SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் ஒரு மாமன்னர்


வள்ளலார் ஒரு மாமன்னர் c

ஒவ்வொரு மனிதனும் தன் மகன் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இனி தன் மகனே அரசனாகட்டும் என்று தன் மகனுக்கு மகுடம் சூட்டுவது வழக்கம். அதேபோல் இறைவனும் தன் மகனான வள்ளலாருக்கு ஆட்சி செய்ய மகுடம் சூட்டினான்.
ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில்
ஜோதி மா மகுடம் சூட்டிய தந்தையே (அகவல் வரி 1130)

அண்ட பகிரண்டம் முழுவதும் ஆட்சி செய்யும் இறைவன் தன் கையில் பிடித்திருந்த செங்கோலை தன் மகனாகிய வள்ளலாரிடம் தந்து இனி நீ ஆட்சி செய் என்று கூறினான்.
தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே (அகவல் வரி 1134)
அரசனுக்குக் கொடி வேண்டும் அல்லவா?
சேர மன்னனுக்கு வில் கொடி.சோழ மன்னனுக்கு புலிக் கொடி.பாண்டிய மன்னனுக்கு மச்சக் கொடி.சைவத்திலே ரிஷபக் கொடி. வைணவத்திலே கருடக் கொடி. வள்ளலாருக்கு சன்மார்க்கக் கொடி.
அரசன் மக்களுக்குக் கல்வி அறிவு தரவேண்டும் அல்லவா
வள்ளலார் என்ற அரசர் கல்விக்கூடம் அமைக்கிறார்.

கல்வி அறிவு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்று குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை படிப்பதற்கு கல்விக்கூடம் அமைத்தார்.தமிழ் மொழி மட்டும் அல்லாது வட மொழியும் உலக மொழியாகிய ஆங்கில மொழியும் கற்கவேண்டும் என்று மும்மொழித் திட்டத்தையும் ஆரம்பித்தவர் வள்ளலாரே.

உலக வாழ்விற்குத் திருக்குறள் அவசியம் என்று கருதிய வள்ளலார் திருக்குறள் வகுப்பு நடத்தவும் ஏற்பாடு செய்தார்.
தான் தொடங்கிய சன்மார்க்க பாட சாலையில் நன்றாகப் படிக்கின்ற மாணவர்கட்கு அவர்கள் படிப்பிற்குத் தக்கவாறும் அவர்கள் குடும்பத்திற்குத் தக்கவாறும் சன்மானம் அதாவது உதவித் தொகை தரப்படும் என்று அறிவித்தார். மாணவனின் குடும்பத்திற்கும் ஊதியம் தந்தவர் வள்ளலாரே.

 என்றரர்.வறுமையில் வாடிய மக்களுக்கு மன்னன் உணவு அளிக்கவேண்டும்அல்லவா
வள்ளலார் உணவு அளிக்கிறார்.

தன்னைச் சார்ந்த மக்கள் பசிப்பிணியினால் வருந்தக்கூடாது என்றுதான் வள்ளலார் தருமச்சாலை  நிறுவி ஜாதி,மத,சமய பேதம் ஏதும் இன்றி அனைவருக்கும் உணவு (சம பந்தி போஜனம்) அளித்தவர் வள்ளலாரே.

மன்னர்கள் ஆலயம் கட்டினார்கள் வள்ளலாரும் கூட ஆலயம் நிறுவினார்

அதேபோல் ஒரு குறிப்பிட்ட சமயத்தார் மட்டுமின்றி  வந்து வணங்உள்ளேகக்கூடிய ஆலயமாக ஞான சபை ஒன்றை நிறுவினார்.  எந்த ஆலயத்திலும்  இல்லாத  ஒரு புதுமையை வள்ளலார்செய்தார்.அதாவது மாமிசம் உண்ணுவோர்ஆலயத்தின் உள்ளே வரக்கூடாதுஎன்றார்


மன்னர்கள் நீதி வழங்க நீதி மன்றம் ஏற்படுத்தினார்கள்.
வள்ளலாரும் நீதி மன்றம் அமைத்தார்.

குற்றம் புரிதல் மக்கள் இயல்பே. தவறு செய்கின்ற மக்களைத் திருத்தவும் தண்டிக்கவும் ஒரு நீதி மன்றம் வேட்டவலம் ஜமீன்தாரை அக்ராசனராக வைத்து நீதி வழங்க ஏற்பாடு செய்தார்.

மக்கள் ஞானம் பெற ஞான நூல்களை வெளியிட்டார்.

ஒழிவில் ஒடுக்கம்,சின்மய தீபிகை போன்ற ஞான நூல்களையும் பதிப்பித்தார்.
எந்த அரசனும் செய்யாத ஒன்றை வள்ளலார் செய்தார்.

மனித தேகம் எடுத்த யாரும் இறந்து போகக்கூடாது .எப்படி வாழ்ந்தால் இறவாமை பெறமுடியும் என்ற அறிவை மக்கள் பெறுவதற்காக ஒரு சன்மார்க்க சங்கம் அமைத்தார்.
அஞ்சுகின்ற மக்களுக்கு என்னால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் யாரும் அஞ்சவேண்டா ம் என்று உறுதி அளித்தது மட்டுமின்றி உங்கள் அனைவருக்கும் நான் துணையாக இருக்கிறேன் கூறியவர் அதேபோல் நமக்குத் துணையாக இன்றும் இருக்கிறார்.
அவர் ஒரு மாமன்னர்தானே.

Audio:

venkatachalapathi baskar
அருமை.
Monday, November 4, 2019 at 15:10 pm by venkatachalapathi baskar