Badhey Venkatesh
அருட்பா உரை நடை – விளக்கம்
அருட்பா உரை நடை – விளக்கம்
BG Venkatesh / December 3, 2017
அருட்பா உரை நடை – விளக்கம்

தயா வடிவம் – பக்கம் 318

இந்த நெற்றியிலுள்ள நடுக்கண்ணுக்கு ஒரு கதவும் பூட்டும் இருக்கின்றது – அந்தக் கதவின் பூட்டை அருளென்ற திற்வுகோலை கொண்டு திறக்க வேண்டும்
அருளென்பது பெருந்தயவு
ஆக தயவே வடிவமாக இருக்க வேண்டும்

இங்கு குறிக்கப்பெறும் கதவு – வள்ளல் அருட்பாவில் பாடும் – ” புருவக்கண் பூட்டு ”

இந்த பூட்டு எப்படித் திறக்கும் எனில் , கண்ணில் இருக்கும் திருவடிகள் கொண்டு தான் திறக்க முடியும் – அதுக்கு புருவ மத்திக்கு கண்மணிகள் மேலேற வேண்டும்

கண்மணிகள் அருளினாலல்லாது மேலேறாது – அதனால் , இதை மனதில் கொண்டு , ” அருளினால் தான் அந்தக்கதவை திறக்க வேண்டும் என உண்மையை புறங்கவியாது மறைத்துக் கூறிவிட்டார் ”

இந்த புருவக்கண் பூட்டு சாதனம் மூலம் திறக்கப்பெற வேண்டும் என்பது உண்மை – அதுக்கு அருள் உதவி செய்யும் – இது தான் அருளின் கடமை – உதவியும் கூட

ஆனால் நம் சன்மார்க்கத்தவர் ஜீவ காருண்ணியம் என்னும் சோறு போடுதல் மூலம் முடியும் என்று நினைந்து உள்ளனர்

” இந்த கதவு திறக்கப்பெற்றுத் தான் பெருமாள் வைகுண்ட ஏகாதசி அன்று வெளியே வருகிறார்
அது சொர்க்க வாஸல் ஆகும் ”

வள்ளல் பெருமான் ” சமய மதங்கள் சன்மார்க்கத்துக்கு அன்னியமல்ல – அனன்னியம்” என இதன் அடிப்படையில்

வைத்துக்கூறினார்

இதை சன்மார்க்கத்தவர் புரிந்து கொள்ளாமலே ஸமய மதங்களை இழிவுபடுத்துதல் வேண்டாத வேலை – அனாவசியம் என்பதை புரிந்து கொள்ளல் அவசியம்

வள்ளல் நிறைய விஷயங்களை இலைமறை காயாக கூறியுள்ளார் – நாம் தான் சரியாக பொருள் எடுக்க வேண்டும் – எடுக்கத் தவறினால் நமக்குத்தான் நட்டம் – காலம் – பொன் உட்பட

சன்மார்க்க உலகில் ஆராய்ச்சி என்பதே இல்லை – அதிருந்தால் தான் உண்மை கண்டுபிடிக்க முடியும்
ஆதலால் செய்வீர் சன்மார்க்கத்தீர்

வெங்கடேஷ்

 

IMG-20210507-WA0003.jpg

IMG-20210507-WA0003.jpg