Balu Guruswamy
மங்களம் அருள்க, மனமே!

மங்களம் அருள்க, மனமே,

எனக்கு நீ

மங்களம் அருள்க!


சங்கடம் கொணர்வதே

உன் சாகசமாய்ப் போனது.

சங்கடம் துறக்க

இங்கனம் அருள்க!

சர்வமும் துறக்க

சடுதியில் அருள்க!

சர்ச்சையும் இச்சையும்

மிச்சமின்றி அகன்று

உச்சமாம் என்னிலை

உடனே அடைய

மங்களம் அருள்க,

மனமே நீ எனக்கு

மங்களம் அருள்க!


என்னிலை எய்துதல்

எனக்கு மங்களம்!

உள்ளொளி உணர்தல்

உரிய மங்களம்!


எனவே, மனமே எனக்கு நீ,

மங்களம் அருள்க!


எங்கெங்கோ அலைந்து

அமைதியை அடையாது

அகசுகம் அறியாது

நிலையாக தன்னில் நில்லாது

பொல்லாத வினைகளில் என்னை

வீணாக்கியது, போதும்;

இப்போதே மங்களம் அருள்க!

இக்கணம் மனமே,

புறப்போக்குகளை விடுத்து,

என்னகத்திலே புகுவாய்

ஆத்மனில் நிறைவாய்!

ஆத்மனின் நிறைவில்

ஆனந்தத்தில் உறைவாய்!


எனவே, மனமே எனக்கு நீ,

மங்களம் அருள்க!


பாலு குருசுவாமி.

doraisingam5
I am Doraisingam from malaysia i would like to thankyou (Mr Balu Guruswamy) and million thanks from bottom of my heart to you once again for revealing about Arutperunjothi knowledge regarding All 8 ITEMS. In bottom of my heart i also thanks to Thiru Vallalar Ramalingaswamigal and Arutperunjothi has made you to reveal in facebook.
I strongly believe may one day Arutperunjothi his divine light will be reveal to you by grace of Vallalar Ramalingaswamygal.
Million Millon Million thanks Ella uyirgalum inbutru Valga, Valga Vaiyagam, Valga Arutperunjothi.
Regards
A Doraisingam
H/p 012-2226744
Monday, August 13, 2012 at 02:18 am by doraisingam5