Karunai Sabai-Salai Trust.
”அவசரம். சீக்கிரம் வா.”-- ஏபிஜெ. அருள்
நான் ஒரு வழக்கறிஞர்.
காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து பேப்ரின் செய்திகளை படித்தேன்.
நாட்டு நடப்புகளை அறிந்ததால் களைப்பு ஏற்பட்டது.
செல் ரிங் அடித்தது. கேஸ் விசயமாக பார்டி பேசுவார்கள் என எண்ணி எடுக்காமல் உட்கார்ந்து விட்டேன். மீண்டும் தொடர்ந்து அடிக்க, சென்று எடுத்தேன். எனது தோழன்.
”என்னடா என்ன விசயம்?” என கேட்டேன்.
“ அவசரம் சீக்கிரம் வா” என்றான்.
விசயத்தை சொல்லு என்றேன்.
வேதாச்சலம் வந்திருக்காரு. அதான் எனக்கு வீடு விற்றாரே. அந்த வேதாச்சலம் தான் என்றான்.
“நல்ல மனிதர் தானே. என்ன பிரச்சனை” என்றேன்.
நீ நேரே வா. அவர் சொல்லறத கேட்டா கோபம் கோபமாக வருகிறது.
சரிப்பா நீயே கோபப்படலாமா? வள்ளலார் மார்க்கத்தை சேர்ந்தவன். பொறுமையாக இரு என்றேன் அவனிடம்.
அவன் பேசறத நீ கேட்டுப் பாரு அப்பறம் புரியும் என்றான் என் நண்பன்.
சரி வரேன் என்று கூறி கிளம்பிவிட்டேன்.
(வண்டி ஓட்டும் பொழுது என்னவாக இருக்கும்? என்ற சிந்தனையே. வேதாச்சலம் நல்ல மனிதர் தானே. பிரச்சனை பண்ணக்கூடிய ஆளில்லையே. தன் வீட்டை ஒரு நல்ல மனிதருக்குதான் கொடுப்பேன் என்றுக்கூறினார். அதணால் தான் எனது நண்பரை அறிமுகப்படுத்தி இந்த வீட்டை அவனுக்கு விற்கச் செய்தேன். என்ன பிரச்சனை????? ஒன்றுமே புரிய மாட்டேன்கிறதே.)
இதோ வீடு வந்து விட்டது.
வாங்க வேதாச்சலம் அய்யா, நலமா? ஏன் வீட்டுக்கு வெளியேவே உட்கார்ந்து விட்டீர்கள். உள்ளே வாங்க என்றேன்.
இல்லப்பா உன் நண்பனிடம் நியாயம் இல்லை என்றார்.
சரி அமைதியா இருங்க விசாரிக்கிறேன் என்று உள்ளே சென்றேன்.
என் நண்பனிடம் விசயம் என்ன? என்றேன்.
””சொல்றேன் கேளு. உனக்கும் தலையே சுத்தும்.என்னிடம் வந்து, இது என் வீடு நீங்க இருக்கீறீங்கன்னாரு? ஏதோ விளையாடுறாரு என நினைச்சா... சீரியசா தான் சொல்றேன் என்கிறாரு.
என்னய்யா விளையாடுறீங்களா? இந்த பாருங்க நீங்க 2013 ல் எழுதி கொடுத்த பத்திரம் என்றேன்.
அது இருக்கட்டும். இந்த நான் வைத்திருக்கும் பத்திரத்தைப் பாரு என்றார். வாங்கி பார்த்தேன். அது 2000 ல் அவர் இந்த வீட்டை கிரையம் வாங்கிய பத்திரம். அய்யா இதுக்கு பின்பு உங்களிடம் நான் இந்த வீட்டை கிரையம் வாங்கி விட்டேன். கடைசியாக இந்நாள் வரை எனது பத்திரமே செல்லும் என்றேன். அதற்கு திரும்பவும் அவர்: தம்பி எனது பத்திரத்தை பாருன்னு 2000 த்தில் எழுதியுள்ள பத்திரத்தையே காட்டி, யார் பெயரில் வீடு உள்ளது.? என் பெயரில் தானே!!! என்கிறான்.
