கவிஞர். கங்கைமணிமாறன்
மலேசியா கோலாலம்பூரில்... வள்ளல் பெருமான் விழாவில் சிறப்புரை
வரும் அக்டோபர் 9-ஆம் தேதி மலேசியா- கோலாலம்பூரில்

பெருமானின் 200-வது அவதாரத் திருநாள் விழாவில் சிறப்புரை ஆற்றுகிறேன்.

கவிஞர். கங்கைமணிமாறன்
இறைவன் எங்கே இருக்கிறான்?
இறைவன் இல்லா

இடத்தில் எல்லாம்

ஏனோ தேடுகிறோம் - அவன்

இருப்பை உணரத்

தெரியா மல்நாம்

இருவிழி மூடுகிறோம்!

Read more...
Senthil Maruthaiappan
மிக அருமையான பாடல் வரிகள்.
Wednesday, December 9, 2020 at 23:34 pm by Senthil Maruthaiappan
கவிஞர். கங்கைமணிமாறன்
*வள்ளல் - ஆர்?* சந்தக் கவிதை
*எம்பெருமானார் வள்ளல்பெருமான்

பொற்பாதங்களுக்கு

இத் தீந்தமிழ்க் கவிதை சமர்ப்பணம்!*

சங்கத் தமிழ் பொங்கிவரச்

சந்தநயம் கொஞ்சிவர

சன்மார்க்கம் சொல்லவந்த வள்ளல்-ஆர்?-அவர்

Read more...
3 Comments
Natarajan Subbiramani
கவிதை படிப்பதற்கு மிகவும் கனிவாக, இனிமையாக உள்ளது அய்யா.
தங்களுக்கு என் நன்றிகள்
Friday, October 16, 2020 at 02:40 am by Natarajan Subbiramani
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நன்றி ஐயா. எம்பெருமானார் பற்றிய இந்தச் சந்தக் கவிதைக்குப் பார்வையாளர்கள் அதிகம் இல்லையே என்னும் கவலை எனக்குள் இருக்கிறது.
ஆயினும் பெருமானார் இந்த அலங்கலை அணிந்தருள்வார் என்னும் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.
Monday, October 19, 2020 at 12:20 pm by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
magudadheeban
அருமை அய்யா அருமை.
தங்கள் பேச்சின் வீர்யத்தை ஏற்கனவே இரசித்திருக்கிறேன்.
அதே வேகம் சந்தக் கவிதையில் துள்ளிக் குதிப்பதைக் கண்டு மகிழ்கிறேன் நிறையக் கவிதைகள் தாருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம் நாங்கள். அதிகம் பேர் படிக்கவில்லையே எனக் கவலற்க. வள்ளல் படிப்பார் நிச்சயமாக. அவர் படித்தால் அது அனைத்து உயிர்களும் படித்தது போல்.
உயிரில் யாம், எம்முள் உயிர்...
தொடர்க தங்கள் பணி...

மகுடதீபன்
Tuesday, October 20, 2020 at 05:02 am by magudadheeban
கவிஞர். கங்கைமணிமாறன்
உயிர்ப்பறவைக்கு ஒரே கூடா?
வள்ளல் பெருமானுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டு.

உடல் அழியும்.ஆன்மா அழியாது.

செய்த வினைகளுக்கேற்ப

அது பிறிதோருடம்பில் பிரவேசிக்கும் என்பதை அழுத்தமாய் அறிவுறுத்துகிறார் அவர்.

"சிலர், முன்தேகம் எடுத்ததும் பின்தேகம் எடுப்பதும் இல்லை.

இப்பொழுது எடுத்த தேகம் அழிந்தால்

Read more...
Natarajan Subbiramani
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

வள்ளுவர் திருமூலர் மாணிக்கவாசகர் என வாழையடிவாழை வந்த சாகாக்கல்வி.
Friday, October 16, 2020 at 02:48 am by Natarajan Subbiramani
கவிஞர். கங்கைமணிமாறன்
அலைகிறது ஆன்மா
ஆன்மாவின் அழுக்குச் சட்டைதான்

நம் உடம்பு.

ஒருநாள் துவைக்காவிட்டாலும்

நாறிப் போய்விடும்..!

அதனால்தான்

நித்தம் துவைக்கிறோம்.

Read more...
கவிஞர். கங்கைமணிமாறன்
தேகமே தித்திக்கத் தேவாரம் பாடுவோம்!
கடவுள் என்பவன் -

என்பது சரியா?

