The Thiruarutpa APP for android phones and tablets contain only Uran Adigal's version of Thiruarutpa, which is not an authenticated one, as Uran adigal changed the order of many poems. The original Thiruvarutpa, which was authenticated by VALLAL PERUMAN was the first four thirumurais, brought out by Thouluvur Velayuda Muthaliyar in 1867 and subsequent fifth thirumurai which was also brought out by t.v. mudaliyar in 1880. The sixth thirumurai was brought out by sanmarga devotees in 1885. The Thiruvarutpa brought out by Deiva Nilayam follows the original pattern of all the six thirumurais. So please follow the Deiva Nilayams's Thiruvarutpa as it is the authenticated version. The effort of publishing thiruarutpa as an app for android phones and table is lauded, but that effort must follow vallalar's line, and not somebody's line. Original Thiruvarutpa irrukka, why go for the uran adigal's thiruarutpa? Kani irrukka Eaen kayinai kavara vendum?
13 Comments
Here is the reason why we went for Thiru Uran Adigal edition. According to information that we received was, Thiru Uran Adigal spent lot of time in arranging ThiruArutpa in chronological order as well as went thru so called original hand written document(மூல ஏடு) for error corrections. This is not a simple task one can do but Thiru Uran Adigal done it. So on that basis, we have taken this edition for publishing it. On the other hand, given the current App version of ThiruArutpa needs proof reading of all hymns by volunteers.
Please enroll yourself for proof reading
http://vallalarspace.com/user/c/V000009099B
வள்ளலாரின் மூல ஏடுகளை அவர் பார்க்க சந்தர்ப்பமே இல்லை. அடுத்ததாக சைவத்தில் திருமுறைகள் பன்னிரண்டாக வைத்தார்கள். கடைசியில் அடியார்கள் வரலாறாகிய சேக்கிழார் பெருமான் எழுதிய பெரிய புராணத்தை வைத்தார்கள்.அடியார்கள் வரலாறோடு பன்னிரண்டு திருமுறைகள் முடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு வந்த அருளாளர்கள் பட்டினத்தார். தாயுமானவர் போன்றவர்கள் பாடல்கள் திருமுறைகளில் செர்கப்பைடாமல் அவரவர் பெயரோடுதான் வழங்கப் படுகிறது. வள்ளலார் அனுமதியுடன் வெளியிடப்பட்ட முதல் நான்கு திருமுறைகளிலும் நால்வர் போற்றியுடன் முடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதன் கருத்து என்ன ? அருட்பாவில் வள்ளலாரைப் பொருத்த வரையில் நான்கு திரு முறைகள் தான். வள்ளலாருக்கு வைப்பு முறை தெரியாதா?ஊரன் அடிகளார் ஐந்தாம் திருமுறைப் பாடல்களை முதல் திருமுறையாக்கிப் பதிப்பித்தார். .இதற்கு அவர் கூறிய காரணம் தெய்வ மணி மாலைதான் முதன் முதலில் வள்ளலாரால் பாடப்பட்டது என்றும், அதனால் அதனை முதலில் வைத்து வரலாற்று முறையில் தான் அருட்பாவைப் பதிப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தெய்வ மணி மாலை வள்ளலாரால் ஐந்து வயதில் பாடப்பட்டதல்ல, பாளையம் முத்துச் செட்டியார் என்பவர் கேட்டுக் கொண்டதால்தான் தெய்வ மணிமாலையை எழுதி அவருக்கு அளித்தார். தெய்வ மணிமாலை முதன்முதலில் அச்சிடப்பட்ட புத்தகத்தின் முகப்பேட்டை கீழே காணலாம்.
உ
சிவமயம்
சென்னைக் கந்தர்
தெய்வ மணி மாலை
சரணப் பத்து
இவை பாளையம் முத்துச் செட்டியாரவர்கள்
கேட்டுக்கொண்டபடி
சிதம்பரம்
இராமலிங்கப் பிள்ளை அவர்களால்
இயற்றப்பட்டு காயாறு ஞான சுந்தர ஐயர்
அவர்களால்
சென்னை சாஸ்த்திர விளக்கச் சங்கத்தைச் சார்ந்த
வித்தியானந்த அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன.
