Vallalar Universal Mission Trust   ramnad......
நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச் செல்லாது வைக்கின்ற சித்தனெவன்
நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச்
செல்லாது வைக்கின்ற சித்தனெவன் - பொல்லாத



வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்
. ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்
திண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத்
. தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை
தேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் - ஊனமின்றிப்
. பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்
சேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக
. அல்விரவுங் காலை அகிலமெலாம் தன்பதத்தோர்
சில்விரலில் சேர்க்கின்ற சித்தனெவன் - பல்வகையாய்க்
. கைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள்
செய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்கருவை
. மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்
செய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்விக்கும்
. வித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும்
சித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் - சத்துடனே