The Yangon Samarasa Suddha Sanmarkha Sangam
இராமநாடு மற்றும் பர்மா சங்கங்களின் கடித பரிமாற்றம்



4 Comments
rajaveer jothimurugan
பெருமதிப்பிற்குரிய தயாநேயர் திரு APS. சிவராமன் அய்யா அவர்களுக்கு எங்களது வணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கின்றோம் , தங்களது கடிதம் கண்டோம் மிக்கமகிழ்ச்சி, தங்களது நாட்டிற்கு வருவதற்கு விசாதேவையா, என்பதை அறியவிரும்புகின்றோம்.
மேலும் விமானக்கட்டணம் எவ்வளவு என்பதையும் அறியவிரும்புகின்றோம் ( சென்னை - யாங்கோன்)மேலும் வரும் தைப்பூசத்விழாவிற்கு அனைவரையும் வரவேற்கின்றோம்.
வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்,
12,முகவையூரணி மேற்கு
இராமநாதபுரம் 623501..
9443121368
.
Monday, January 11, 2010 at 03:06 am by rajaveer jothimurugan
Ramanujam jam
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை யாங்கோனில் பரப்பி வரும் யாங்கோன் சுத்த சன்மார்க்க சங்க தலைவர் மற்றும் அன்பர்களுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால் சகல நலமும்
விளைவதற்கு வேண்டி எழுதும் மடல்.
தங்களின் அன்பு மடலினை ராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்டின் தலைவர் ராஜவீர் ஜோதிமுருகன் இந்த இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், மதுரையில் செயல்பட்டு வருகின்றது
.
1) தினமும் குறைந்த பட்சம் 8 அல்லது 9 ஆதரவற்ற முதியோர்களுக்கு
மதிய உணவினை, அவர்கள் வாழும் இடத்திற்கே கொண்டு சென்று
வழங்கி வருகின்றது.
2) வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில், மாலை 6.00 மணி அளவில்
சுத்த சன்மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் நடத்தி இந்த ஏரியாவில் சுத்த
சன்மார்க்கத்தினைப் பரப்பி வருகின்றது.
3) கடந்த 9.5.2009 அன்று, மதுரையில், இதுவரை நடைபெறாத..திரு அருட்பா
இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்து, சென்னையில் இருந்து 12 திரு அருட்பா
பாடகர்களைக் கொண்டு வந்து பாடுவதற்கும், அதன் மூலம் திரு அருட்பாவின்
மகத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டு தமது வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு
ஏற்பாடு செய்தது. இவ் விசை நிகழ்ச்சிக்கு திருபுவனம் திரு ஆத்மநாதன்
தனது குழுவுடன் வந்து, 12 மணி நேரம் (காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி
வரை) திரு அருட்பா பாடல்களைப் பாடினார்.
4) சென்னையில் கடந்த 23.12.2009 முதல் 25.12.2009 வரை 3 நாட்களுக்கு
ஏனையோருடன் கலந்து கொண்டு, திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் மூலம்
சங்கீத் சாகர் கல்சுரல் ட்ரஸ்ட் மூலம், மாலையில் 4.00 மணி முதல் இரவு
7.30 மணி வரையில், திரு அருட்பா பாடல்களையும் பின்னர், 8.30 மணி வரையில்
நாட்டிய நிகழ்ச்சியாகவும் நடத்தியது.
5) கடந்த 20.12.2009 அன்று வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில், திரு அருட்பா
பாடகர்கள் ஐவரைக் கொண்டு, விழா எடுத்தது.
6) வெளி நாட்டு அன்பர்கள் திரு அருட்பா புத்தகங்கள் உரை நடைப் பகுதி
கேட்டால், அவற்றைப் பெற்று அவர்களுக்கு அனுப்பி வைப்பது.
பயன்பெற்றவர்கள்....
அருட்ஜோதி நிலையம், மலேசியா.
யுனைடட் கிங்டம் டாக்டர் திரு சபாபதி சிவயோகம்.
ஆஸ்திரேலியாவில் திரு ஷண்முகநாதன்.
7) ஏனைய மாநிலங்களிலிருந்து திரு அருட்பா தேடல் வரப் பெறும்போது
அன்பர்களின் கோரிக்கையினை உடனுக்குடன் நிறைவேற்றியது.
ஒரு சில இங்கே கொடுக்கப்படுகின்றது.
திரு ரெனி பிரகாஷ், கோவா.(கிறிஸ்துவர்)
டாக்டர் திரு தீபக் சொராதியா, கட்ச் ஜில்லா, குஜராத் மாநிலம்.