வள்ளலார் தானாகக் கந்த கோட்டம் சென்று பாடவில்லை. வள்ளலார் ஏற்கனவே பாடியுள்ள பாடல்களில் ஈர்க்கப்பட்ட
பாளையம் முத்துச் செட்டியார் கேட்டுக்கொண்டதன் பேரில் வள்ளலார் எழுதியதே தெய்வமணி மாலை.இது முதல் பாடல் அல்ல.நான் இன்னும் விவரமாக எழுதி இருப்பதை சன்மார்க்க சங்கம் ஆழ்வார் திருநகர் முபா என்ற இணைய தளத்தில் காணலாம்.. நான் எழுதியதை யாரும் லட்சியம் செய்யவில்லை. இன்று வள்ளலார் எனக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளார் அன்பர் பாஸ்கர் மூலமாக.பாஸ்கர் ஐயா அவர்களே நீங்களாவது என்னுடைய விளக்கத்தை வெப் சைட்டில் காணுங்கள். ஊரன் அடிகளார் வள்ளலாரே அனுமதி அளித்து வெளியிட்ட அருட்பா முறையை மாற்றியது எந்தக் காரணமாய் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தெய்வ நிலையங்களின் பதிப்புத்தான் முறையானது. எனவே தெய்வ நிலையத்தாரின் பதிப்புக்களையே நாம் கையாளுவது சரி சரி நன்றி வந்தனம்.
“Deyva Nilaya Arutpa padippu” is the ancient and Traditional one.
“Deyva Nilaya Arutpa padippu” popularly handled by all the level of people across the world.
“Deyva Nilaya Arutpa padippu” Thirumurai division has divided by Vallalar’s students with Supervisory of our Vallalar,
Most of the senior sanmarkka people (Like Seeni.Sattaiyappar and Mu.Pa and Sanmugam ayya) only using Deyva Nilaya Arutpa padippu.
Kindly consider the above points. It would more helpful.
a question: The Android App contains full of ThiruArutpa lyrics in a certain order and orginal songs are intact, so do you read them or ignore them because of the ordering is different or it is not ThiruArutpa?
I am sure everyone has several supportive reasons to explain. However we respect everyones feeling so next release of the app, we will have Devia Nilayam version too by ThiruArul. So it is NOT a drastic change needed as described in the title but just about changing lyrics sequences as per Devia Nilayam order. Please kindly read what is available and it is still ThiruArutpa until new app released. So we have lot more ahead of us to achieve so lets focus on.
அதிகமான அன்பர்களின் கைகளில், தெய்வ நிலைய வெளியீட்டு திரு அருட்பா தற்போது உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
தெய்வ நிலையம் பதிப்பு வேண்டுவோர், அதற்கென காரியப்பட்டு, கூட்டாகவோ, தனி மனித முயற்சியாலோ செய்து கொடுத்தால் அதனையும் இதே போன்ற முறையில் அன்பர்களின் வசதிக்காக..செய்து கொடுப்பதுதான் முறை.
ஒரு அன்பர் தெரிவித்தது போல், தெய்வ நிலைய வெளியீட்டுத் திரு அருட்பாவினை சரிபார்க்கும் பணியினை மேற்கொள்வதற்கு 60 பேர் இதற்கென மெனக்கெட்டால், வேலை சுலபமாக முடியும்தான்.
அந்த 60 பேர், தத்தமது பெயர், மாவட்டம், தொலைபேசி / செல் எண்ணுடன் இந்த இணைய தளத்தில், விவரம் தெரிவித்தால், ஒரு கூட்டு முயற்சி மேற்கொள்ளலாம்.
மதுரையைப் பொறுத்தமட்டில், தயவுக் குழு, இப் பணிக்கென முதலில் தனது பெயரினை அறிவிக்கின்றது.
ஏனைய மாவட்ட அன்பர்களும், இவ்விதம் தத்தமது பெயர்களையோ, சங்க அமைப்பின் பெயர்களையோ, இந்த இணைய தளத்தில் வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும். ஏனெனில், இப்பணி ஒருவரோ...இருவரோ..ஐவரோ...பார்க்கும் பணியல்ல...கூட்டு முயற்சியாக இருந்தால், சற்றே எளிதாக இருக்கும்..தவிரவும், இதனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளும், வள்ளற் பெருமானின் ஆசியும். கிட்டும். யாரே, இந்த அருட் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர் ? .....
Thevaram is published based on the order of sacred places as well as on the basis of Thirumurai number.
