Damodaran Raman
வேகாக்கால்-வேகாக்கால்-வேகாக்கால்
அன்பர்களே,வணக்கம். யாரும் இதுவரையில் சரியாக வேகாக்காலைப் புரிந்து கொண்டதாகத் தெரிய வில்லை. காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 என்னும் நூலில் தெளிவாகப் பல பாடல்களில் வாசி உடம்பில் ஊடுருவிச் சுழுமுனை நாடியில் மேலேறும்  என்பது விளக்கப் பட்டுள்ளன.ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி  ஒண்சுடர்,  ஞானவி ளக்கினை ஏற்றி நன்புலத்து,  ஏனைவ ழிதிறந்து ஏத்து வார்க்கிடர்,  ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே என்று திருஞான சம்பந்தர் யோகத்தைப் பற்றி விளக்கியுள்ளார். பிரத்தியாகாரம்  என்னும் ஐந்தாவது யோக உறுப்பைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல் தங்கள் மனத்திற்குத் தோன்றியன வெல்லாம் உரைப்பன உண்மையாகா.ஞான சம்பந்தருக்கு மேல் மெய்ஞ்ஞானத்தை விளக்குவார் யார் உளர்? ஏனைவழி என்பது சுழுமுனை என்னும் நடு நாடி .உயிர்ப்பு என்பது பிராணன். ஒடுக்கல் என்பது பிராண யாமம். ஈசனரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்,  ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்,  தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணிப் பீடம்,  தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந்  தோடம் என்னும் வள்ளலார் பாடல் ஒண்சுடர் ஞான விளக்கு என்பதன் விளக்கம் ஆகும்.தலையை மேரு மலை,துரிய மலைமேல்,சோதிவரை என ஆனந்த மேலீடு கூறுவது  நனகு கவனிக்கத் தக்கது. அதில் கம்பத்தைப் பற்றியும் தாரையைப் பற்றியும் வள்ளலார் கூறியுள்ளார்.அனைத்தும் யோகத்தின் விளக்கமாகும்.                                                                                                                                                    யார்-யாரெல்லாம் எதில் உண்மையுடன் உழைக்கிறார்களோ  அவரவரெல்லாம் இறையருளால் அதில் வெல்வது உறுதி. இது சத்தியம். பிரத்தியாகாரம் என்றால் திருப்புதல் ஆகும். எதனைத் திருப்புவது? பிராணனை.பிராணன் என்பது சூக்கும வாயு.சூக்கும வாயு இயக்கும் நாடியில்தான் வாசி செயற்படும்.வாசி என்பது தூல ஐம்பூதத்துள் ஒன்றான வளி எனப்படும் காற்று.வள்ளலார், அகவலில் கூறிய எட்டும் இரண்டும் என்பது சந்திர கலை,சூரிய கலை யாகும்.நடராச அலங்காரத்தில் வள்ளலாரே இரண்டே காற்குச் சூரிய கலை சந்திர கலையாகிய வாசி அனுபவத்திறகு என்றும் இரண்டே காற்கு வாசிக்கு என்றும் பொருள் கூறியுள்ளார்.எட்டும் இரண்டும் இயலும் முற்படி யென்றும் இப்படிக் கண்டனை;இனியுறும்  படியெலாம் அப்படியே என்றும் அகவலில் வருவது காண்க. பொதுவாக வாசி,இறையாணையால் பிராணன் என்னும் சூக்கும வாயு எந்த நாடியில் இயக்குவிக்குமோ அந்த வகையில்தான் இரண்டு கலையில் செயற்படும். என்று இறையருள் கூட்டுவிக்குமோ அன்றுதான் பிராணன் என்னும் சூக்கும வாயு அக்கினி கலையை இயக்கும்போது வாசி, உடம்பில் ஊடுருவி உட்புகுந்து மேலேறிப் புருவ நடுவைத் திறக்கும். திறந்து முதலில் சங்கொலியையும் பின் சிறப்பாகத் தாரையொலியையும் எழுப்பும்.உடம்பில் ஊடுருவி உட்புகுந்த வாசிதான் வேகாக்கால் எனப்படும். பிரத்தியாகாரம் என்பது மூக்கு வழியாக நடைபெறுகின்ற வாசியைத் திருப்பித் தலைப்பகுதிக்குச் செலுத்துவது ஆகும். நூலறிவும் அனுபவ அறிவும் இல்லாதவர்கள் வாசி, எப்படி நுரையீரலைத் துளைத்துச்  செல்லும் என்று கேள்வி கேட்கக் கூடும்.                                                                                                                                                    