மீண்டும் நான்:: “ அய்யா, அதற்கு பின்பு நான் கிரையம் செய்து உள்ளனே....என்றேன். காதிலேயே வாங்காமல் அது இருக்கட்டும் மீண்டும்; “இந்த பத்திரத்தை பாரு” என்கிறார்??? அதனால் தான் உன்னை கூப்பிட்டேன். நீயே கேளு.””
வெளியே வந்து என்ன அய்யா, ஏன் இப்படி? என்றேன்.
என்ன இப்படி என்றார்?
என்ன அய்யா என்னிடமேவா?? என்று சற்று சத்தமாக கேட்டேன்.
தம்பீ, உன் நண்பன் செய்தால் சரி. நான் செய்தால் தவறா? என்றார்.
என்ன அய்யா விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.
“உன் நண்பரின் கட்டுரையை நெட்டில் படித்தேன். அதில் வள்ளலாரை அவரால் முற்றிலும் கைவிடப்பட்ட அவரின் முந்தைய சமயப் பற்றில் வெளிப்படுத்தியிருந்தார். வள்ளலார் முதலில் ஓர் சமயத்தில் பற்று வைத்திருந்தார். அதன் திருஅடையாளமாக இருக்கும் திரு நீறை பூசியிருந்தார்கள். எல்லாருக்கும் கொடுத்தார்கள்.பலருக்கு கொடுத்து ஆசீர்வதித்துள்ளார்.
அதன் பின்பு, தான் வைத்திருந்த சமயப்பற்று, சாத்திர ஆச்சாரங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, ஓர் புதிய மார்க்கத்தை கண்டார்கள். ஆனால் உன் நண்பரோ வள்ளலாரை அவர்தம் முந்தையப் பற்றுலேயே வெளிப்படுத்தி வருகிறார். யாரெனும் கேட்டால் இதுவும் வள்ளலார் தானே சொல்லியுள்ளார் என பதில் சொல்கிறார்.வெளிப்படுத்தும் செயலை தவறு எனச் சுட்டிக் காட்டுவதற்கே இப்படி நடித்தேன். சொந்த விசயத்துக்கு ஒரு நியாயம். வள்ளலாருக்கு ஒரு நியாயமா? எனது பத்திரத்திற்கு பின்பு ஏற்படுத்திய அவர் பத்திரம் அவருக்கு வேணும்.ஆனால் வள்ளலார் பின்பு ஏற்படுத்திய புதிய நெறி வேண்டாமோ??
வள்ளலாரை அவரின் முடிபான நெறியில் காட்டாமல் பழைய கைவிடப்பட்ட நெறியில் வெளிப்படுத்துவது என்ன நியாயம் என்கிறேன்?
“”நீங்களே சொல்லுங்க.””
திகைத்து நின்றேன்.
இதை விட உனக்கு விளக்க முடியாதுப்பா என நண்பனிடம் கூறினேன். நான் வாரேனு கிளம்பி விட்டேன்.
சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தேன்.
வேதாச்சல அய்யாவின் கைகளை என் நண்பன் பற்றிக் கொண்டிருந்தான்.
உண்மை வெளிப்பட்டே தீரும். உண்மையை உணர்ந்தே ஆக வேண்டும்.

