அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
தாயின் கருவிலே திரவதிடநிலை முட்டைப்பருவம்
தரையில் தவழ்ந்து கருங்கண்டம்வரை புழுப்பருவம்
கருங்கண்டம் கடந்து இதுவரை கூட்டுப்புழுப்பருவம்
கடுங்கூடும் கடந்து வருமோ வண்ணப்பூச்சிவடிவம்?
இங்குநான் கருங்கண்டம் என்று குறிப்பிட்டது
மாந்தர்தம்மேனி கருநிறம் கொண்ட ஆப்பிரிக்கா
அங்குஎரித்திரா நாட்டில் 1988லிருந்து 2004வரை
ஓங்குUNOல் இயற்பியல் ஆசான் பணிசெய்தனன்.
'முட்டைப்பருவம்' நான்முயன்றறிய முடியாத முதற்பருவம்
'புழுப்பருவம்' மடநான் மண்ணும்ஊன்புண்ணும் தின்றகாலம்
'கூட்டுப்புழுப்பருவம்' 'நான்யார்' சத்விசாரம்செய் தவக்காலம்
'வண்ணப்பூச்சிவடிவம்' தெய்வத் தேனுண்டு வான்செய்காலம்!
((குறிப்பு: இங்கு, “ஓங்குUNOல் இயற்பியல் ஆசான் பணிசெய்தேன்” - என்பது, உலகம் ஓங்க, UNO-வின் (United Nations Organization) திட்ட உதவியால் இயங்கிய பள்ளிகளில் இயற்பியல் ஆசிரியராகப் பணிசெய்தேன் என்பதாகும்.))
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்