இப்படிப் பட்டவர்களுக்காக அறிவியல் விளக்கம் தருகிறேன்.கைசான் வியாதி (De compression sickness)என்றால் என்ன? நீர் மூழ்கிகள் நீரின் ஆழத்தில் பணி செய்யும்போது நீரினடியில்  காற்றழுத்தம் அதிகமாக இருக்கும் காரணத்தால் காற்று, நுரையீரல் வழியாக  இரத்தத்தில் கலக்கிறது. நீரினடியிலிருந்து உடனடியாக மேற்பரப்பிற்கு வந்தால்  நீர்ப்பரப்பிற்கு மேல் காற்றழுத்தம் குறைவாக இருக்கும் காரணத்தால் இரத்தத்தில் கலந்த காற்றிலுள்ள நைட்ரஜன்(காற்றில் நைட்ரஜன்,80% விழுக்காடு உள்ளது) வாயுக் குமிழ்களாக மாற்றம் அடைகின்றன.குமிழ்களாக மாறிய நைட்ரஜன் இரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்துவதால் இரத்த ஓட்டம் தடைபெறுகிறது.   இதனால் ஏற்படும் தீய விளைவுகளைத்தான் கைசான் வியாதி என்பர்.இவ்வியாதி சில சமயத்தில் மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.நீரினடியிலிருந்து படிப் படியாக மேற்பரப்பிற்கு வந்தால் நைட்ரஜன் வாயு,குமிழ்களாக மாற்றம் அடையா.இரத்தத்தில் கலந்தது  நுரையீரல் வழியாக வெளியேறிவிடும்.மேலும் விவரம் வேண்டுவோர் கைசான் வியாதி(De compression sickness) பற்றி  இணையத்தில் காணலாம்.                                                                                                                                                     வள்ளலார்,மனுஷ்ய தரத்தினர், சாகாத்தலை என்னும் யோக வெப்பத்தை உருவாக்க அறிய மாட்டார்கள் என்று கூறி அவர்களும் விசார உஷ்ணத்தை உண்டுபண்ணும் வழிமுறையைப் பேருபதேசத்தில் விளக்கி யுள்ளார்.நிச்சயம் இது உபாயமாகுமே யன்றி உண்மையாகாது.இவ்விசார உஷணம் ஒருபோதும் மரணத்தைத் தடுக்காது.வேகாத காலாதிகளைக் கண்டு கொண்டு மெய்த்தொழில் புரிபவர்கள் மட்டும் இறையருளால் போகாப்புனல் அமுதமுண்டு மரணத்தை வெல்வார்கள். கொடி கட்டியது யோக முயற்சியில் சன்மார்க்கிகள் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தவே  ஆகும். கும்பக அழுத்தம் காரணமாக முதலில் வாசி இரத்தத்தில் கலக்கும். மூக்கருகே வைக்கப்படும் தவிடு கூட ஆடாமல் மெதுவாக ரேசகம் செய்தால் உடம்பிற்கு எந்த வகையிலும் கேடு ஏற்படாது.படிப்படியாக இரத்தத்தில் கலந்த வாசி,முடிவில் எலும்பிலும் கலக்கும்.  என்று எலும்புப் பகுதியில் வாசி உட்செலகிறதோ அன்றுதான் வாசி,வேகாக்காலாகித் தலைப்பகுதிற்குச் சென்று புருவ நடுவைத் திறக்கும்.வேகாக்கால்தான் தாரையை ஊதுவிக்கும்.குழந்தை பிறந்ததும் முலைப்பால் சுரப்பது எப்படியோ அப்படித்தான் தாரை ஊதுபவர்களின் மூளையில் போகாப்புனல் என்னும் அமுதம் சுரக்கும்.இது மட்டுமே மரணத்தைத் தடுக்கும்.நான் அடக்கத்துடன் தெளிவாகவே கூறுகிறேன். நான் சாகாக்கல்வியை நனகு கற்றவன்.நான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கும் விளக்குகிறேன்.  சிந்தையறியார் வெகுவாகத் தருக்கம் செய்யலாம்.  நீ,மரணத்தை வென்றாயா என வாதிடலாம். நான் சாகாக்கல்வி கற்றபடி உறுதியுடன் நிற்கிறேன். ஊருக்கு உபதேசிப்பது என் தொழில் அல்ல. வியாபார நோக்கமும் ஆகாது.நான் கடுமையாக யோக முயற்சி செய்கிறேன். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.மரணத்தை வெல்வது எளிய செயல் அல்ல.முயற்சி, மெய் வருத்தக் கூலிதரும்.      வணக்கம். வாழ்க.