மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
பேநியதோர் அடி வயிற்றைப் பார்வை செய்வார்
பிலமுள்ள மேல் வயிற்றைத் தியானம் செய்வார்
பாநியதோர் நெஞ்சதனை நியாயம் செய்வார்
பகருகின்ற கண்டத்தை நிசமே செய்வார்
கானியதோர் கபால நிலா அறமே என்பார்
கருத்துள்ள நெற்றிக்கண் கானச்சொல்லார்
ஆணியதோர் மூக்கு முனை யதீதமென்று
அழகுள்ள இரு கண்ணும் பார்வையாமே.
பார்வைஎன்ற இந்த முறை யதீதமேன்பார்
பண்பில்லா மூடரப்பா நியாயஞ் செய்வார்
சேர்வை என்ற குரு சீஷர் இருவர் கெட்டார்
செகந்தனிலே நோய் பிறந்தே உழன்று போவார்
கொர்வைஎன்ற ஐம்பூத கவனமாகி
கொடிதான துயரத்தால் மாண்டு போவார்
ஏர்வை என்ற ஞானம் வந்து என்ன செய்யும்
எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே.
மேற்கண்ட சுப்ரமணியரின் சுத்த ஞானம் பதஞ்சலி யோக சூத்திர முறையில் கூறப்பட்ட சக்கரங்கள் மேலேற்றும் பாவனையால் ஞான நிலையினை அடைய முடியாது என்று தெளிவாக கூறுகிறார். ஆகவே சுத்த சன்மார்க்க நிலையினை அடைவதற்கு சக்கரங்களை தேடி போக வேண்டாம் என்று நமது வள்ளல் பெருமானும் மற்றும் சித்தர்கள் கூறுகிறார்கள். இது யாருடைய மனதையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. நமது சன்மார்க்க அன்பர்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதப்பட்டது.
4 Comments
உயிர்ச்சக்தி சாதாரணமாக எல்லோருக்கும் மூலாதாரம் என்ற அதாவது பால் உணர்ச்சிக்குரிய ஒரு சுரப்பியிலே அடிப்படையாக நின்று உடல் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கின்றது. அந்த மையமானது அங்கு இருக்கின்ற வரையிலே உயிரினுடைய இருப்பு மனத்திற்குத் தெரிவதில்லை. அந்த மையத்தை விட்டு மேலே ஏற்றி நெற்றிக்கண், ஆக்கினைச் சக்கரம் என்று சொல்கின்ற இடத்திலே அமைக்க வேண்டும். அந்த இடத்தில் கொண்டு வந்தால்தான், உயிரினுடைய தன்மை, இருப்பு, இயக்கம் தெரியவரும்.
இந்த மையம் முதுகந்தண்டின் (Spinal column) அடிப்பகுதியாகும். ஆசன வாய்க்கு ஓர் அங்குலம் மேலே உள்ள பால் உணர்வுச் சுரப்பியை (Sexual gland) இது குறிக்கும். எனவே, மூலாதாரத்தில் நின்று தவம் இயற்றும்போது, அந்த இடத்தில் அதாவது உடலின் உள்ளே (முன்புறமோ, பின் புறமோ) நினைவைச் செலுத்தித் தவம் இயற்ற வேண்டும்.
Anbudan Jothi sundaramurthy,
Chennai-600106, C/o Jothi Guru Gnana Sabhai, Minjur, Chennai)
Tel.No.9444230399