they have Great characters and are little God by themselves.

We have to utilize this birth fully to observe our thoughts and acts to become as that of Vallalar, He had left traces of Truth in his every step in in his Life at Chennai,Vadalur, Mettukuppa and Siddhi Valagam etc., Let us observe, be humble, adhere and become Him.

I listen to Quran (so much of respect for Allah) & Bible as often as possible and these holy scriptures also talks about true SSSS, every literature has Tattwas influenced in it since Peruman had given Supreme key of empathy we can eliminate illusions part on any scriptures, in life , if some message is coming to us , it is driven by APJ, look closely in it, it has a message for us from God.

I like to be in silent most of the time that is call of our Ultimate Guru but this posting is to touch You Sir, also of little trace of Maya of I, please take the Truth of it, we respect and love you, please move forward, Read as much as possible on Science,Technology,Reality, Quantum etc., and share it in your SSSS classes. Good Bye.
Wednesday, March 16, 2016 at 22:14 pm by ram govi
Sivaram Narayan
அன்புடையீர், வள்ளலாரின் நெறி - சமயமத யுத்த நெறி அல்ல! அது சமயமத யுத்தம் கடந்து, சமரசம் காணும் அருட்கருணை நெறி என்பது இங்கு சிறு குழந்தைக்கும் நன்கு தெரியும். இங்குள்ளவர்கள் எல்லோரும் உருவ வழிபாடு மற்றும் ஆச்சாரங்கள் கடந்த பக்குவிகள்தான். யாரும் அபக்குவிகள் அல்லர். ஆகையால், யாரையும் குறைத்துக் குறிக்க வேண்டாம்.அதே சமயத்தில், தாங்கள்தான் யானையின் கால் யானையாகாது என்பதை அறியாது, காலைத் தூண் என்றும், அந்தத் தூணைத் தனித்த நிலையென்றும் பலத்த வம்பு செய்கின்றீர்கள். புதுநெறி என்று சுத்த சன்மார்க்கத்தையும், புதுக் கடவுள் என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரையும் கொச்சப் படுத்துவது தாங்கள் தான். தங்களின் போக்கில் பொருள் கொண்டால், தினம்தினம் புதுமார்க்கங்களும், கடவுள் அனுபவங்களும் புற்றீசல்கள் போல் பிறந்த வண்ணம் இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், சுத்த சன்மார்க்கமும், அருட்பெருஞ்சோதி ஆண்டவரும் வருகின்ற புதிய தலைமுறையினரால் பழைய தத்துவமாகக் கருதப்படும். கவணக் குறைவு வேண்டாம். அனுபவம் தாங்கள் பெறவில்லை என்றும் ஒருவாறு உண்மையை ஒத்துக்கொள்கின்றீர். உத்தமம். கலக்கம் வேண்டாம். கடவுள் கருணை செய்வாராகுக. ஆகவே, அனுபவம் பெற்ற அருளாளர்கள் உரைப்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள். சுத்த சன்மார்க்கம் ஒரு புதுமார்க்கம் அல்ல. இவ்வுலகம் மட்டுமல்ல. எத்தனையோ அண்டங்களும் எண்ணற்ற உலகங்களும் உள்ளது. அத்தனைக்கும் பொதுவான மார்க்கமே சுத்த சன்மார்க்கம். அனைவருக்கும் பொதுவான கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். மற்ற மதங்களைத் தோற்றுவித்தவர்களும், சித்த புருஷர்களும், மகான்களும், மற்றும் பலரும் இவ்வையகத்தும், வானகத்தும், மற்றகத்தும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரையே போற்றி வணங்குகின்றார்கள் என்பது இங்கு அறியத்தக்கது. அதில் வள்ளலாருக்குக் கிடைத்தது வேறு யாருக்கும் கிடைக்கப் பெறவில்லை. அறிக உண்மையை! அருட்பா ஆறாம் திருமுறை ஆதாரங்கள்;

"எல்லா உலகமும் என்வசம் ஆயின …"
"நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்
வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்
கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்
தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே."
"துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச் சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே"
"உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும் ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்…"
"எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம், எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே."
"பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ
அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ…"
"பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக் கழுதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே"
"பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்…"
"பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும் புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி..."
"பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும் புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்…"
"தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள் ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்…"
"தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச் சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள் நாட்டை எலாம் கைக்கொண்டேன் நான்."
"சின்மய வெளியிடைத் தன்மய மாகித் திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்…"
"ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில் அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்…"
"நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்…"
"அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்…"
"என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும்…"
"…நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே."
"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள் அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி.."
"பொதுவது சிறப்பது புதியது பழயதென் றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி…"
"எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர் அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி…"
"பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி…" (இது மிகத்தெளிவூட்டும் ஆதாரம். அறிக.)...