I have both publications and also that of Aa.Balakrishna Pillai dating back to 1930. All the three have their own uses
and none has any disadvantage.
As rightly said by Thiru Senthil Arutpa is Arutpa. Choose your sequence that best suits your spiritual search. Remember
throughout 5818 Arutpa songs there is continuity of thoughts
that help practitioners to speed up their progress.
Namasivayam
Thiru Ooran Adigal has not corrected any original verse and he has clearly stated the special features of his edition in page 6 of the first book. His notes on collection,compilation and classification are worth reading by anyone who wishes to get an overview of Arutpa.
Namasivayam
Namasivayam
Vallal Peruman gave only Four Thirumurais for print and HE did not want to release other two Thirumurais at that time. And later those two Thirumurais were done by devotees only. In that case, did Vallalar give permission to them to release? anyone has any information?
திரு அருட்பாவைத் திருமுறைகளாகத் தொகுத்த சமயத்தில்
வள்ளலாரால் இயற்றப்பட்ட முதல் பாடல் எது என்பதைத் தொழுவூர் வேலாயுதனார் சுட்டிக் காட்டியுள்ளார். உலகமெலாம் உதிக்கின்ற ........என்று தொடங்கும் பாடல்தான் வள்ளலாரால் பாடப்பட்டது தெய்வ மணிமாலை என்ற கட்டுரையில் இது மிக மிக விவரமாக
Further the song Ulakamelam that is quoted by MuPa is the first one in Arutprakasa Malai. This Malai, according to Vallalar himself, was composed after that of Anbu
Malai. Please see footnote written by Aa.Balakrishna Pillai to the first song of Arutprakasa Malai. Hence this could not have been the first song. Velayutha Mudaliar draws our attention to the point that the main theme of both Gnana Sambandar’s and Vallalar’s songs is the realization that God is our highest goal.
இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றது என ஆய்வு செய்தால் மட்டுமே வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றின் உண்மையை உணர முடியும்.
அது பற்றி ஓர் ஆய்வு .
1. பிருங்கி மா நகரம் இராமசாமி முதலியார் அவர்கள் 1896 ம் ஆண்டு தாம் வெளியிட்ட ஆறு திருமுறைகள் சரித்திர சுருக்கத்தில் ஒன்பதாவது பக்கத்தில் குறிப்பிடுவதாவது:
"ஒன்பதாம் ஆண்டில் கந்தர் சஷ்டி உபாசனா காலத்தில் உபவாசம் இருந்து சாந்தியாதீத கலானுபவத்தை விளக்கும் திரு தணிகாசலபதி தோத்திரமாக :"ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வயானை மகிழ் அருட்குன்றே அரசே "எனத் தொடங்கும் திருத் தணிகைப் பதிகம் ஓதி சிந்தனை செய்தலும் பின்னும் பாடுவாராய் .......... இவர் கருத்துப்படி வள்ளலார் பாடிய முதற் பாடல் ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே என்பதாகும் .
2. 1942 ம் ஆண்டு வெளியிடப்பட்ட சென்னை அருட்பெருஞ்சோதி அச்சகத்தாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு ஐந்தாம் திருமுறையில் பக்கம் பதினைந்தில் தரப்பட்டுள்ள செய்திப்படி:
"ஈ என்று நான் ஒருவரிடம் நின்று கேளாத இயல்பும் " என்று தொடங்கும் தெய்வ மணி மாலைப் பாடலே முதல் பாடல் என்று அச்சடித்து இருக்கிறார்கள். இவர்கள் கருத்துப்படி இந்தப் பாடல்தான் வள்ளலாரின் முதற் பாடல் ஆகும்.
3. 1972 ம் ஆண்டு சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் தவத்திரு ஊரன் அடிகளார் இதுவரை ஐந்தாம் திருமுறையாக வைக்கப்பட்டிருந்த பாடல்களை முதல் திருமுறை ஆக்கி திருமுறைகளின் வரிசையை மாற்றி அமைத்து வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஐந்தாம் திருமுறை பக்கம் 78 ல் கூறப்பட்டுள்ளது.