 

come quickly.png

come quickly.png

11 Comments
narayani julu
மேடம் அருமை.
உங்களுக்கு போன் பண்ணினேன். எடுக்கவே இல்லை.
நான் தெளிவாகி விட்டேன்.
அதாவது;
பெருமான் சைவ சமய குடும்பத்தில் பிறந்தார்கள்.அவரின் சகோதரர் வழிக்காட்டுதலில் அச்சமயத்தில் உண்மையுடன் ஈடுபாடு கொள்கிறார் நம் பெருமான்.
சைவ சமயக் கடவுள்கள் மீது பல நூறு ஸ்தோத்திரப் பாடல்கள் பாடியுள்ளார்கள்.
விபூதி அணிந்தார்கள். வந்த பக்தர்களுக்கும் வழங்கினார்கள்.
உருவ வழிப்பாடு வேண்டும் எனச் சிறப்பாக சொல்கிறார் பெருமான்.
முக்கிய தலங்களுக்கு (கோயில்களுக்கு) சென்று வந்தார்கள்.
பலரின் நோய்களை குணப்படுத்தினார்கள் (விபூதி கொடுத்தும்).
அதன் பின்பு...
அதன் பின்பு ...
அதன் பின்பு ...
அதன் பின்பு....
தான் வைத்திருந்த சமயப்பற்றை தன்னிடமிருந்து ஒழித்து விட்டு நல்ல விசாரணையில் ஒரு புதிய வழியை (சுத்த சன்மார்க்கத்தை) கண்டு வெளிப்படுத்தினார்கள்.
தன் மார்க்கத்திற்கு சமய,மத,மார்க்கங்களையும் அதன் ஆச்சாரங்களையும் எக்காலத்தும் முக்கியத் தடையாக அறிவிக்கிறார்கள்.
தன் மார்க்கத்தில் வெளிப்படுத்திய கடவுள்,சமய,மத,மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள்கள் இல்லை என்கிறார் பெருமான்.
அவர் பாடல்களில் பயன்படுத்திய சிவம், நடராஜர், அருட்பெருஞ்ஜோதி, திருசிற்றம்பலம் போன்றவை உண்மையை விளக்க உதவும் பொதுவான திருக்குறிப்பு வார்த்தைகள்.
தன்னைப் போல் எல்லோரும் உண்மைக் கடவுளை காண்பதற்கு தான் சுத்த சன்மார்க்கத்தை வள்ளலார் உலகிற்கு ( நமக்கு) வெளிப்படுத்தினார்களே அன்றி தன்னை கடவுளாக வெளிப்படுத்தவே இல்லை. (கூடாது என்று தான் சொல்லியுள்ளார்கள்.)
சத்திய ஞான சபை திறக்கும் அந்த நாளில் மட்டுமே ஒரே ஒரு முறை மட்டுமே வள்ளலார் முன்னின்று விளக்கினார்கள். இங்கு பெருமான் விபூதி
யாருக்கும் கொடுக்கவில்லை. பெருமானும் பூசியிருக்கவில்லை.அதன் பின்பு சத்திய ஞான சபையை வள்ளலார் அவர்கள் திறக்கவில்லை.(தயவு செய்து இதுவே சத்தியம்). வள்ளலார் ஒளித்தேகத்தில் வெளிப்படுத்தி தன்னை மறைத்துக் கொண்டப்பிறகே நாம் தான் சபையை திறந்தோம். இதுவே உண்மை.
சமயங்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ள தெய்வங்கள் அனைத்தும் தத்துவங்களே என்கிறார் வள்ளலார்.
இதுவே உண்மை.
இதுவே உண்மை.
இதுவே உண்மை.
இதுவே உண்மை.
(என்ன யோசிக்கீறீங்களா... உங்கள் பேஸ் புக்கில் வந்ததை தான் பேஸ்ட் இங்கே) நன்றி அம்மா.
Saturday, March 12, 2016 at 07:29 am by narayani julu
Sivaram Narayan
அன்புடையீர், பத்திரப் பதிவு உவமை பரம் பொருள் குறித்த இயற்கையுண்மைக்குப் பொருத்தமாகாது. காலத்தை வீணாக்கிக் கற்பனைக் கதைகளைக் கற்பித்து உண்மையை அனுபவிக்க அறியாது, மதங்களைச் சாடிய வள்ளலார் பெயரையே சொல்லி மீண்டும் உலகில் இன்னொரு புதிய மதத்தை உருவாக்க நினைத்து முனைவது கிளியைப் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதை ஆகிவிடும். அதனால் வள்ளலாரின் அருள் கைகூடாமல் உள்ளும் புறமும் தோல்வி ஏற்படும். பின்பு வள்ளலார் என்னைக் காப்பாற்றவில்லையே என்று தவறாக நினைத்துக் குதர்ப்பம் பேசுவோர் பட்டியலில் இடம் பெறவும் நேரிடும்.