விரிக்கப் பெருகும். தொடரட்டும் அருட்பணி. நல்லது.
நன்றி! நல்வாழ்த்துக்கள்!
Wednesday, March 16, 2016 at 22:30 pm by Sivaram Narayan
ஸ்வாமி  இராஜேந்திரன்
அன்புள்ள சிவராம் அய்யா, சன்மார்கதிற்க்கு சமய ஆச்சாரங்கள் முக்கிய தடை என்று பெருமானார் ஏன் கூறினார்கள்? தற்போது இருக்கும் ஆலயங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் ஆகியவற்றை என்ன செய்வது? ஓரு சைவர், ஒரு முஸ்லிம் அல்லது ஒரு க்ரிஸ்தவர் அவரவர்கள் மார்கங்களில் இருந்து கொண்டே எவ்வாறு சன்மார்கி ஆவது? இக்கேள்விக்கு விடை கிடைத்தால் கருத்து வேற்றுமை குறையும் என்று தோன்றுகின்றது! நன்றி
Thursday, March 17, 2016 at 10:48 am by ஸ்வாமி இராஜேந்திரன்
narayani julu
மிகவும் நன்றி மேடம். ஆதாரமில்லாமல் எதையும் நீங்கள் கட்டுரை தர மாட்டீர்கள்.இதற்குரிய ஆதாரமான வள்ளலார் குறிப்பு அல்லது பாடல் உண்டா மேடம்? உங்கள் சகோதரி.
Thursday, March 17, 2016 at 16:48 pm by narayani julu
Sivaram Narayan
மிகமிக எளிது அய்யா. எவ்வுயிரையும் தன்னுயிராய்ப் பாவிக்கின்ற எல்லோரும் தயவுடையவர்களே. அப்படித் தயவுடையவர்கள் எல்லோரும் சுத்த சன்மார்க்கிகளே. எல்லா மதங்களிலும் தயவுடைய சைவர்களும், கடின சித்தமுடைய அசைவர்களும் இருக்கின்றார்கள். நாம் தயவுடைய ஒத்தகருத்துடைய சைவர்களுடன்/வீகன்களுடன் என்நாட்டவராயினும் நல்ல உறவு வைத்துக்கொண்டு, நாம் வசிக்கும் இடங்களிலுள்ள எந்த ஆலயத்திற்கும் சென்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரை அவர்களின் சமயமத ஆச்சாரங்களை அனுஷ்டிக்காமல் பிராத்திக்கலாம். நான் மசூதிக்குச் செல்லும்போது அவர்கள் போலவே நமாஸ் செய்கின்றேன். எல்லாம் வல்ல அல்லா என்று ஏத்தப்படும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரே என்று என்னுள்ளே கரைந்து நான் உருகும்போது எனது பிராத்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதை உணர்கின்றேன். அதுபோலவே சிலையில்லாத கிருஸ்தவ-இந்து ஆலயங்களுக்கும் சென்று எல்லாம் வல்ல கர்த்தாவாகிய அருட்பெருஞ்சோதி ஆண்டவரைப் பிராத்தனை செய்கின்றேன. இங்கு, 'தென்னாடுடைய சிவனே, என்நாட்டவர்க்கும் இறைவா!' - என்னும், நம் தமிழ்ப் பழம்பெரும் பக்தியை நினைவுகூர்ந்து புரிந்துகொள்வோமாக. அசைவ உணவுடையோர் புறத்தவரே. ஆனால் எனது அன்புமிகும் பிராத்தனையை எவரும் எந்த ஆச்சாரத்தாலும் தடைபோட முடியாது. நன்றி! நல்வாழ்த்துக்கள்!
Thursday, March 17, 2016 at 18:05 pm by Sivaram Narayan
Logith sharma
தங்களின் கட்டுரை மிகவும் அருமை அம்மா , தங்களின் இக்கட்டுரை ‘உண்மை கடவுளின் நிலையை முழுவதுமாக அறிந்துகொள்ளவேண்டும்” என்ற உண்மையை உரைப்பதாக உள்ளது.அதாவது வள்ளலார் வாக்கியத்தின் படி “நாம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது” - விசாரித்து ‘உண்மை கடவுளின் நிலையை தெரிந்தது கொள்ள வேண்டியது.
நான் வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை
APJ அருள் அம்மாவும், அய்யாவும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன், நான் தங்களுக்கு போன் செய்த போது என்னை திட்டி விட்டீர்கள் “மற்றவர்களுடைய comments –க்கு, சிறியேன் ஆகிய என்னுடைய வார்த்தைகள் சரிப்பட்டுவராது என்று கூறி”
-எனைதான் வைதாலும் வைதுடுமின் வாழ்த்து என கொண்டிடுவேன்
இப்படிக்கு சிறியேன் ஆகிய Logith
Friday, March 18, 2016 at 00:17 am by Logith sharma
APJ Arul
ஆறாம் திருமுறை -

