Thiru Arutprakasa Vallalar- Tamil
16. சித்திவளாக விளம்பரம் 8 - 9 - 1873
16. சித்திவளாக விளம்பரம் 8 - 9 - 1873



திருச்சிற்றம்பலம்

உலக அறிவிப்புப் பத்திரிகை!

ஞானசித்திபுர மென்றும் உத்தரஞானசிதம்பர மென்றும் பிரமாணிக்கப்படுகின்ற வடலூர் சத்தியஞானசபைக்கு முக்கிய சம்பந்தமுடையதாகி அடுத்த கருங்குழி யெல்லை மேட்டுக்குப்பத்தில் வழிபடப்படுகின்ற சித்திவளாகத்தில் வந்திருக்கின்றவர்களும், வருகின்றவர்களும், வருபவர்களுமாகிய ஜனங்களுக்கு அறிவிப்பது.

மேற்குறித்த விடத்தில் இந்த மாதத்திற் கடுத்த புரட்டாசி மாதம் ஐந்தாம் தேதியில் அற்புத விளக்கம் நேரிடுவதாக ஓர் வதந்தி வழங்கப்படுகின்றது. அது கேள்விப்பட்டு நம்புதலோடு நீர்கள் நீர்களும் பொருள் வகையாலும் தேக வகையாலும் உழைப் பெடுத்துக் கொண்டு பின்பு நிட்டூரப்பட்டுக் கொள்ளுதல் வேண்டாம். அந்தக் கேள்வி யுண்மையல்ல. இவ்விடத்தில் அற்புதம் விளங்குவது மெய்யோ, பொய்யோ, இந்தக்காலமோ எந்தக்காலமோ, ஆகலில், இந்த அறிவிப்பினால் ஜாக்கிரதையோடு உங்களுங்களுக்கு அடுத்த காரியங்களெவையோ அவைகளைச் செய்வீர்களாக.

சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை

ஸ்ரீமுக வருடம்  ஆவணி மாதம் 25ஆம் நாள்

மேட்டுக்குப்ப மென்னும் சித்திவளாகம்
* * *