ஸ்பிரிச்சுவல் செண்டர், மஹாராஷ்ட்ரா.
8) சிங்கப்பூர் அன்பர் திரு சிவகுமார், திரு அருட்பா ஆடியோ சி.டி.தயாரிக்கும்
பணியினை ஏற்றுக் கொண்டுள்ளார். அங்கு தயார் செய்யும் ஆடியோ சி.டி.கள்
விற்கும் பணியினை இந் நிறுவனம், தமிழ்நாட்டில் ஏற்றுச் செயல்படுகின்றது.
9) மாஸ்கோவிலிருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிலிருந்து சுத்த சன்மார்க்க பயிற்சி
பெறுவதற்கு வருகை புரிந்தபோது, அவர்களுக்கு பயிற்சி அளித்தது.
10) ஏனைய மாவட்டங்களில் நடைபெறும் சுத்த சன்மார்க்கக் கூட்டங்களில்
கலந்து கொண்டு சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவு ஆற்றுவது.
11) மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் ஆகியவற்றில் 8 கிராமங்களில்
சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு பிரச்சாரம் ஆற்றியது.
12) www.vallalarspace.com மூலமாக, வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி
பரப்புவது.
முதலானவை.
Monday, January 11, 2010 at 09:17 am by Ramanujam jam
Ramanujam jam
Vanakkam,
தாங்கள் அனுப்பிய கடிதம் மற்றும் தங்களது சங்கம் ஆற்றும் கல்விப் பணிகள், வரவு செலவுக் கணக்கு முதலானவை வந்து சேர்ந்தன. இங்கு, இந்த VallalarOrg Foundation என்ற ட்ரஸ்ட், கடந்த ஏப்ரல் 2008ல் துவங்கப்பட்டது. துவங்கிய காலத்தில், அன்பர் திரு முரளீதரன் என்பவர் மூலம் இந்த பெளண்டேஷன் திண்டுக்கல் மெளலானா தெரிவில் வைத்து நடத்தப்பட்டு வந்தது. அவர், மதுரையில், மற்றுமொரு ட்ரஸ்ட் (Arul Trust) ஆரம்பித்ததால், சிங்கப்பூர் அன்பர் திரு சிவகுமார், இதனை தாங்கள் நடத்த முடியுமா எனக் கேட்டார். சம்மதம் அனுப்பப்பட்டது. அதன் பின்னர், மேனேஜிங் ட்ரஸ்டியாக, கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டு, கடந்த 31.12.2008 முதல், மதுரையில் நாராயணபுரம் என்ற இடத்தில் இந்த பெளண்டேஷன் நடத்தப்பட்டு வருகின்றது. இங்கு, வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6.00 மணி அளவில், சுத்த சன்மார்க்க பயிற்சி, திரு அருட்பா பாராயணம் முதலியன நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து திரு அருட்பா இசைக் கச்சேரியினை, இந்த பெளண்டேஷன், கடந்த 2009ஆம் ஆண்டு மதுரை தெப்பக்குளம் அருகே இருந்த நடன கோபால மந்திரில் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சுமார் 10 பாடகர்களைக் கொண்டு திருஅருட்பா பாடல்களைப் பாட வைத்து, இந்த ஏரியா முழுவதும் திரு அருட்பாப் பாடல்களுக்கு மகத்துவத்தை ஏற்படுத்தியது. மதுரை தவிர, பிற மாவட்டங்களிலும் சன்மார்க்க சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டு, சொற்பொழிவு செய்யும் பணியும் நடைபெற்று வருகின்றது. திரு அருட்பா ஆடியோ சி.டி.களை சிங்கப்பூரிலிருந்து பெற்று, வைத்து, இங்கிருந்து பல்வேறு அமைப்புக்கள், தனியார்களுக்கு, ஆடியோ சி.டி.களை விற்பனை செய்துவருகின்றது. இதன் ஒரு கிளையினை, சென்னை, செயிண்ட் தாமஸ் மெளண்ட் ஏரியாவிலும் ஏற்படுத்தி, அங்கும், திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளது. வெளி நாடுகளிலிருந்து திரு அருட்பா வேண்டுவோர் பயன் பெறும் விதத்தில், வடலூரிலிருந்து, திரு அருட்பா, மற்றும் உபதேசம் முதலானவற்றைப் பெற்று, அவர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வருகின்றது. அருட்பெருஞ் ஜோதி உடற்பயிற்சி நல மையத்தை தற்போது துவக்கி, அன்பர்களுக்கு, உடல் நலம் பேணும் வகையில், மதுரையை