வள்ளலார் வெளிப்படுத்திய 'சுத்த சன்மார்க்கம்' வள்ளலார் சமயப் பற்றை விடுத்த பின்பு வெளிப்படுத்தினார் என்று பேசுவது வள்ளலார் வழங்கிய ஆன்மீக இயற்கை உண்மையை அறியாது நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பேசுவதாம். அருளாளர்களின் அன்புக்கு உரிமையாகாது உலகியல் மாயைக்கு உடமையாக வேண்டாம்.

அருளாளர்கள் என்பர் வேறு. சமய-மத வாதிகள் வேறு. சமயமத வாதிகளைச் சாடிய வள்ளலார் அருளாளர்களை அணுகி வாழ வழியுறுத்துவதைச் சிந்தை செய்யவும். எண்ணற்ற அருளாளர்கள் உலெங்கும் வள்ளலார் வழியில் அல்லும் பகலும் அயராது அருட்பணி ஆற்றி வருகின்றனர். காலம் வரும்போம் கடவுள் அவர்களைக் காணச்செய்வார். நன்றி. வாழ்த்துக்கள்!

பங்கமோர் அணுவும் …துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச் சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே...

ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன்…

மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது…

எம்மத நிலையும் நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்துவே றெண்ணிய துண்டோ...

எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம் கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்…

பெருகிய பேரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என்கணவர் திருப்பேர் புகல்என் கின்றாய் அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாராயணன் என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன் பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன் துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன் சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.

சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச் சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய் பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத் திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி...

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன்…

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் தானே எனக்குத் தனித்து.
Sunday, March 13, 2016 at 04:16 am by Sivaram Narayan
ஸ்வாமி  இராஜேந்திரன்
சரியான கருத்து. இனி ஒரு புதிய மதத்தை உருவாக்குவதை காட்டினும் இருக்கும் அனைத்து மதங்களிலும் ஒரு பரம்பொருளை காண்பதே அறிஉடைமை ஆகும்.
Monday, March 14, 2016 at 08:13 am by ஸ்வாமி இராஜேந்திரன்
narayani julu
பெரியவர்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
அய்யா, ஏபிஜெ அவர்களின் கட்டுரை நம்பி படிக்கலாம். எந்த புக் அதன் பக்கம் என தெளிவாக குறிப்பிடுவார்கள். நான் வள்ளலாரை அறிந்துக்கொள்ளவே இந்த வெப் சைட்டை பார்க்கிறேன். கடந்த ஒரு வருடமாகத்தான் வள்ளலாரை தெரிந்து வருகிறேன். வள்ளலாரின் இந்த வெப் சைட்ல் வள்ளலாரின் நெறி குறித்து வருமே தவிர மற்ற செய்திக்கு, சமயத்துக்கு இடம் ஏது.?
எல்லோருமே ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்.
அவரவருக்கு ஏற்றால் போல் வள்ளலாரை வெளிப்படுத்த முயற்சி செய்கிறீர்கள். தயவு செய்து என்னால் சாகா கல்வியை கற்க முடியுமோ இல்லையோ என் பையனால் முடிய வேண்டும். அதற்கு வள்ளலாரின் சத்திய வாக்கியங்கள் மாறாமலிருக்க வேண்டும். வள்ளலாரின் நெறியைஅட்ஜஸ்ட் பண்ணறதுக்கு நாம் யாரு? பாருங்கள் அட்ஜஸட் பண்ணி கமெண்ட் போட்டீர்கள்: அதற்கு ஒரு அய்யாவின் பதில்: ”சரியான கருத்து. இனி ஒரு புதிய மதத்தை உருவாக்குவதை காட்டினும் இருக்கும் அனைத்து மதங்களிலும் ஒரு பரம்பொருளை காண்பதே அறிஉடைமை ஆகும்.”இப்படி தான் சுத்த சன்மார்க்கம் வெளிப்படும்.
கட்டுரை எழுதுவர்கள் ஆதாரத்துடன் எழுதுங்கள். என்னை மன்னியுங்கள். வள்ளலாரின் நெறி உள்ளது உள்ளபடி வெளிப்பட அனுமதியுங்கள்.
நன்றி அனைவருக்கும்.
Monday, March 14, 2016 at 15:20 pm by narayani julu
Sivaram Narayan
அம்மா அட்ஜஸட் பண்ணிக் கமெண்ட் போடவில்லை. அருளால் அனுபவம் பெற்றுச் சத்திய வாசகத்தை அருளியுள்ளோம். இதை ஒரு 'COMMENT' - என்று எண்ணாதீர். உண்மை என்று கடைபிடிக்கவும். நீங்கள் உங்களின் கண்மூடித்தனமான உலகியல் வெறும்போக்கில் அருள் கைகூடாமல் இப்போது தோற்பதைக் காட்டிலும், இனி வரும்காலத்தில் மீளமுடியாது தோற்கப் போகின்றீர்கள். அத் தோல்வியைத் தடுக்கவே அருளால் இவ்விடம் ஒரு நல்வழியைக் காட்டுகின்றோம். உண்மையை அனுபவிக்க அறியாது பல அருளாளர்களின் சாபத்துக்கும் கோபத்துக்கும் ஆளாகிக் கொண்டிருக்கின்றீர்கள். அதற்கு தாங்கள் வள்ளலாரை அறிந்து கொள்ளாது மற்ற சமயமதவாதிகள் போல மாயக் கலப்பில் மூழ்கிக் கிடப்பதுதான் முக்கியக் காரணம்.

