Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
கந்தழி ஜோதியில் அகம் ஒடுங்குதல்...சுவாமி சரவணானந்தா.
தொன்மையான நம் தமிழ் அறிஞர்கள், கடவுள் உண்மை அறியும் நெற்றிக் கண்ணைப் பெற்றிருந்தனர். அதற்கு அடையாளமாக புறத்தே நெற்றியின் நடுவே சற்றே, புடைத்து, வீங்கி, பருத்து இருந்ததாம். அக்கண்ணால் புற உலகை நோக்கி அது ஞாயிற்றுச் சோதியால் விளங்குவதாகவும், ஒவ்வொரு விண்மீனாகிய சோதியும் பிரபஞ்சப் பேருலகை ஆக்கியுள்ள்தென்றும் கண்டார்கள். பின்னர் அக்கண்ணால் அக நோக்கி அருட்பெருங்கடவுளை ஆன்மாவிற் கண்டு, இது உலக ஜோதிகளை எல்லாம் ஆக்கி ஆள்கின்றதால் அருட்பெருஞ்ஜோதி சத்தியாக அணு வடிவிலிருந்து அனுபவப்பட உள்ளதென்றும் அறிந்து கொண்டார்கள். அந்தச் சோதியைத்தான் அடிமுடி காணொணாக் கந்தழியாகக் கூறியுள்ளனர். கந்தழி என்றால் கட்டுக்கடங்காத அகண்டமான பேரொளி என்பது தான் அதன் பொருள். கந்தழி சோதியை அகத்திற்கண்டு, அதுதானாம் அனுபவத்தில் நின்ற அவர்கள், உடலை மதியாது விட்டதனால் அத்தேக நீக்கத்தால் அவ்வனுபவம் இழந்து, உணர்வும் உயிரும் ஒடுங்கிட மண்ணில் மறைந்து போயினர். அவர்களின் பிற்சந்ததிகள் தம் நாடு கடல் கொள்ள, பிற பல நாடுகளிற் சென்று பல்வேறு மாற்ற தோற்றங்கள் அடைந்து நெற்றிக் கண்ணே இருந்த இடம் தெரியாமல் மறைந்திடக் கடவுள் அறிவும் இழந்தனர். இன்று நம் தமிழினம் ஒன்றே அப்பழைய ஞானத்தை ஓரளவு பொதிந்து வைத்துக் கொண்டுள்ளதாம்.
New Doc 2018-08-10_1.jpg

New Doc 2018-08-10_1.jpg