கடவுள் என்பவள் -

என்பது சரியா?

கடவுள் என்பது -

என்பது சரியா?

Read more...
கவிஞர். கங்கைமணிமாறன்
விடைதேட முடியாத விசித்திரம்!
வள்ளலார்-

அண்டத்தைக் கிழித்து

அதிசயமாய்ப் புறப்பட்டு வந்த

அவதாரப் புருஷர் அல்லர்-

ஓர் அன்னைக்கும் தந்தைக்கும்

அற்புதமாய்ப் பிறந்து வந்த

Read more...
கவிஞர். கங்கைமணிமாறன்
மாமருந்து
வரூஉம் 21 ஆம் தேதி வடலூர் தைப்பூச விழாவில் சபைக்கு அருகில் திருவண்ணாமலை பாபு சாது அடிகளார் நிகழ்வில் பிற்பகல் 1.30 மணிக்கு உரையாற்றுகிறேன்.

தலைப்பு: "மாமருந்து"

கோதண்டபாணி S சண்முகம்
மாமருந்து என்று தலைப்பு இப்போது ஒரு சரியாக தலைப்பு தான். அந்த மருந்து எது என்பதை யாரும் தெளிவுபடுத்துவதில்லை. அந்த மருந்து எது என்று ஐயா வள்ளலார் அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.அந்த மருந்து
”சாகா தலை வேகா கால் போகா புனல்" என்று கூறியுள்ளார். ஆனால் அது எதுவென்று இதுவரையில் சன்மார்க்கவாதி என்று கூறிக்கொள்பவர்கள் ஒருவரும் ஆராய்ச்சி செய்ததாக தெரியவில்லை.
அந்த மருந்து எது என்று தாங்களாவது ஆராய்ச்சி செய்து உலகத்திற்கு தெளிவுபடுத்துங்கள்.

அனைவரும் கூறுவது போல்
வேகா கால் என்றால் வாசி என்றும் போகா புனல் என்றால் நமக்குள் உருவாகும் அமுதமென்றும் கூறாதீர்கள். ஐயாவை மனதாற உருகி வேண்டி கேளுங்கள். ஆராய்ச்சி செய்து என்னை போன்றவர்களுக்கு தெளிவை தந்து இவ்வுடம்பை ஒளிவுடம்பாக்ககூடிய மருந்து எதுவென்று தெரியபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Friday, January 18, 2019 at 01:31 am by கோதண்டபாணி S சண்முகம்
கவிஞர். கங்கைமணிமாறன்
திறவுகோல்
வரூஉம் 20ஆம் தேதி காரைக்கால் கீழக்காசாக்குடி வள்ளலார் விழாவில்

சிறப்புரை ஆற்றுகிறேன்.

தலைப்பு : மோட்ச வீட்டின் திறவுகோல்

கவிஞர். கங்கைமணிமாறன்
வழக்கமானவரா வள்ளலார்?
வள்ளலாருக்கு முன் உயிரிரக்கம் பற்றி உணர்வாளர்கள் எவரும் உள்ளம் தைக்குமாறு உரைக்கவில்லையா?

வள்ளலாரைப்போல் பேரன்பின் உச்சத்தில் நின்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கிக் கரையவில்லையா?

அவரைப்போல் வேறொருவர் கருணைப் பேராறு கரையது புரளவந்து அருள்நயந்த சன்மார்க்கர் ஆகவில்லையா?

வள்ளலாரைப்போலத் தாயிற்சிறந்த தயாவாக எவரும் நடந்துகாட்டவில்லையா?

-இப்படியாகப் பல வினாக்கள் எதிர்முனையில் இருந்து காற்றைக் கிழிக்கும் கணையாக வந்து நம் காதுகளைக் காயப்படுத்துவது நடக்கக் கூடியதே.

அதை அலட்சியப்படுத்துவதோ கண்டுகொள்ளாமல் Read more...
4 Comments
Williams  Chelliah
Deep analisise.Absolutely correct and true.Thank you Ayya.
Tuesday, January 1, 2019 at 11:48 am by Williams Chelliah
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நன்றி சகோதர.
புத்தாண்டு வாழ்த்துகள்.
Tuesday, January 1, 2019 at 12:57 pm by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
Karunanithi Munisamy
மிக அருமையான பதிவு ஐயா. எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கம்.
Thursday, January 3, 2019 at 04:38 am by Karunanithi Munisamy
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நன்றி பெருமானே.
Monday, January 7, 2019 at 19:00 pm by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்