உங்களால் சாகக்கல்வியைக் கற்க முடியாது என்னும் சந்தேகம் இப்போது உங்களுக்கு வந்துவிட்டது. ஏனெனில் இன்னும் உங்களுக்கு உண்மையருள் கைகூடவில்லை. உங்கள் பிள்ளைகளை மட்டுமல்ல உலக உயிர்த்திரள்கள் அத்தனைக்கும் உற்ற துணையாக இருந்துகொண்டு வள்ளலார் தானே சன்மார்க்கத்தை நடத்தி வருகின்றார். ஆகையால் கலக்கம் வேண்டாம் எல்லா உலக உயிர்களையும் அவர் பார்த்துக் கொள்வார்.

முதலில் மதத்தை உருவாக்க நினைக்கும் உங்களின் மாய வகுப்புகளை நிறுத்துங்கள். கண்ட இடங்களில் பிறர் காயப்படும்படி ஏசுவதை நிறுத்துங்கள். தங்களின் அறியாமைச் செயல்களால் வள்ளலார் துடிக்கின்றார் என்பதை இன்னும் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆகையால், முதலில் உயிர் இரக்கத்தை வருவிக்க முயற்சி செய்யுங்கள். சாகாக்கல்விக்குப் 'FOUNDATION' - பரோபகாரம். அப்ரோபகாரம் தன் உழைப்பில் வந்த லாபத்தில் செயதாலே போதும். பிறர் உதவியை எதிர்பார்த்து பரோபகாரம் செய்தால், உதவி செய்தவர் நம்பி அவர் மகிழும் வகையில், அன்னாருக்கு உண்மைக் கணக்கைக் காட்டத் தவறிவிடாதீரகள். அதனால் அன்னார் அயலாரிடம் தங்களைப் பற்றித் தவறாகப் பேசாதது மட்டுமல்ல, தொடர்ந்து தங்களின் தொண்டிற்கு நல்ல துணையாகவும் இருப்பார்.

அத்தோடு, சத்துவிசாரமும் வேண்டும். "நம்தேகம், நாம் வாழும் இவ்வுலகம், இவற்றைக் காக்கும் இயற்கை - இவைகளின் இயக்கம் பற்றி முதலில் அணுவளவாவது உங்களுக்குத் தெரியுமா?" - என்று உங்களை நீங்களே கேளுங்கள். தெரிந்துகொள்ள அதற்குச் சத்துவிசார வகுப்புகள் நடத்துங்கள். இப்படி நன்முயற்சியில் இருந்தால் திருவருள் கைகூடி சாகாக்கல்வி இனிதே அனுபவமாகும்.