அனுபவ மாலை -

எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
Friday, March 18, 2016 at 13:10 pm by APJ Arul
Sivaram Narayan
அன்புடையீர், மேலே உள்ள ஆறாம் திருமுறை - அனுபவ மாலைப் பாடலை இங்கு வெளியிட்டமைக்க மிக்க நன்றி. அதன் உண்மைப் பொருள்ளை நன்கு புரிந்தால், புரியாத மதவாதிகள் போலத் தாங்கள் புலம்ப மாட்டீர்கள். எல்லா மதத்தவரும், மார்க்கத்தவரும் அவரவர் வணங்கும் கடவுளே தனிப்பெரும் பதியென்றும், மற்றவர் கடவுளர் மட்டமே என்றும், 'அது வெறும் தத்துவமே' - என்றும், சண்டை செய்கின்றனர். அவர்கள் போலவே தாங்களும் குருடர் கரியைக் (யானையைக்) கண்ட கதைபோலே கதைக்கின்றீர்கள்!

அருளனுபவம் அடையும்போது தங்களின் தவறுக்கு வருந்தி அழுவீர்கள். அப்போதுதான் அடக்கம் வரும். இல்லையேல் வெற்று அலம்பலே, கண்ட இடங்களில் மிகும். இந்த இயற்கை உண்மையை எல்லாச் சித்த புருஷர்களும், மகான்களும் நன்கு அறிவர். ஆகவே வன்மைமிகும் சமயமத அறியாமைகளை அவர்கள் சாடுகின்றார்கள். அதில் வள்ளலார் தலைசிறந்து விளங்குகின்றார். அதாவது, சாடுவதோடு நிற்காமல், ஒன்றாம் தெய்வத்தை, நம் சண்டையை விடுத்து, ஜீவகாருண்யத்தால் மனித குலத்தை இணைத்து, அதன்பால் அன்பைப் பெருக்கி, அந்த ஆண்டவரைத் தொழுகை செய்வித்து, எல்லா இன்பையும் எல்லோரும் அடைய எக்காலத்தும் நமக்கு உற்ற துணையாகவும் இருந்து அருள்பாலித்து வருகின்றார். இதை முதலில் அறிந்தால் அருள்நலம் அடையலாம். நன்றி! நல்வாழ்த்துக்கள்!

"உரை அற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரை அற்றது ஒன்றைக் கரை காணல் ஆகுமோ
திரை அற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரை அற்று இருந்தான் புரிசடையோனே." ---- திருமந்திரம்
"எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே." - தனித் திருஅலங்கல் (ஆறாம் திருமுறை)

நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே
பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே
மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா
பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே. - தனித் திருஅலங்கல் (ஆறாம் திருமுறை)

"உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே." - திருக்கதவந் திறத்தல் (ஆறாம் திருமுறை)

"உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்
ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்
எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே." - தனித் திருஅலங்கல் (ஆறாம் திருமுறை)

"நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
ஊன்நாடி நில்லா உழி." - ஆறாம் திருமுறை

"எம்மத நிலையும் நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்துவே றெண்ணிய துண்டோ..."ஆறாம் திருமுறை
Friday, March 18, 2016 at 17:57 pm by Sivaram Narayan
narayani julu
என்ன உயர்திரு சிவராம் நாராயண் அய்யா. எதற்கெடுத்தாலும் மறுப்பா? என்ன தான் சொல்ல வருகீறீர்கள்? என்ன தான் செய்யச் சொல்கிறீர்கள்.? அய்யா உங்கள் கேள்விக்கு நேற்று வந்த நானே பதில் சொல்வேன். நீங்கள் தந்துள்ள வரிகளை அதாவது: “இந்த இயற்கை உண்மையை எல்லாச் சித்த புருஷர்களும், மகான்களும் நன்கு அறிவர். ஆகவே வன்மைமிகும் சமயமத அறியாமைகளை அவர்கள் சாடுகின்றார்கள். அதில் வள்ளலார் தலைசிறந்து விளங்குகின்றார். அதாவது, சாடுவதோடு நிற்காமல், ஒன்றாம் தெய்வத்தை, நம் சண்டையை விடுத்து, ஜீவகாருண்யத்தால் மனித குலத்தை இணைத்து, அதன்பால் அன்பைப் பெருக்கி, அந்த ஆண்டவரைத் தொழுகை செய்வித்து, எல்லா இன்பையும் எல்லோரும் அடைய எக்காலத்தும் நமக்கு உற்ற துணையாகவும் இருந்து அருள்பாலித்து வருகின்றார். இதை முதலில் அறிந்தால் அருள்நலம் அடையலாம். நன்றி! நல்வாழ்த்துக்கள்!” ----- இதை யார் மறுத்தார்கள். ஏபிஜெ அருளும் அதை தானே சொல்கிறார்கள். அடுத்து பாடல்கள்: எல்லோருமே ஏற்றுக் கொண்டப்பாடல்களே. அதன் அடிப்படையிலேயே தான் ஏபிஜெ அருள் அவர்களின் ”யானை கதை”. அதுவும் வள்ளலாரின் பாடல் ஆதாரமாக. எனக்கு தெரிந்து மிக அருமையான கட்டுரை.யானையின் கால் அதன் முழு உருவமாகாது. ஆனால் அது யானையின் ஒரு உறுப்பு. அது போல் தான் எதுவாக இருந்தாலும், அனைத்துமே கடவுளின் அம்சமே. ஒரு அம்சம் கடவுளின் முழு பரிபூரணமாகாது. ஒன்றொனும் ஒன்றே என்றப் பிறகு வேறுப்பட்டவை என எதையும் கூற முடியாது. உண்மைக் கடவுளை காண்பதே இம்மார்க்கத்தின் கொள்கை என்கிறார் வள்ளற்பெருமான் என்பதே ஏபிஜெ அருள் அம்மாவின் கட்டுரை.அக்கடவுளின் உண்மையறிய வள்ளலார் ஒரு உண்மை, பொது வழியை கண்டு உலகிற்கு வெளிப்படுத்துகிறார் என்பதே கட்டுரைகள். சுத்த சன்மார்க்கம் என்பதற்கு என்னப் பொருள் சொல்கிறார் நம் வள்ளலற்பெருமான் தெரியுமா? சன்மார்க்கத்தையும் மறுப்பது சுத்த சன்மார்க்கம் என்கிறார்கள். (பக்கம்: 402) பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். பார்க்க வள்ளலார்.ஆர்க்.ஆதாரத்துடன் வரும் கட்டுரைகளை மறுப்பது வள்ளற்பெருமானையே மறுப்பது. வள்ளற்பெருமானை மறுப்பது உங்கள் விருப்பம். ஆனால் இங்கு இல்லை. நன்றி.
Tuesday, March 29, 2016 at 14:14 pm by narayani julu
s raja k.s
நம் பெருமனாரின் பாடல்:”இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலேகதைக்கின்றார்’’ (கரி;யானை கதை) வரிகள் மூலம் விளக்கம் தந்துள்ளது பயனாக அமைந்துள்ளது.
Thursday, May 26, 2016 at 15:30 pm by s raja k.s