"பள்ளி சென்று பயிலாதும் வீட்டில் தங்காத பெருமான் கந்த கோட்டம் சென்று வழிபடுவதை வழக்கமாக் கொண்டார்கள். அருட்பாடல்களைப் பாடிப் பணிவார்கள்.பெருமானாரால் முதன் முதல் பாடப் பெற்ற தலம் கந்த கோட்டமே. முதன் முதலில் பாடப் பெற்றது "திருவோங்கு புண்ணியச் செயலோங்கி "என்ற தொடக்கத்தை உடையதே.
முதன் முதலில் தெய்வ மணி மாலை அச்சடிக்கப்பட்ட புத்தகத்தின் முகப்பேட்டைக் கீழே காணலாம்.
௨
சிவமயம்
சென்னைக் கந்தர்தெய்வ மணி மாலை சரணப்பத்து
இவைபாளையம்முத்துச் செட்டியார் அவர்கள்
கேட்டுக்கொண்டபடி
சிதம்பரம்இராமலிங்கப் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டு
காயாறு ஞானசுந்தர ஐயர் அவர்களால்
சென்னை சாஸ்த்திர விளக்கச் சங்கத்தைச் சார்ந்தவித்தியானந்த
அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன.
ஏற்கனவே வள்ளலார் பாடிய பாக்களைப் படித்து இன்புற்றிருந்ததனால்தான் பாளையம் முத்துச் செட்டியார் அவர்கள் வள்ளலாரிடம் வந்து பாக்கள் எழுதித் தரும்படிக் கேட்டிருக்கிறார் என்பதை நன்கு அறியலாம். எனவே தெய்வ மணி மாலை முதல்பாடல் அல்ல.
வள்ளலார் குழந்தைப் பருவத்தில் பாடி இருந்தால் குழந்தை ராமலிங்கம் என்றுதான் ஆசிரியர் பெயர் போடப்பட்டிருக்கும்.. ஆனால் சிதம்பரம் ராமலிங்கம் என்று ஜாதிப் பெயரோடு போட்டிருப்பதால் வள்ளலார் வயது வந்தபிறகு மற்றும் சிதம்பரம் இராமலிங்கம் என்று அவர் கையெழுத்து இடத் தொடங்கிய பிறகே இந்தப் பாடல்கள் அவரால் இயற்றப் பட்டுள்ளன என்பது தெளிவாகிறது/.
எல்லாவற்றிற்கும் மேலாக யாராவது கேட்டு அவர்களுக்காக வள்ளலார் பாடி இருந்தால் அந்த சுவாமி மீது வேறு பாக்கள் வள்ளலார் எழுதவில்லை.
உதாரணமாக :
ஓர் அன்பருக்காக துலுக்காணத்து ரேணுகை மீதும் ,கொந்தமூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்ய ஸ்வாமிகளுக்காக ராம நாமப் பதிகமும், மற்றும் ஒருவருக்காக திருப்பள்ளித்தாமமும் பாடிய வள்ளலார் அந்தச் சுவாமிகள்மீது வேறுபாக்கள் எழுதவில்லை.
அதே போல் கந்த கோட்டத்தின் மீதும் வேறு பாக்கள் எழுதவில்லை.
அதே சமயம் அவராக வழிபட்ட திரு ஒற்றியூர்,சிதம்பரம்,திருத் தணிகை,வடலூர் மீது பலபல பாக்களை வள்ளலார் இயற்றி உள்ளார் என்பதையும் நாம் உணரவேண்டும்.
கந்த கோட்டம் முதல் பாடல் அல்ல என்றால் எது முதல் பாடல்?
வள்ளலாரின் கட்டளைப் படியே முதல் நான்கு திருமுறைகள் மட்டிலும் 1867 வது ஆண்டில் வெளியிடப்பட்டது.
வள்ளலார் பாடிய பாக்களை ஒன்று திரட்டி திருமுறைகளாகத் தொகுத்து அச்சிட்ட அந்தப் பெருமக்களுக்கு வள்ளலார் பாடிய முதல் பாடல் எதுவென்று தெரிந்திருக்க நியாயமுண்டு. அவர்கள் கூறினால் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
முதல் நான்கு திருமுறைகள் வெளிவந்தபோது அதன் பின் இணைப்பாக வள்ளலாரின் தலை மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் திருஅருட்பா வரலாறு என்ற ஒரு சிறு நூல் செய்து வெளியிட்டார்.நம் பெருமானார் கண்ணுற்ற புத்தகம் அது. தன் பெயரை திரு அருட்பிரகாச வள்ளலார் என்று யார் போடச் சொன்னது என்றும் கேட்டிருக்கின்றார்;.