மதம் நமக்கு வேண்டாம். உலகமதங்கள் மோதிக்கொள்ளும் கலிகாலத்தில் காயங்களுக்கு மருந்து கொடுத்து ஆற்றவதுதான் சுத்தசன்மார்க்கம். புதிய மார்க்கம் என்னும் பெயரில், புதிய காயத்தை உருவாக்குவதற்கு அல்ல. இது எனது வார்த்தை அல்ல. சத்திய வாசகம்! இதோ ஆதாரம்....
"எம்மத நிலையும் நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்துவே றெண்ணிய துண்டோ..." - அருட்பா ஆறாம் திருமுறை

"சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச் சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய் பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத் திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி... "- அருட்பா ஆறாம் திருமுறை

"சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை, நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம் நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி, ஏர்உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை தன்னை எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை, ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின் உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே." - அருட்பா ஆறாம் திருமுறை

"ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன்…" - அருட்பா ஆறாம் திருமுறை

"மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது…" - அருட்பா ஆறாம் திருமுறை

"உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் தானே எனக்குத் தனித்து." - அருட்பா ஆறாம் திருமுறை

ஆன்ம உரிமையால், தடித்த திரை விலக்க, அழுத்தி உரைத்தோம். நல்ல மனமாற்றம் நன்மை பயக்கும். மருள் மறுப்பு இருப்பின் ஏமாற்றமே தரும். நன்றி! நல்வாழ்த்துக்கள்!
Tuesday, March 15, 2016 at 10:58 am by Sivaram Narayan
ram govi
Please continue your SSSS classes, almighty is going to bless you and your family abundantly but as Siva said know where you stand, evaluate your knowledge of Space science & Biology and True experience of Grace/Bliss, Sivaram had rightly said, APJ, this is your last resort, don't misunderstand, please follow thin guidelines off Sivaram as Vedham as if it is from Vallalar.
Tuesday, March 15, 2016 at 14:14 pm by ram govi
narayani julu
மன்னிக்க வேண்டும். மீண்டும் பதில் அளிப்பதற்கு. தாங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் அனைத்துமே வள்ளலாரின் தனி நெறியையும், உண்மை கடவுளின் வெளிப்பாட்டையும் தான் வெளிப்படுத்துகிறது. பல முறை நீங்களே படித்து உணரவேண்டுகிறேன்.காலமும், அறிவு வளர்ச்சியும் பதில் சொல்லும்.
Tuesday, March 15, 2016 at 16:27 pm by narayani julu
Sivaram Narayan
Aptly suggested by Mr.Ram. This is truly seemed here by the APJ ( ArutPerumJothi) Andavar's Grace only! Thank you very much Mr. Ram. I have read some of your great science based blogs of SSSS. That is called true Sutha Sanmargam. Please continue to post more posts, which may help our future generation worldwide stay focused. May APJ Anadavar bless you and your family abundantly forever! Thanks again.
Tuesday, March 15, 2016 at 17:15 pm by Sivaram Narayan
Logith sharma
நான் சன்மார்க்கதிற்கு புதியவன், நான் வள்ளலாரையும், சுத்த சன்மார்க்கத்தையும் பற்றி அறிந்துக்கொள்ள/தெரிந்துகொள்ள/புரிந்துகொள்ள, சுத்த சன்மார்க்க நெறி(வள்ளலாரின் தனிநெறி பயில) vallalarspace-இல் இணைந்துள்ளேன். நான் தொடர்ந்து APJ அருள் அம்மா அவர்களின் பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன், அவர்கள் வள்ளலார் சொல்லியதை(சொல்லியதை மட்டும் தான்) மிகத் தெளிவுடனும்/ஆதாரத்துடனும் தன் பதிவை இங்கு நம் அனைவருக்கும் தருகிறார்கள், அம்மா அவர்களின் பணி மிகவும் சிறப்புடையது – இவர்களுடைய அரும்பணி மென்மேலும் தொடர வாழ்த்துவோம்.
வள்ளலாரையும், சுத்த சன்மார்க்கத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் தயவுசெய்து - APJ அருள் அம்மா அவர்களின் பதிவுகளை ஒருமுறையாவது படிக்க வேண்டுகிறேன்(ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் அனைவரும் சுத்த சன்மார்க்க நெறி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில்).
இச்சிறியேன் ஆகிய நான் சன்மார்க்கம் தெரிந்த பெரியோர்களாகிய உங்களின் கரம், சிரம் தாழ்த்தி வணகுகிறேன் – வள்ளலாரை சுத்த சன்மார்க்க நெறியில் காட்டுபவர்கள்/தெரிவிப்பவர்கள் ஒரு சிலரே தயவுசெய்து அவர்களை சாடதிர்கள்/விமர்சனம் செய்யாதிர்கள்(இஃது வள்ளலாரையே விமர்சனம் செய்வதாகும்).
இச்சிறியேன் ஆண்டவரிடம் விண்ணப்பிக்கிறேன் – ஆண்டவரே இங்குள்ள எல்லவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் – சுத்த சன்மார்க்க நெறி பயில வேண்டும், சுத்த சன்மார்க்க சுகநிலை பெறவேண்டும்.

அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை
Wednesday, March 16, 2016 at 01:33 am by Logith sharma
Sivaram Narayan
அன்புடையீர், வள்ளலாரையும், சுத்த சன்மார்க்கத்தையும் பற்றிப் புரிந்துகொள்ள, வள்ளலார் அருளிய அருட்பாவையும், உரைநடைப் பகுதியையும் நன்கு படியுங்கள். அருட்பா அன்னிய மொழியில் அருளப்படவில்லை. நம் இனிய நடப்புத் தமிழில்தான் அருளப்பட்டுள்ளது. அது புரியவில்லை என்றால், தமிழை முதலில் கற்றுக்கொள்வதுதான் உத்தமம். அஃது தமிழ் புரியாமல் குழப்புவர்களின் மாயவலையில் சிக்க விடாது காக்கும். வள்ளலாரின் தனிநெறி யுத்த நெறி அல்ல. சமரச நெறி. கருணை நெறி. சண்டை போடுவதும் சாடுவதும் நாங்கள் அல்ல. APJ அருள் அவர்கள் பல பொதுக் கூட்டங்களில் மக்கள் காதைப் பொத்திக் கொள்ளும் அளவிற்கு வள்ளலாரையும் மற்றவர்களையும் கண்டபடி பேசுவதால் கண்டன நோட்டீஸ் சுத்த சன்மார்க்கிகளால் தமிழகம் எங்கும் ஒட்டும் அளவிற்கு நடந்துகொள்கின்றார். வள்ளலார் இப்படியா வாயாலும் ஆயுதத்தாலும் வன்மையாக நடக்கச் சொல்கிறார்? முதலில் அடிப்படை ஒழுக்கத்தையே கடைபிடிக்கத் தெரியவில்லையே! உங்கள் கருத்துப்படி APJ அருள் அவர்கள்தான் வள்ளலாரைச் சாடுகிறார், விமர்சிக்கிறார். இல்லையா? இங்கு எல்லோரும் வள்ளலார் சொல்லியதை மட்டும்தான் மிகத் தெளிவுடனும், ஆதாரத்துடனும் சொல்கிறோம். மாற்றுப் பதிவுகளுக்கு இங்கு இடமேயில்லை. அனைவரும் அறிவோம். மேலே நான் தந்துள்ள ஆதாரங்கள் அருட்பா ஆறாம் திருமுறையில்தான் உள்ளது. நானாக எழுதவில்லையே? அவற்றின் பொருள் தெரிந்தவர்கள் சண்டை செய்ய மாட்டார்கள். சமரசம் ஒன்றையே செய்வர். APJ அருள் அவர்களின் பதிவுகளைப் படித்திருக்கின்றேன். திருச்சியில் ஏசியதையும் நன்கு கேட்டிருக்கின்றேன். அதனால்தான் அறிவுறுத்துகின்றோம் இங்கே ஆன்ம உரிமையால். குண்டர்களில்லாத, ஆயுதமில்லாத அருட்பணி மென்மேலும் தொடர எங்கள் நல்வாழ்த்துக்கள் என்றும் உண்டு. நன்றி!
Wednesday, March 16, 2016 at 13:32 pm by Sivaram Narayan
Logith sharma
