Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள எண்.32....நான்காம் அதிகாரம்..கடவுள்..சுவாமி சரவணானந்தா.
ஒன்றா மிறைவன் ஒழிவின்றித் தன்னருளால்
நின்றான் உலகில் நிறைந்து.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

குறள் விளக்கம்.

     உலகம் மிகப் பெரிது. அதிலுள்ள பொருள்கள் அனந்தம். அப்பொருள்களிற் கலந்த அணுக்கள் அனந்தானந்தம்.  ஆகாய பூத அணுக்கள் அகண்ட வெளி முற்றும் நிரம்பி உள்ளன. ஒவ்வொரு அனுவுக்கும் உள்ளாக பூரணமாகக் கடவுள் சக்தி பொருந்தியுள்ளது.

     இங்கு, அணு என்றது, சாதாரண பூத அணுவன்று. பூத நிலை எல்லாம் கடந்த ஆன்ம அணுவாகும். இதுவே கடவுள் அணு, சச்சிதானந்தமானது.

     இவ்வுண்மைக் கடவுளை அகத்தே கண்டு நிற்கும்போது, இந்த ஒன்றே, அருட் சித்சக்தியால் யாவுளும் நிறைந்து, தன் மயம் காட்டியுள்ளதாக அறியப்படும்.
IMG_20160821_122749.jpg

IMG_20160821_122749.jpg