சீவர்கள் துக்கப்படுவதைக் கண்டபோதும் சிலர் சீவகாருணியமில்லாமல் கடின சித்தர்களாக இருக்கின்றார்களே, இவர்களுக்கு ஆன்ம உரிமை இல்லாமற்போவது என்னென் றறியவேண்டில்:- துக்கப்படுகின்ற சீவரைத் தமது ஆன்ம இனமென்றும் துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கின்ற கண்ணானது அஞ்ஞான காசத்தால் மிகவும் ஒளிமழுங்கின படியாலும் அவைகளுக்கு உபகாரமாகக் கொண்ட மனமுதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாசப் பிரதிபலித மில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்தபடியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று. அதனால் ஆன்மஉரிம
Read more...