Damodaran Raman
ஆன்மா - தூல உடல் - ஞான சபை பற்றிய விளக்கம்
இறைவன் ஆனமாவிற்கு முதலில் புரியட்ட காயம் என்னும் காரண சரீரத்தை அருளினார்.இப்புரியட்ட காயம் முதல் படைப்பு முதல் இறுதி அழிப்பு வரை அழியாது. ஆன்மாவின் சூக்கும சரீரம் மற்றும் தூல சரீரம் இவை  பிறவிகள் தோறும் படைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வரும்.இறைவன் சூக்கும சரீரத்தைப் படைத்துப் புரியட்ட காயத்தில் சேர்ப்பார்.சூக்கும சரீரம் பெற்ற ஆன்மா, மேகம்,மழைநீர்,பயிர், உணவு வழியாக தகப்பனின் விந்தாகிறது. தாயின் கரு முட்டையை அடைந்த விந்தால் கரு வளர்ச்சி பெற்றுக் குழந்தையாக வெளி வருகிறது.சூக்கும உடம்பின் வளர்ச்சியே தூல உடம்பின் வளர்ச்சியாகும்.சூக்கும உடம்பின் நகல்தான் தூல உடம்பு.தூல உடம்பு இறப்பிற்குப் பின் ஆன்மா சூக்கும சரீரத்தில் வாழும்.சூக்கும சரீரத்திற்கும் மரணம் உண்டு. இதன் பின்னர் ஆன்மாவிற்கு ஏற்கனவே உள்ள புரியட்ட காயத்தில் முன் கூறியபடியே உரிய காலத்தில் தூல உடம்பு கிடைக்கும்.                                                    அடுத்து வள்ளலாரின் தூல உடல் பற்றியது. போகாப் புனலால் அவரின் உடம்பு சுத்த தேகமானது.சுத்த தேகமே பின்னர்ப் பிரணவ தேகமாகி முடிவில் ஞான தேகமானது.பனிக்கட்டி கண்ணுக்குப் புலப்படுவதோடு கைக்கும் பிடி படும்.பனிக்கட்டி நீரானால் அரு உரு ஆவதுடன்  கையால் பிடிக்கப் படாது. நீர் ஆவியானால் காற்றில் மறைந்து கண்ணுக்கும் புலப்படாது.கைக்கும் அகப்படாது.பனிக்கட்டி,நீரானால் பனிக்கட்டி இருக்குமா? இருக்காது!இவ்வாறே சுத்த தேகமே பிரணவ தேகமானால் சுத்த தேகம் இருக்காது. தூல உடம்புதான் சுத்த தேகமாக மாற்றப் பட்டதால் தூல உடம்பு எப்படி இருக்கும்?இருக்காது.வள்ளலார் இன்றும் ஞான தேகத்தோடுதான் வாழ்கிறார். நீராவி,நீராகவும்-நீர் பனிக்கட்டியாகவும் உரு மாற்றம் அடைவது யாவரும் அறிந்த ஒன்று.இவ்வாறே ஞான தேகத்தில் வாழும் வள்ளலார் சுத்த சிவ சன்மார்க்கத்தை விருத்தி செய்ய உரிய காலத்தில் யாவரும் கண் கூடாகக் காணும்படி வெளிப் படுவார்.இது சத்தியம்.                                   ஞான சபை கட்டுவதற்குக் காரணமானவர்கள் எல்லாரும் புலால் உண்ணாதவர்களாக இருக்க மாட்டார்கள்.புலால் மறுத்தவர்கள் மிகவும் உதவி இருப்பார்கள்.அவ்வளவே! வணக்கம்.