Vallalar Groups
அருட்பெருஞ்சோதி மகாமந்திரத்தின் சிறப்பு
அருட்பெருஞ்சோதி மகாமந்திரத்தின் சிறப்பு:
  1. உலகில் உள்ள அனைத்து வஸ்துக்களும் "அ" என்ற அட்சரத்தை கொண்டு தான் தொடங்குகின்றன.அந்த "அ" என்ற அட்சரத்தை கொண்டு தொடங்கும் ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".
  2. உயிர் எழுத்துக்கள் "அனைத்தும்" நிரம்பிய ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்". அனைத்து மந்திரங்களும் இந்த உயிர் எழுத்தை கொண்டு இயக்கியும், இயங்கியும் கொண்டு இருக்கின்றன.
  3. இது எப்படி :
    தமிழில் உயிர் எழுத்து : ,ஆ, , ,, , , , , , ,ஒள
    ஆனால் மூலம்:, இ ,உ, எ, ஒ
    இந்த ஐந்து எழுத்துக்களை தழுவி மற்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன.
    இந்த ஐந்து எழுத்தக்களும் நிரம்பிய ஒரே மந்திரம்
    "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".
  4. அருட்பெருஞ்சோதி:
    =
    ரு = ர் +
    ட் = ட் +
    பெ = ப் +
    ட் = ட் +
    ஜோ = ஜ் +
    தி = த் +
    அனைத்து உயிர் எழுத்து (, இ ,உ, எ, ஒ)
  5. அருட்பெருஜோதி மகா மந்திரத்தை எப்படி ஓத வேண்டும் ?
    வள்ளலார் கூறுகிறார் :
    "ஊன் படிக்கும் .உளம் படிக்கும்.
    உயிர் படிக்கும். உயிர்க்கு உயிர் தான் படிக்கும் "
    நாம் "மகாமந்திரத்தை" :
    ஊன் ஓத வேண்டும் . (இந்திரிய ஒழுக்கம்)
    உளம் ஓத வேண்டும் . (கரண ஒழுக்கம் )
    உயிர் ஓத வேண்டும். ( ஜீவ ஒழுக்கம் )
    உயிர்க்கு உயிர் தான் ஓத வேண்டும். (ஆன்ம ஒழுக்கம் )
  6. ஏன் இந்த மந்திரத்திற்கு "மகா மந்திரம்" என்று பெயர் ?
    ஏனெனில் , இந்த "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்" -திற்குள் னைத்து மந்திரங்களும் அடங்கி உள்ளன.



Muthukumaaraswamy Balasubramanian
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி இதுதான் மகாமந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே . இதன் விளக்கம் எதுவாக இருக்கலாம் .சன்மார்கத்தில் தவம் செய்வோருக்கு அனுபவம் எது? அதன் முடிவு எது?அனுபவ மாலை 54 வது பாடலில் காண்பது; பாடலை அருட்பாவில் பார்த்துக்கொள்க; இங்கே அதன் பொருளை மட்டும் தருகிறேன் ;ஏ மனமே நீ எனை விட்டு ஏகுதோறும் நான்தான் காற்றறியாத் தீபம் போலே இருந்திடும் அத்தருணம் கண்ட பரிசு என்புகல்வேன் ஆண்ட பகிரண்டம் தோற்றரியாப் பெருஞ்சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அதுதான் மாற்றறியாப் பொன் ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும் வள்ளல் அருள் ஒளியோ . அதாவது தவம் செய்தால் பரநாத அனுபவத்தில் பேரொளி தோன்றும் பேரொளி நடுவே பொன்னொளி தோன்றும் அப்பொன் ஒளி நடுவே உள்ஒளி தோன்றும். இதைதான் ஜோதியுட் ஜோதியுட் ஜோதி என்று கீர்த்தனையில் பாடியுள்ளார். இந்த மூன்று ஜோதியுள் முதல் இரண்டு ஜோதிகளும் காட்சி பொருளே ஆகும். ஆதாரம் ; திருக்கதவம் திறவாயோ என்ற பாடலின் முதல் வரியில் திரு அருளாம் பெருஞ்சோதி திரு வுரு காட்டாயோ என்கிறார் .அடுத்த பாடலில் மணிக்கதவம் திறவாயோ மாற்றறியாப் பொன்னே நின் வடிவது காட்டாயோ என்கிறார். மூன்றாவது பாடலில் உரை கடந்த திருவருட் பேரொளி வடிவை கலந்தே என்கிறார். ஆக மூன்றாவது ஒளிதான் கலக்கும் .இந்த உள் ஒளிதான் நடராஜன். . ஆணிப் பொன் அம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புத காட்சிகள் என்ற பாடலில் அம்மையை கண்டேன் அவருள் கொண்டேன் அமுதமும் உண்டேனடி தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேனடி என்கிறார். இதிலிருந்து தெரிவது என்ன./ அமுதம் உண்ட பின்பே நடராஜர் காட்சி.அதாவது உள் ஒளி .இனி மந்திரத்தை பார்க்கலாம் .முதல் இரண்டு காட்சிகளையும் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி என்று வைத்து அமுதத்தை தனிப்பெருங்கருணை என்றும் கடைசியாக வரும் உள் ஒளியை அருட்பெருஞ்சோதி என்றும் மந்திரமாக வைத்தார்.இந்த மந்திரம் அனுபவ மந்திரம் என்று உணராமல் வேறு வேறு விளக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன நன்றி வணக்கம் மு பா ;
Friday, March 18, 2011 at 02:58 am by Muthukumaaraswamy Balasubramanian