எனவே நம் பெருமானார் சம்மதம் இன்றி அதில் ஒன்றும் சேர்த்திருக்க முடியாது.திரு அருட்பா வரலாற்றின் 26 வது பாடலில் அவர் கூறியுள்ளது.
தோடுடைய செவியன் எனும் தொடையான் முன்னாள் எவர்க்கும்
நாடுடைய பொருட் சுட்டி நன்று விளக்கியதென்ன
வீடுடைய உலகமெலாம் உதிக்கின்ற எனும் தொடையான்
பீடுடைய பொருட் சுட்டி பேறமக்கு இன்று ஈதென்றும்...........
இந்தப் பாடலின்படி திரு ஞான சம்பந்தராக அன்று வந்து
தோடுடைய செவியன் என்று பாடியவர் இன்று வள்ளலாராக வந்து
"உலகமெலாம் உதிக்கின்ற" என்று தொடங்கி பாடல் எழுதி உள்ளார் என்று கூறுகின்றார்.
வள்ளலாரே கண்டு மறுக்காததும், அவரது தலை மாணாக்கர் கூறுவதும் ஆகிய வள்ளலார் இயற்றிய முதற் பாடல் இதுதான்:
உலகமெலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பம்
உறுகின்ற வெளி நிலை என்று உபய நிலையாகி
இலகிய நின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
இரவில் எளியேன் இருக்கும் இடம் தேடி அடைந்து
கலகமிலாத் திருக்கதவம் காப்பவிழ்க்கப் புரிந்து
கழித்து எனை அங்கழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்
அலகில் அருட்கடலாம் உன் பெருமையை என் என்பேன்
ஆனந்தவல்லி மகிழ் திரு நட நாயகனே.
இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அருட்பாவை மறுத்த ஆறுமுக நாவலர் உள்ளிட்டோர் வெளியிட்ட இராமலிங்கர் பாடல் ஆபாச தர்ப்பணம் (அல்லது)மருட்பா மறுப்பு என்ற புத்தகத்தில் 118 வது பக்கத்தில் முதலாம் பக்கம் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
"திருஞான சம்பந்தப் பெருமான் தோடுடைய செவியன் என்று முதலில் அருளியது போலப் பிள்ளையும் உலகமெலாம் உதிக்கின்ற என்ற செய்யுளைப் பாடினார் என்று தொழுவூர் வேலாயுதனார் தாம் பாடிய வரலாற்றில் 26 வது செய்யுளில் கூறினார்..
பிள்ளையின் சரித்திர சுருக்கத்தில் ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே என்பதை முதலில் பாடினார் எனக் காட்டப்பட்டு இருக்கிறது.இவற்றுள் எது உண்மை? " இதுவரை நம்மவர்கள் கேட்டிராத கேள்வியை ஆறுமுக நாவலர் கோஷ்டியினர் கேட்கிறார்கள்.
ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே என்ற பாடலையோ அல்லது உலகமெலாம் உதிக்கின்ற என்ற பாடலையோ முதலில் வைக்காமல் பரசிவம் சின்மயம் எனத் தொடங்கும் பாடல் முதலில் வைக்கப்பட்டதால் திரு அருட்பா வைப்பு முறையில் வழு என்று வாதிட்டனர்.
அப்போதைய சன்மார்க்க சங்கத்தார் திருஞான சம்பந்தர் முதலில் பாடிய தோடுடைய செவியன் என்ற பாடலை தேவாரத்தில் முதலில் வையாதது வழுஅல்ல எனில் திரு அருட்பாவும் வழு அல்ல என மறுமொழி புகன்றுள்ளனர்.
முடிவு: தெய்வ மணி மாலை வள்ளலாரால் பாடப்பட்ட முதல் பாடல் அல்ல.
ஊரன் அடிகள் ஆய்வின்படி தெய்வ மணி மாலை முதல் பாடல்.
வேலாயுதனார் பாடலில் ’முதல் பாடல்’ என்ற சொல் இல்லை.
சம்பந்தர் நன்று விளக்கியதைப் போன்று வள்ளலார் பேறு எமக்கு ஈது என்று காட்டினார் என்ற பொருள் உள்ளது. சம்பந்தர் வள்ளலாராய்
வந்தார் என்ற சொல் இல்லை.
. மகிழ்ச்சி.