சிவராமன் அய்யா அவர்களின் ஒவ்வொரு வரிகளும் (சன்மார்க்கதிற்கு)புதிதாக வந்த என்னை புண்படுத்திவிட்டது நான் சென்னையை சேர்ந்தவன் “சிவராம் நாராயண்” யார்? அன்பரா , நண்பரா , பெரியவரா, எந்த ஊர், எந்த நாட்டிலிருந்து எழுதுகிறார் என்று தெரியவில்லை. இதுவரை இவருடைய கட்டுரை எதுவும் vallalarspace-இல் இடம்பெறவில்லை, அய்யா அவர்கள் கமெண்ட்ஸ்(comments) மட்டும் போட்டுள்ள அன்பர் என்று தெரிகிறது, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் எந்த comments இன் அடிப்படையில் APJ அருள் அம்மா அவர்களை ‘சிவராம் நாராயண்” அவர்கள் தாக்கி பேசினார் மேலும் அவர் comments செய்தது ஏதோ பொறாமையின் அடிப்படையில் போட்ட கமெண்ட்டாக(comments) உள்ளது இது புதியவர்களாகிய எங்களுக்கு மிக மிக வேதனையாக உள்ளது. APJ அம்மாவாகட்டும்/அய்யாவகாட்டும் இருவருடைய பணிகளுமே மிகவும் உயர்வுடையது என நேற்று தான் நான் தெரிந்து,/அறிந்துகொண்டேன். இந்நிலையில் எனது comments-இன் அடிப்படையில் தன்னை வெளிக்காட்டிகொல்லாத “சிவராம் நாராயண்” என்பவரின் வரிகள் வேதனை அளிப்பதாலும் ‘என்னுடைய comments –ய் வாபஸ் வாங்கிகொள்கிறேன்.
APJ அருள் – அவர்கள் எப்போதும் போல் அவர்களுடைய பதிவுகளை போட வேண்டுகிறேன். vallalarspace-இல் பல பார்வையாளர்களை கொண்ட ஒரே நபர் APJ அருள் என்பதை அனைவரும் அறிவார்கள், மேலும் எண்ணற்ற பதிவுகளும் மிக உயர்ந்த கட்டுரைகளும் நமக்கு தந்துள்ளார்கள் . எது எப்படி இருந்தாலும் எங்களுக்கு APJ அருள் அவர்களின் பதிவுகளும், கட்டுரைகளும் தான் வேண்டும் – எவ்வகையாயினும், எப்படி இருந்தலும் APJ அருள் அவர்களை சாடுவதற்கு ஒருமையும் அருமையும் எவருக்கும் இல்லை, அவரை சாடுவதற்கு வழிவகுத்து சிவராம் நாராயண் அவர்களின் comments இருப்பதா?
APJ அம்மா அவர்களயும் அய்யா அவர்களயும் இந்த comments சார்ந்திருப்பதால் நான் என்னுடைய comments-யை வாபஸ் பெற்றுக்கொள்ளுகிறேன்
எங்களுக்கு வள்ளலாரும் , உண்மை கடவுளாகிய நிலையும் அடைந்தால் மட்டும் போதும். APJ அருள் அம்மா அவர்களின் சிறப்பான பணி தொடர பணிவன்புடன் வேண்டுகிறேன்.
அறிவுள்ளவர்கள் அனைத்தும்/அனைவரும் அறிவர்
Wednesday, March 16, 2016 at 21:06 pm by Logith sharma