அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எனவே முகத்தில் அழகு வேண்டுமானால் அகத்தில் அழகைக் கூட்டுங்கள். அகத்தில் அழகைக் கூட்ட அன்பினை அங்கே கொட்டி வையுங்கள். அன்பில் நிறையும் அகம்; அப்போது பண்பாய் நிறையும் சுகம். அந்த சுகம் தரும் ஒரு சுகானந்தம். அந்த சுகானந்தம் உங்கள் உடலில் ஒரு சுடர் ஒளியைப் பரப்பும். அந்தச் சுடர் ஒளி உங்கள் முகத்திலே தன் முழு ஒளியைக் காட்டும். அப்போதுதான் அகத்தின் அழகு பிரதிபலிக்கிறது. எனவே நண்பர்களே, எப்போதும் அன்பாக இருங்கள். அன்பினை நிறைக்கவே அகிலத்தில் நாம் அவதரித்தோம். அன்பல்லால் அடைவது ஒன்று இல்லை. அன்பு அளவிலாது பெருகுங்கால் கருணை யாகி, கருணையின் கனிவு தயவாகி, தயவின் மிகுதி அருளாகி, அருளின் பெருக்கம் ஆனந்தமாகி, மரணமிலாப் பெருவாழ்வில் எப்போதும் திழைப்பதாகி திருநடனம் புரிகின்றது. அன்பே சிவம்! அன்பே சுகம்! அன்பே அருள்! அன்பே ஜோதி!
அருட் பெரும் ஜோதி! அருட் பெரும் ஜோதி! தனிப் பெரும் கருணை! அருட் பெரும் ஜோதி.
பாலு குருசுவாமி.