அடுத்த திருப்பாலை என்ற இடத்தில் வசிக்கும் மூத்த சன்மார்க்க அன்பர் திரு ஹரி கோவிந்தன் மூலமாக கடந்த 13.2.2010 அன்று உடற்பயிற்சி முறைகளை அன்பர்களுக்கு செய்து காண்பிக்க ஏற்பாடு செய்தது. வரும் 13.3.2010 (சனி) மற்றும் 14.3.2010 (ஞாயிறு ஆகிய நாட்களில், ஈரோட்டை அடுத்த மூலப் பாளையத்தைச் சேர்ந்த சன்மார்க்க சாது பாண்டுரங்கம், RMP மூலம் (அகரம் உயிர் நீட்டும் ஆய்வகம்) இங்கு உள்ள மக்கள் அனைவரும் பயன்பெறும் விதத்தில், மருத்துவ முகாம் நடத்து ஏற்பாடு செய்துவருகின்றது. திரு அருட்பா இசைக் கச்சேரியினை, இந்த வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில் ஏற்பாடு செய்து, (டிசம்பர், 2009) இப் பகுதியில் உள்ளோர் அதன் சிறப்பினை உணரச் செய்தது. தினந்தோறும் சுமார் 8 முதல் 10 ஆதரவற்ற முதியோர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று மதியம் அன்னமளிக்கும் பணி செய்து வருகின்றது. கடந்த 30.1.2010 (சனிக்கிழமை) தைப்பூசத் திருவிழாவில், வடலூரில் .. சத்திய ஞான சபையினை எவ்வாறு வழிபட வேண்டும் என்ற விதத்தில் ஒரு (DVD) தயார் செய்து, அன்பர்களுக்கு வினியோகம் செய்து வருகின்றது. அருட்பெருஞ் ஜோதி தரிசனம் தவிர, வள்ளல் பெருமான் ஏன் சத்திய ஞான சபையினை, தென் முகங் கொண்டு விளங்கும்படி அமைத்தார் என்ற அடிப்படையை வைத்து இந்த DVD தயார் செய்து வினியோகிக்கப்பட்டது. இதற்கு ஆதாரமாக, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், 1938ஆம் ஆண்டு எழுதிய சத்திய ஞான சபைத் தத்துவ விளக்கம் என்ற நூல் அமைந்தது. சுத்த சன்மார்க்கப் பதி வருகை,ஆடியோ சி.டி. தயவுப் பாக்கள் 100 உரையுடன்-ஆடியோ சி.டி. மற்றும் 10 தயவுப் பாக்களை தக்க இசை அமைப்பாளர்களைக் கொண்டு, இசை அமைத்து ஆல்பம் வெளியிட்டுள்ளது. மதுரையிலும், மற்ற ஏரியாக்களிலும் வசிக்கும் சன்மார்க்க அன்பர்கள், சன்மார்க்க அமைப்புக்கள், சங்கங்கள் ஆகியவை பயன்பெறும் விதத்தில், திரு அருட்பா மற்றும் உரைநடைப் பகுதி ஆகியவை, இவைதவிர, திண்டுக்கல் சுவாமி தயாநிதி சரவணானந்தா அவர்கள் எழுதிய புத்தகங்களை விற்கும் மையமாகச் செயல்பட்டு வருகின்றது. தினந்தோறும், ஒரு தயவுக் குறள் விளக்கம், மற்றும் சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் - விளக்கங்கள் முதலானவற்றை (தயவு-DAEIOU) என்ற தலைப்பிலும், சுவாமி சரவணானந்தா (Swami Saravanananda) அவர்கள் எழுதிய நூல்களில் பலவற்றை தட்டச்சு செய்து,www.vallalarspace.com என்ற இணைய தளத்தின் மூலமும் உலகெங்கும் பரப்பும் பணியைச் செய்து வருகின்றது. இந்தச் சொற்பப் பணிகள் மட்டுமே இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மற்றபடி, தங்கள் சங்கம் மேற்கொண்டிருக்கும் பல்வேறு பணிகளுக்கு, இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மிக மிகச் சொற்பமே. தாங்கள் அனுப்பிய நன்றிக் கடிதத்திற்கே ஒரு நன்றி ஐயா. திறம்பட அங்கே செயல்பட்டு வருவதற்கு வாழ்த்துக்கள் பல. வள்ளற் பெருமானின் ஆசியும், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளும் உடனிருந்து உதவும்...............தயவுடன்.......மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை.14, தமிழ்நாடு, இந்தி
Thursday, March 4, 2010 at 04:05 am by Ramanujam jam
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Great gift as if now I am in Burma
Friday, March 30, 2018 at 17:40 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R