Universal Government of Suddha Sanmaarkkaa
வள்ளலார் அன்பரும், தொழிலதிபரும் , காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நேற்று சென்னையில் காலமானார்.
தொழிலதிபரும் வள்ளலார் அன்பரும் காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் இன்று சென்னையில் காலமானார்.

91 வயதாகும் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சென்னையில் மயிலாப்பூர் ஏ.வி.எம்.ராஜேஷ்வரி மண்டபத்தில் நடைபெற்ற காந்தி - வள்ளலார் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மயங்கியுள்ளார்.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர்.

இவருக்கு 2007ல் பத்ம பூஷன் விருது வழங்கி பாரத அரசு கௌரவித்தது.

தமிழக சட்டப் பேரவை உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். 15 ஆண்டுக் காலம் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக சேவை புரிந்துள்ளார்.

காந்தியத்தை வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம். மேலும்,

சமரச சுத்த சன்மார்க்கத்துக்காக பல அளப்பரிய பணிகளைச் செய்துள்ளார்.

அவர் காந்தி ஜயந்தியான அக்.2ம் நாளில், காந்தி - வள்ளலார் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முதல் வரிசையில் அமர்ந்து உரையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அவர் உயிர் பிரிந்துள்ளது.

நமது சன்மார்க்க அரசின் சார்பாக அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்,

நமது திருவருட் தந்தையார் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருவடிகளையும் வேண்டுகின்றோம்.

pollachi_mahalingam.jpg

pollachi_mahalingam.jpg

10 Comments
Daeiou  Daeiou.
சன்மார்க்க உலகம் ஒரு முதுபெரும் சன்மார்க்கியையும், ஆன்மீகம் வளர தம் வாழ்நாளை செலவழித்த ஒரு அருமையான அன்பரையும் இழந்துள்ளது. இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு.
Friday, October 3, 2014 at 11:53 am by Daeiou Daeiou.
venkatachalapathi baskar
A devotee of our Vallalperuman and follower of Mahatma Gandhi,
Dr.N. Mahalingam did many a good works in the field of education, religion and spirituality besides industry and Philantharaphy. He was instrumental in the publication of many a spiritual books and also subsidised many books published by various publications. He was also the editor of the famous tamil magazine, OM SAKTHI. May his soul rest in the lotus feet of our peruman.
Friday, October 3, 2014 at 16:31 pm by venkatachalapathi baskar
perumal varadarajan
ஆம் ஐயா,

பொள்ளாச்சி மஹாலிங்கம் ஐயா அவர்களின் மறைவு
வள்ளலார் விசுவாசிகளான நமக்கு பெரிய இழப்பு.

வ.கலியபெருமாள்,
பாண்டிச்சேரி
4/10/2014
Saturday, October 4, 2014 at 01:00 am by perumal varadarajan
Chinnasamy  Rajendiran
Ayya's sudden demise on Gandhiji Jayanti in a function related to Vallalar, came as a great shock to us.

It is an irreparable loss to the cause of Tamil and Tamilians; cause of Vallalar & Valluvar ; he was a True Gandhian. Lived a life of simplicity. His humility is unmatched.

I can never forget the time I spent with Ayya... It is so nice and greatness of Him to call me twice for Book release and couple of of time for Dinner...

May His soul rest in peace at the Lotus feet of Vallalar and guide us in all our endeavours.
On Gandhiji's Jayanti day - in a Vallalar function, that is how Thiruvarul has demonstrated It's Presence

