அன்னதானம் நிகழும் இடம் : சிதம்பரம் மேல ரதவீதி பெல்காம் அனந்தம்மாள் சத்திரம்
அன்னதானத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் வங்கி கணக்கு எண்ணில் பங்கு கொள்ளலாம் நேரிலும் வரலாம் மணியார்டர் மூலம் அனுப்பலாம்
உங்கள் விருப்பம்போல் செய்யலாம் ஆனால் சிதம்பர தரிசனம் காண தவறாதீர்கள்
அவசியம் வாருங்கள்
விழா அமைப்பு
கடைய நாயினும் கடைய நாயினும் கடைய நாயினும் கடைய நாயினேன்
கோவை தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள்
இராமலிங்க வள்ளலார் அறக்கட்டளை
மேட்டுக்குப்பம்
வருக
KOVAI SIVAPRAKASA SWAMIGAL
STATE BANK OF INDIA
S.B.A/C NO.: 32822631809
MANDARAKUPPAM BRANCH
IFSC: SBIN0010660
SWIFT SBIN INBB457
பஞ்சபூதத் தலங்களில் முதலாவது இடத்தில் உள்ளது சிதம்பரம் இதுவே ஆகாயத்தலம் மாணிக்கவாசகர் இறைவன் திருவடியில் கலந்தது இந்த தலத்தில்தான் அதனால் தான் "வான்கலந்த மாணிக்கவாசக" எனவும் "மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளியாக்கி கலந்துகொண்ட வெளியே" எனவும் வள்ளல் பெருமான் திருவாய் மலர்ந்து அருளி உள்ளார்கள்.
வள்ளல் பெருமான் திருஅவதாரம் செய்ய தவம்செய்த திருவூர் திருமருதூர் ஆகும் ஆனாலும் தன்னுடைய பெயருக்கு முன்னால் சிதம்பரம் இராமலிங்கம் என்றுதான் அருளியுள்ளார்கள் தட்சிணாயன புண்ணிய காலம் நிறைவுபெறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் பெருவிழா பத்து நாட்களும் உத்தராயண புண்ணிய காலம் நிறைவுபெறும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனம் திருவிழா பத்து நாட்களும் நிகளும் இந்த இரண்டு திருவிழாக் காலங்களிலும் பத்துப் பத்து நாட்கள் அன்னதானம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து நிகழ்கிறது.
இப்பொழுது 01.01.2020 வருடப் பிறப்பு முதல் 10.01.2020 வரை நிகழ்வது 56 ஆவது அன்னதான நிகழ்வு எந்த நேரமும் பணம் எடுக்க உதவும் இடம் ஏடிஎம் எனி டைம் மணி இது எங்களுடைய அன்னதானமும் ஏடிஎம் தான் எனி டைம் மீல்ஸ் 56 நிகழ்வுகளில் ஒருநாள்கூட உணவு இல்லை என்று சொன்னதே இல்லை இல்லை என்கிற சொல்லே எங்களிடம் இல்லை இதில் 9. 1 . 2020 வியாழன் காலை 6 மணிக்கு திருத்தேர் புறப்பாடு நிகழும் அன்று இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆனந்த நடராஜ மூர்த்திக்கு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் மகாபிஷேகம் நிகழும் காணக் கண்கள் ஆயிரம் இருந்தாலும் போதாது
10 .1. 2020 பகல் ஒரு மணிக்கு ஆனந்த நடராஜ மூர்த்தி பதஞ்சலி முனிவர் வியாக்கிரபாத முனிவர்களுக்கு திரு காட்சி அளித்த ஆனந்த நடனக் காட்சியை கண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அழுது தொழுது வழிபடலாம் வாருங்கள் மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் தொடங்கினார்க்கு வார்த்தை சொல்ல சத்குருவும் வாய்க்கும் பராபரமே என்பது தாயுமான அடிகள் திருவாக்கு இவை மூன்றாலும் சிறப்பு பெற்ற தலங்கள் தமிழ்நாட்டில் நிறைய உண்டு
ஆனால் இறைவனுடைய நிலையான அருபம் அருவுருவம் உருவம் இவை மூன்றும் அமைந்துள்ளது பூலோக கைலாயம் என்னும் சிதம்பரத்தில் தான் மற்ற ஆலயங்களில் எல்லாம் மூலவர் வெளியே வரவே மாட்டார் உற்சவமூர்த்தி தான் தேரில் வருவார் ஆனால் சிதம்பரத்தில் மூலவராக உள்ள நடராஜ மூர்த்தியே தேரில் எழுந்தருளி அருள் காட்சி வழங்குவார் வருடத்திற்கு இரண்டு பெருந்திருவிழா நிகழ்வதும் சிதம்பரத்தில் தான் இத்தலத்தில் மட்டும்தான் மற்ற தலங்களில் உருவம் அருவம் அருஉருவம் இருக்கும் அருவம் இருக்காது இது சிதம்பரத்தில் ரகசியமாக சொல்லப்படுகிறது
குமரகுருபர சுவாமிகள் சிதம்பர செய்யுட் கோவை என ஒரு நூல் இயற்றியுள்ளார் அதில் மூர்த்தி அம்பலக் கூத்தன்உருவே ஏத்தரும்தலம் இன் தளம் எழில் புலியூரே தீர்த்தமாவது சிவகங்கையே என அருளிச் செய்துள்ளார்கள் அதிலிருந்து சிதம்பரத்தின் சிறப்பை உணரலாம் அத்துடன் சிவ நேசச் செல்வர்கள் 56வது அன்னதான நிகழ்வில் உணவருந்தும் காட்சியும் கண்டுகளியுங்கள்

b0bca67b-1a18-4018-b695-beb4681124bd.jpg

fc126e34-c864-4650-9ae4-27067cbff035.jpg

ffe53af8-b578-4cf8-953f-56a344b5bf8a.jpg
Write a comment