C. Rajendiran
Commissioner of Customs
Visakhaptnam
Saturday, October 4, 2014 at 01:04 am by Chinnasamy Rajendiran
Anandha Barathi
அருட்செல்வர் அவர்களின் உடல் பொள்ளாச்சியில் அவருக்கு செந்தமான பாலிடெக்னிக் கல்லுரியின் பின் புறத்தில் "சன்மார்க்க முறைப்படி" நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெருமானார் திருவடிகளுக்கே அவர் இன்னுயிர் அடைக்கலம்.
Saturday, October 4, 2014 at 08:21 am by Anandha Barathi
Sampath Venkatesan
நமது அருட்செல்வர் பணி சன்மார்கதிற்கு அளவு சொல்லமுடியாது அருட்பா 5 ,6,உரைநடை பகுதி புத்தகங்கள் மலிவு விலையில் வெளியிட்டது 2. சித்திவளாக பணி.3 மாதந்தோறும் பூசத்தன்று அருட்பா விளக்க கூட்டம் . 4 . வள்ளலார் குருகுல கல்வி குழுமம் . இதன் மூலம் ஏழைகள் கல்விக்கண்ணை திறந்து வளர்ச்சிஅடைய முக்கிய காரணம் இவரே.5 இவரது நிறுவனங்களில் சன்மார்க்கத்தில் உள்ளவர்களில் கேட்டவுடன் பணியமர்த்தியுள்ளார் 6.தேனாம்பேட்டை சன்மார்க்க சங்கத்திற்கு வருகைபுரிந்து சொற்பொழிவு செய்துள்ளார்கள். அவரது இழப்பு சன்மார்கதிற்கு பெரிய இழப்பாகும் .அவர் இன்னுயிர் நம்முடன் இருந்து பிரிந்தது நம்மை ஆளாதுயிரில் ஆழ்த்திவிட்டது .
Saturday, October 4, 2014 at 16:42 pm by Sampath Venkatesan
karuneegar umapathy
we lost...no word to say...Sanmarga ulagam befitted lot....
Wednesday, October 8, 2014 at 00:01 am by karuneegar umapathy
செல்வமாமணி M
வாழ்க்கையில் மிக சாதாரண தொழிலாளியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி தனது கடினமான உழைப்பின் மூலம் புகழை அடைந்தவர்,
பலஅரிய தமிழ் திருமறை நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற அளப்பறிய உதவிகள் புரிந்த அன்னார்.
உத்தமர் சிதம்பர இரமலிங்க அடிகள் திருஅருட் பிராகாச வள்ளலார் மற்றும் உத்தமர் காந்தியடிகளின் உண்மை காருண்ய நேசர்
பல இளம் தொழிலதிபர்களின் கனவு நாயகர்காந்தியத்தையும், வள்ளலாரின் போதனைகளையும் தமது இரு கண்களாக கருதிய பொள்ளாச்சி மகாலிங்கம், காந்தியடிகளின் நினைவு நாளில், வள்ளலார் குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார் என்பதிலிருந்தே இரு கொள்கைகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்றை அறியலாம்.

பெரும் கொடையாளரும், மனிதநேயருமான பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மறைவு கல்வி, தொழில்துறை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும்,

காந்தியவாதிகள் மற்றும் வள்ளலார் கொள்கைகளை பின்பற்றுவோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வோம்
அருட்செல்வராகவும், பொருட்செல்வராகவும் விளங்கி, நம் அருந்தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் அனைத்து வகையிலும் தொண்டாற்றிய தலைசிறந்த கல்வியாளர், பண்பாளர், மிகச் சிறந்த ஆன்மிகவாதி. தேசிய எண்ணம் கொண்ட அவரது மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும்

தமிழ் ஆன்மிக கொடையாளர் செல்வச்செழிப்போடு வாழ்ந்த பலரை தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால் தான் பெற்ற செல்வத்தை இந்த தேசத்தின் வளர்ச்சிக்கும், ஆன்மிக திருப்பணிகளுக்கும், நல்ல கருத்துகள் மக்களிடையே பரப்ப வேண்டும் என்றும் அர்ப்பணித்து அருட்செல்வத்தோடு வாழ்ந்தார் பொள்ளாச்சி மகாலிங்கம். கொடுத்தார் கொண்டார்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Thursday, October 9, 2014 at 18:53 pm by செல்வமாமணி M
RrANGANATHAN.R R
ஐயா அவர்கள்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு கலந்துவிட்டார்.சன்மார்க்க உலகிற்கு ஈடு இணையற்ற பணிகளை ஆற்றியுள்ள ஐயா சன்மார்க்கர் இதயங்களில் என்றும் ஜோதி நடம் புரிவாரென்பதிலய்யமில்லை.சன்மார்க தடம் விலகா தயவாளர்.அறம் போற்றிய அரசியலாளர்.தொன்மை கொண்ட தொழிலதிபர்.பன்முகத்தன்மை கொண்டு பணிபலவாற்றிடினும் அற நெறி தவறா ஆன்மநேய பண்பாளர்.ஜோதியுட்ஜோதியாய் பிரகாசிக்கின்றார்.
Friday, October 10, 2014 at 02:38 am by RrANGANATHAN.R R
Arul Arivu
He has kicked his bucket to kick off his Great Life ahead! Let us pray for his soul's everlasting progress, peace and bliss!
May The Limitless Divine Peace and Bliss be upon Arut Selvar, Pollachi, Thiru.N.Mahalingam Ayya Avargal! ArutPerumJyothi...
Saturday, October 11, 2014 at 14:17 pm by Arul Arivu